Tuesday, October 26, 2010

பூக்களின் தாகம்

ஊடலின் இடையே வரும்
சண்டைகள் தான் காதல்
தேன் சேர்க்கும் தேனிக்கள் ...

இங்கே விந்தை என்னவென்றால்
பூக்கள் நமக்குத்தான் இந்த
தேனிக்கள் தேன் மல்கும் ...

முடிவுகள்

காதலென்பது முடிவுகள் அல்ல
இரண்டு இதயங்களுக்குள் முடிச்சுகள்

எனவே இந்தக் கவியைக்குட
முற்றுப் புள்ளி இன்றி முடிக்கிறேன் ...

Monday, October 25, 2010

மீளாமல்

கவி எழுத
காதலின் ஆழம் தொடத்
தெரிந்த கவிங்கனுக்கு
மீளத் தெரியாமல்
முடிந்து போகிறான் ...
வரிகளின் முற்றுப் புள்ளிகளோடு ...

கா(சு)(கடவுள்)

மனிதனுக்கும்
கடவுளுக்கும்
இடையே உள்ள
தூரத்தை நிர்ணயிப்பது
பணமாகி போன கழி ...
சிறப்பு தரிசனக் கட்டணம்
எனக்குச் சொன்ன ஞானப்பாடம்
 

தொல்விவரி(லி)

காதலியின் காதலுக்கு
வரிகள் எழுதுகையில் தான்
அழகான வரிகளிலும்
தோற்கிறான் கவிஞன் ...

Tuesday, October 19, 2010

நிஜம் நிறைவேறுமா?

பெப்ரவரி அன்னைக்கு
30 ஆம் குழந்தை பிறக்கும்
என்பது உண்மையானால்
உன்னை நான் மறப்பேன்
என்பதும் நடக்கும் ...

தமிழின் ஆகாயத் தாமரையும்
அக்ஷயப் பத்திரமும் நிஜமகுமானால்
நான் உன்னை மறப்பதும் சாத்தியமாகும் ...

Friday, October 8, 2010

அக்னி

சுடுபவன்
சுட பயண்பட்டவன்
இவன் தேடுவது
மனித நலனையா ? நலிவையா ?

தேர்வமுதம்

கசக்கும் மருந்தும்
தேர்வும் ஒன்றுதான் ...

தொண்டை குழியில்
நின்றுகொண்டு கொடுமை
படுத்தும் ...

Friday, October 1, 2010

வலைப்பூக்கள்

நங்கள் புத்தகப்பூச்சிகள் இல்லை,
பூவில் தேன் தேடும் பூக்கள் ...
வலையில் விரும்பி விழும் மீன்கள் ...
தேனும் நஞ்சாகக் கூடாது ...
வளையும் கொலை செய்யக்கூடாது ...
வேண்டுகிறேன் இறைவா நினையே ...

மறுபரிசிலனை

மறுபதிப்புகளில் தவறுகளை
திருத்திக் கொள்ள ...
வாழ்கை புத்தகமும் அல்ல
காதல் பெரிய பிழையும் அல்ல ...
இவை எல்லாம்,
புரிந்தும் ஏன் மறுக்கிறாய் ...
புதிராய் என்னை குழப்புகிறாய் ...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்