Tuesday, April 12, 2011

இந்தத் தேர்தல் - மாற்றம் கொண்டு வருமா?


மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பாம்...
தீர்ப்பை சொல்லப்  போவது
ஓட்டுக் காகிதமா...பண நோட்டுக் காகிதமா 
இதோ முடிவு நெருங்குகிறது

தன் தலைஎழுத்தை
மாற்றத் தெரியா
ஆறறிவு மாக்கள் கூட்டம்
நாட்டின் தலைஎழுத்தை மாற்ற

200 ரூபாயில்
உயிர் நிகர் உரிமையை
மக்களாட்சி என்பதற்கு
எஞ்சி இருக்கும் ஒரே சாட்சியம்
ஓட்டுரிமையை
வியாபராம் செய்யும் மனசாட்சி
(பெரிய மீனை பிடிக்க போடும் சிறிய  மீன்கள் )

49 -O ஆம் , அசோகச் சின்னமாம்
சோம்பேறி அரசியல்வாதிக்கு
படுத்துறங்கும் பஞ்சனையை
பணத்தால் எவன் தருவானோ
அவன் கட்சி கூட்டணியில் ஒரு உல்லாசப் பயணம்
பின்பு பணம் கொஞ்சம் குரையையிலே
அவனையே எதிர்த்து ஊர் போராட்ட முழக்கம்
பணக் காகித அனணக்குள்ளே
மனித மனம் கட்டுண்ட விந்தை என
தேர்தலும் ஓட்டும் விளையாட்டகிப் போன
அவலம்

என் முதல் ஒட்டு இந்த ஆண்டு
மாற்றம் கொண்டு வரும் இந்த தேர்தல்
என்ற நம்பிக்கையுடன்







Saturday, April 9, 2011

பாவி

உலகில் மிகப்
பெரிய பாவம்
எது தெரியுமா...
தாயிடம் இருந்த சேயை பிரிப்பதல்ல
இதோ உயிர் உடலகிப் போன
நட்பை பிரிப்பது தான்...
அப்படி பார்க்கையில் இதோ
இந்த காலம் தான்
உலகின் மிகப் பெரிய
பாவி 

அண்ணா ஹசாரே...சேற்றில் முளைத்த செந்தாமரை

 
பசி மறக்காமல்,
தினம் தினம்
மக்களின் உயிர் குடிக்கும்
மக்களாட்சி வாரிசு
லஞ்சம் 

இங்கே அன்னம் மறந்த ஓர் அண்ணா

உவமைகளாய் வந்த
சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை
தீபம் கீழ் நோக்கி எரிவதில்லை
ஆனால்...
மெல்ல எங்கள் அரசியலின்
போக்கு திசை மாறுகிறது...
விசை மாறுகிறது ...
மக்களுக்காய்

Thursday, April 7, 2011

தேர்தல்


நெல்ல விதைச்சு அள்ளிபுடலாம்
ஆனா விதைச்சு புட்ட சொல்ல
அள்ள முடியாதம்...
எவன் சொன்னான் முடனே...

பார் இந்த
தமிழக அரசியல் அறுவடைகளை...

பொய் பேசும் சொல் விதையாக்கி
அதற்கு நம்பேய் உடலை உரமாக்கி
இலவசம் என்னும் கைகொண்டு
இலவசமாய் பறித்துப் போகிறான்
நம் சுவாசத்தை ... சுதந்திரத்தை...
இதற்கு பெயர் மக்களாட்சி

Tuesday, April 5, 2011

Dedicated to Mepco EEE A 2007-11

ஏழு வண்ணங்கள் சேராமல்
வானவில் ஏது?
65 உயிர் ஓருடலில் சேராமல்
இந்த இனிமை நினைவெது    

சுகமான நினைவுதான்
இருந்தும் சுமையாக இருக்குது...

தாய் கருவை பிரிந்து
தன்னுலகை காண வந்த
சேயை போல நானும்
இன்று பிரிகிறேன் என் நட்பினை
இதோ சுயநல உலகை காண...


வரும் நாளில்
என் செல்லமகன்
முத்தமிட்டு பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சொன்னாலும்
மை கலந்து குளிப்பாட்டி...
செல்ல அடியால் புத்துயிர்
ஊட்டிய அந்த 12 மணிக்
கொண்டாட்டங்கள் திரும்பிடுமா?

நுனி நக்குத் தொடங்கி
அடித் தொண்டை வரை
சுகம் பரப்ப...அருமை மனைவி
சமைத்துப் போட்டாலும்...
ஒரேத் தட்டில் பாய்ந்து உண்ட
விடுதி பூரி போல் சுவைத் தருமா?

புன்னகைக்கு ஒன்று
கண்ணீர்க்கு ஒன்றை
நிறம் மாறி பகிர்ந்து கொள்ள 
துணை நிற்கும் என் தோழமை போல்
அவன் தோள், மடி போல் 
சொர்கத்து பஞ்சணையும் சுகம் தருமோ?  

கிறுக்கல்களை ஓவியம் என்றும்
புலம்பல்களை கவிதைகள் என்றும்
முனங்கல்கள் எல்லாம் பாடல்கள் என்றும்
பொய் சொல்லியாவது எனை
ஊக்குவிக்க இனி எவன் வருவான்?

வலிதந்த முதல் காதல்,
வழிதந்த CTS ,
வாழ்கை சொன்ன தோழமை,
உயிர் இல்லாமல் உடலை வாழச்
சொன்ன காலம்
கண்ணீரால் நட்புக்கு புது
உயிராசனம் எழுதிய farewell என
மெப்கோ ஒரு விசித்திர அனுபவம்....

Friday, March 18, 2011

உயிர் 66

கால்கள் எழுதிய கோலங்களை
அளிக்கும் கடலலை பார்த்திருப்பிர்...

இங்கே ஒரு புதுவிதம்...
முழுக்கிட எழும்பிடும் நினைவலை...
எழுதுது கோடி கோடி பக்கமாய்
கண்ணீர் மைகளால் கைகள் இல்லாமலே...

நட்பே நானும் மந்திரவாதிதான்
இங்கே என் உயிர் 66
துகளாய் சிதறி கிடக்குது...
காலனாய் வரும் காலத்தின்
தகிரியம் பார்த்தாயோ?
தோற்கும் என்றும் தெரிந்து கரை ஏறத் துடிக்கும்
கடலலை கனவுகள்....

Tuesday, March 8, 2011

மாதராய் பிறந்திட மாதவம் செய்தவளே

அம்பொன்று குறியடைய
நானொன்று தேவை
ஆண்மகனே நீ
ஜெயமடைய பெண்ணொன்று தேவை...

+ கருப்பையில் பாரம்
சுமந்து பூமிக்கு உவமையானால் 
+ தமக்கையாய், தங்கையை 
விட்டில் ஒரு தோழி நகலாய்
வலம் வந்தால் 
+ காதலி என்றொரு பெயரில்
எனை இரண்டமொருமுறை 
ஈன்றேண்டுத்தால் 

இவைகள் எல்லாம் முடியும்
உறவுகள்...

எதிர்பார்ப்பு இல்லாமல்
பாலை தித்திக்க வைக்கும்
நெருப்பு போல... 
என் வயதுத் தாயாய்,
அதட்டாத தந்தையாய்,
மூளையில் இருள் விளக்கும் 
புது அறிவாய்...
என்னை நிதம் காக்கும் தோழி...
நம்மை காலன் நினைத்தாலும்
பிரிக்க முடியாதடி...

Thursday, March 3, 2011

உலக அகரம்


அ – அரசியல்...
தேசத்து புனித
நதிபோலிது...
(மா)க்களின் ஆறாம்அறிவு
நாசமாக்கியது இதை...
 

ஆ – ஆன்மிகம்
கோயிலையே
மறைக்கும் அளவு
சாமியாரைப் பற்றிய
விளம்பரப் பலகை பார்கையிலே...

பிள்ளையாரே எலியிலே
போகையிலே...பூசாரிக்கு ____ கேக்குதோ 
என்பது நியாபகம் வந்தது..

இல்லை கீதை சொன்ன
மனித உருவில்
கடவுள் அவதறிப்பான்
என்பதை தவறாய்
உணர்ந்தனரோ...

 இ – இடைவெளி
ஆக்குவதோர் இயந்திரம்
ஆட்டி வைப்பதோர்
இயந்திரம்(உயிருள்ள!)...
இரண்டுக்கும் நூலளவு
இடைவெளி...ஆறாம்அறிவு


ஈ – ஈகை
தர்மம் தலைகாக்கும்
இது கலியுகத்திற்குத் தகா!
இங்கே தர்மம் செய்தவனும்
ஒருநாள் யாசகம் கேட்பான்...
இதோ வாழ இடம் கொடுத்த
பூமி உயிர் யாசகம் கேட்பதுபோல்...

உ – உண்டியல்
திருப்திபடாத ஒரே
  திருவோடு...
  மனிதன் கடவுளை
 பிச்சைகாரனாக்கி
 கையில் கொடுத்த
  உண்டியல்...
ஊ – ஊணம்
        அநீதியை எதிர்த்துப் பேசா நா...
        நீதி துடிதுடித்து சாக காணும் கண்...
        தீய பாதையில் அடியிடும் கால்...
        அக்கிரமத்திற்கு மடுக்கும் செவி...
        உலகத்தை சிதைக்கும் கரம்...
        உண்மையை சிந்திக்காத மூளை...

எ – எட்டு
 உலகில்...
 மனிதம்-அமைதி-நட்பு-தாய்மை
நன்மையை விளையும்
        நா-சிந்தணை-கல்வி-செல்வம் ஆகிய
        எட்டா கனிகள் எட்டை எட்ட முயல்.



 ஏ – ஏலம்
நாகரிக உலகம் ஒரு
விசித்திர சந்தை...
இங்கே மனிதன் தன்னைத்தானே
கொத்தடிமையாய் ஏலமிடுகிறான்...


 
ஒ – ஒவ்வா!
பொது இடத்திலே உண்மை (அரசியல்) பேச,
தாயை மழலையால் அம்மா என அழைக்க,
பெண்களில் சிதையையும் ஆண்களில்
ராமனையும் தேட ஒவ்வா கழியுகமிது...


ஓ – ஓட்டம்
வாழ்க்கையுமோர் ஓட்டம் தான்
இங்கே உண்மையாண வெற்றிக்கு
எல்லை கோட்டை தாண்டிதான்
வேகம் மேலும் அதிகரிக்கனும்...



ஐ – ஐயம்
இவன் காதலின் 
காதலின் மெய் பொருள்
உணர்வான், எந்நாள்?
இளமையின் உண்மை
இலக்குணர் நாளென்ரோ?
ஔ – ஔவை
ஔவையை போல
கன்னியிலேயே கிழவியாகிருப்பாளோ
தமிழண்ணை...அதன் விரைவில் அவளை
மரணம் துரத்துகிறது...

 
முற்றுப்புள்ளியாய்
மூன்று புள்ளி வந்தது கவிக்கு...
என் கவி முடிகிறதென்றால்
அவள் சிரிக்கவில்லை என்று
பொருள்...

Tuesday, March 1, 2011

காலமும் நட்பும்

கரமுலகில் நட்பு கொண்ட
விரல்களில் பிரிவிருந்தலும்
தூரம் அதிகமில்லை...
நண்பர்கள் நாம் 
உயரங்கள் மாறா
விரல்கள்...நம்மை பிரிக்க
காலங்கள் என்ன காலனாலும் 
முடியாது...

 

நிஜத்தில் ஓர் இதிகாசம்

நானும் ராமன்தான்
எனக்கும் இதிகாச ராமனுக்கும்
உள்ள வித்தியாசம்...
இங்கே சீதை தான் முறிக்கிறாள்
வில்லை இல்லை என் நெஞ்சை
  

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்