Tuesday, October 25, 2011

முத்த பாய்ச்சல்


வெட்டவெளி சாலையோடு 
நூறு மைல் வேகத்தில் 
மோட்டார் குதிரையில் 
சாரல் மழையோடு
காற்று ஸ்பர்சம் தீண்ட 
போய் பாருங்கள் 

காதலியின் ஒற்றை 
முத்த சுகம் அது தரும்.

Sunday, October 23, 2011

மனிதப் பூச்சிகள்

இதன் நெருப்போடு
தன் மூத்தோன்
பலரை பலிகொடுத்தும்
விளக்கோடு சுகம் தேடும்
விட்டில்கள் போல

உலகம் தொடங்கியது தொட்டு
பலரை பலிவாங்கிய
காதலிடம் சுகம் தேடும்
இந்த மனிதப் பூச்சிகள்

அதில் நானும் ஒருவனாய் ... 

Saturday, October 15, 2011

நிறைவெறுமை

உன்
எண்ணை சுமக்காத

உன்
குறுஞ்செய்தி...
அழைப்பு
பெறாத
எனது கைப்பேசியின்

உயிர் நிறைந்திருந்தும்
மரணித்த பிணமே...
உன் காதலைப் பெறாத
என்னைப் போல் 

Thursday, October 13, 2011

பூமியை வாழவிடு



தலைப்பை படித்ததும்
நவீன இளைஞனின்
உளத்தில் வடிந்த வரிகள்
நடைமுறை வடித்த வரிகள்

நாங்கள் பெற்றத் தாய்க்கு
விசமூட்டிவிட்டு
அவள் முலையில் பால் தேடும்
மூடர்கள் ... நங்கள்
எங்கே இயல் உரத்தால்
பூமியை வாழவிடுவோம்

என் நாவு மட்டுமல்ல
என் ஏழு தலைமுறையும்
சுவைக்க சத்தான உணவு வேண்டும்
ஆனால் என் விளை நிலங்கள்
வீடு மனையாகும் ... நாங்கள்
எங்கே பசுமையாய்
பூமியை வாழவிடுவோம்

கோவின் காவலுக்கு
ஒசான் போர்வை போதவில்லை
என்று நினைத்தேனோ என்னவோ
இதோ அலைபேசி அலைக் கற்றையால்
போர்வை போர்த்தி
வாழ வைக்கிறேன் பூமியை

தாய் முகம் பருவேன்று எண்ணி
பறைகள் இருக்கும் இடம் எல்லாம்
பட்டாசுகள் பதுக்குகிறேன்
தாய் நெஞ்சில் முள்ளேன்று
நினைத்தேனோ என்னவோ
காணும் மரங்களெல்லாம் வேரறுத்தேன்

பூமியையும் புகைக்க வைத்தோம்
என் தொழிற்சாலை புகைப்போக்கியால்
போதாதென்று வராத போருக்கு
தகாத ஆயுதம் சோதனை செய்கிறோம்
தாய் கருவறைக்குள்
நாங்கள் எங்கே வாழவிடுவோம்

பூமியை நிம்மதியாய்


இவைகள் எவர் இதயமும்
நிந்திக்க எழுதியதல்ல

மூளை கொஞ்சம் சிந்திக்க எழுதியது 


P.S. -
"This lines won a consolation prize at Suryab FM's poetry competition on Vairamuthu's Birthday"

பி.கு. -
"இந்த வரிகள் சூரியன் எப்.எம். கவிபேரரசு வைரமுத்து பிறந்தநாளன்று நடத்திய கவிதைப் போட்டியில் அறுதல் பரிசை வென்றது "

Tuesday, October 11, 2011

ஜனநாயகம்

தன் தலைஎழுத்தை
மாற்ற ஒரு நாள் கூட
கையை மையில் நனைக்காத
மூடன் இவன்

முகப்புத்தக சுவரோடு
அடுத்த SUPER STAR
எவன் என்று
போட்டி போடுகிறான் வோட்டு போட

என்று மாறும் இந்த மூடத் தனம்

Sunday, October 9, 2011

அறிவியல் பிரம்மன்


இவன் பூமியில் 
தொடர்ந்தால்
தனக்கு போட்டியை 
மின்னணுக் கடவுளும் 
சிமுலேடேட் கருணையும் 
படைத்திடுவனோ 
என்று பயந்தான் போல இறைவன் 

இசை கடலேன்றால் 
அந்தக் கடலை 
ஒவ்வரு ரசிகனின் 
கைகளுக்குள்ளும் 
அடைத்த அறிவு இவன் 

புத்தி கொடுத்தவன் பிரம்மனென்றால்
கணினிக்கு புத்தி 
கொடுத்தவன் இவன் 
அறிவியல் பிரம்மன் என்பது 
மிகையல்ல 

காதலியின் இதழ் இடை 
சீண்டி விளையாடிய விரல்களை 
கைபேசியின் வசீகரம் உறசவைத்து 
காதலர்கள் சாபம் 
அள்ளிக் கட்டிக் கொண்டவன் 

பகத் சிங்கின் மரணத்தில் 
வீரம் அநாதை ஆனது போல்  
ஐன்ஸ்டீனை அடுத்து 
இவனது மரணத்தில் 
படைப்பாற்றல்
இரண்டாம் முறை 
அநாதை ஆனது 

Dedicated to STEVE JOBS. Nothing compensate his loss. Designed by Jam











Saturday, October 8, 2011

மாற்றம்

கொடிய விஷம்
சயனைடு
என்று என் புத்தகம்
சொன்னதை

காதலென்று
ஏன் நீ மாற்றிப்
போனாய் ?

Wednesday, October 5, 2011

ஆக்கம்

மனிதன் கடவுளாகிறான்
தர்மம் செய்கையில்

கடவுளும் பிச்சைகாரணாகிறான்
கோவில்களின் பார்வைக் கட்டணங்களால்


Monday, October 3, 2011

மயூர நாட்டியம்

ஒரு அங்குல
மயிலொன்று தொகை விரித்து
அழகை பரப்பிய மாயம்

அந்த சின்ன விழியா(ல்)ள் 
அவள் புருவம் சுளித்து
என்னைப் பார்க்கையிலே

Saturday, October 1, 2011

தெ(ய்வ)ரியும்

கடவுளையும்
கல்லென்று
நாத்திகம் பேசித் திரிந்தவனுக்கு

நெருக்கடியான சமயத்தில்
கல்லும் கடவுளாய்த் தெரியும்

தேர்வின் நெருக்கடியில்
புத்தகம் தேடும் மாணவனின்
தேடல் போல ...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்