Wednesday, November 24, 2010

செய்தி தாள்

இவர்களின் ஈனச்
செயலை செய்தியாக்க...
எனக்கு கரும்புள்ளி
செம்புள்ளி குத்தித்
தண்டனை ...

Sunday, November 21, 2010

சரியா? தவறா?

எதுவுமே!
திறக்கப்படும் வரைதான்...
திறக்கப்பட்டால்
ரகசியமேதும் இல்லை ...
தவறேதும் இல்லை ...

இருந்தாலும் தவறுகள் கூட 
ஒன்று கசந்துவிடும் ...
இல்லை திகட்டிவிடும் ...

அரைத் தாசிகள்

உலகம் மொத்தத்தின்
அர்த்தம் சொன்னக் காதலின்
அர்த்தம் தெரியாதவர்களுக்கு ...
கண்களின் எல்லையில்
காத்து நின்ற காதல் ...
இன்று காமத்தில் ஆழ்த்தும்
அரசனாகிப் போனது ...


இப்படி அர்த்தம் தெரியாத
மூடர்கள்(காதலர்கள்) ...
மனதளவுத் தாசிகள் தாமே ?

பாமரக் காதல்

நான்
எழுதப் படிக்கத்
தெரியாதவன்தான்...
நானே ஒருக்
கவிதை படித்தேன் ...
உனை நோக்கிய நொடியில் ...

Real Wireless...எல்லைஇல்லாதது

இணைப்பில்லா முறையில்
செய்திகளை பரிமாறுவதில்
கணிப்பொறிகளையும் மிஞ்சிவிட்டார்கள் 

காதல் பொறியில்
சிக்கிக்கொண்ட காதலர்கள் ...

Saturday, November 20, 2010

அறிவியல் காதல்

நியூட்டன் மட்டும்
காதலித்து இருந்தால்...

கண்ணீரின் விழ்ச்சி
பார்த்துதான் புவி விசையை
கண்டறிந்திருப்பான்...
ஆப்பிளை பார்த்து அல்ல ...

நீ

"நீ" என்ற
ஒரு உயிர்மெய்யைத்
தொலைத்துவிட்டு ...

"நான்" என்ற
ஒரு நூல் மொத்தமும்
பொருளற்றுப் போனதடி ...

தேய்வு

உன்னை தேடித்தேடி
என் விழிகள் அலைவது
என்னவோ
அந்த, ஒரு அங்குலச்
சாலையில் தான்...
அதற்குள்ளாகவே 
அதன் பாதமணிகள்
தேய்ந்து தோற்கிறதே ...
உனைக் காண முடியாமல் 

தொடர் கண்ணீர்

இல்லத்தரசிகள்
அழுவதை விட்டுவிட்டார்கள்...
நெடுங் கதைக்கு
அழுது அழுது கண்ணீர்
தீர்ந்து போனதால்...

மறுபிறப்பு

இப்பிறப்பில்
தவறு செய்தவனை
தண்டிக்க முடியாத
கடவுளின் இயலாமை தான்
மனிதனின் மறுபிறப்பு ...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்