Thursday, June 30, 2011

இதயச் சிறை

சிறை இருக்க
ஆசைப்படும்
ஒரே ஜீவன்

அவளின் சுவாசக்
காற்று

ஏனெனில்
அடைக்கும் சிறை
அவளது இதயமல்லவா?

நானும் காற்றை போல !

சுகமாய் கரைந்தேன்

புழுதிக் காற்றை
எதிர்த்து நின்ற
மணல குவியல் போலே
உந்தன்
கண் பார்வை எதிர் நோக்கி
பார்வை மெல்ல கடக்கையிலே
சுகமாய் கரைந்து போனேன் 

தேய்வு!


பெண்மையின் 
விரல் தூரிகை தீட்டிய 
திலகமும் ஓர்
தொன்மையான ஓவியம் தான் 

அதனால் தான் 
பெண் நெற்றி சித்தன்ன வாசல்களில் 
அவைகள் தேய்ந்து கொண்டே வருகிறது 

பெண் நெற்றி வானில் 
நாகரிக அமாவாசை 
திலக நிலா தொலைந்து போனது 

சூட்சுமம்

உன் கூந்தல்
ஏறா மலர்கள்
வாடி உதிர்வதிலும்
ஒரு சூட்சுமம் உள்ளதடி

உன் பாதத்தில்
மிதி படலாமல்லவா!

நசிவு

பேருந்தின் நெரிசலே!

உனக்கோர் நன்றி.

உன் மணிநேர
பயணத்தில்
சாதி மத பேதங்கள்
நசிந்து போகின்றன 

Monday, June 27, 2011

மெய்யே!

ரோஜாவின் பாதம்
முள்ளென்று
கேள்விப்பட்டேன்

அடியே ரோஜாவே!
உந்தன் பாத மென்மை
மெய் ரோஜாவயையே
தோற்கடிப்பது எப்படி?

பிழையா? அழகின் இலையா?

ஸ்வர்ண சிலையின்
பிழையும் அழகே!

உந்தன் பருக்கள்
கண்டு நான் உணர்ந்தேன் 

Saturday, June 25, 2011

தூக்கான தூண்டில் - ராமேஸ்வரக் கடலுக்குள் கரைந்த ஓசை


செய்த பாவம் 
துரத்தி வந்து 
பலனை தரும் அல்லவா?

ஒருச்சான் வயிறு 
கண்டு பிடித்த பசிக்காய் 
வலை எடுத்து வீசி 
தினம் சிறு மீனின் உயிரை 
ருசிபார்த்த பாவியல்லவா நான் 

மீனுக்கும் எனக்கும் 
ஒரே வித்யாசம் 
அது மாண்டதோ
வீசிய வலையால் 
நான் சாகப் போவதோ 
பேசும் தோட்டாவால் 

என் வாழ்க்கை 
என்னும் கபடி தினம் அரங்கேருது 
கடல் தாயே உன் மடி மீது 
என் எதிரி சகோதரன் 
எல்லைக் கோட்டை கடந்தும் 
வெற்றி மட்டுமே பெறுகிறான் 
நான் இன்னும் களமே 
இறங்கவில்லை ... தோல்வி தேடி வருவதேனோ?

ஆட்சிகள் சுழற்றிவிட்ட 
காசாய் தினம் மாற...
வரிப் பணத்தை 
அடுக்கி உச்சம் எட்டுவதோ 
அரசியலே உங்கள் வாழ்க்கை மட்டும் தான் 

நாங்கள் 
கொச்சை மீன் வாசம் மணக்க 
பழஞ் சோறும் வீசியக் கருவாடும்
தினம் சுவைத்து உடம்பை வளர்ப்பது
என் குழந்தை புசிக்கவே அன்றி 
அந்த தோட்டாவின் பசிப் போக்க அல்ல 

தெரியும் இதற்கும் 
உங்களிடம் நான்
பெறப்போவது உங்கள் மௌனம் என்று 
இந்த மௌனதிலலேயே
எங்கள் மரணச் சான்றிதழ்களில் 
கையெழுத்திடுங்கள் 



ஆசிரியப் பா

ஆசான் வசையால்
கொஞ்சம் கசங்கிய
மாணவத் துகிலே
மாசு களை!
மெய்யுணர் !

தலையோடு சுத்தியின்
முத்தம்கொள்ளாமல்
ஆணிகள் உயரத்தில்
இடம் கொள்ளாது

மண்ணின் சுமை மேலே
போர்த்திக்கொள்ளாமல்
விதைகள் விருட்சமாகாது

தினம் நீளும்
உன் ஆசான்
வசைகள் எல்லாமே
பின்னால் காதுக்குள் நிறையும்
புகளின் முன் நோட்டம்

இதை மனதில் கொள்
என்றும் எதுவும் கசப்பாய் தெரியாது

Its dedicated to Mr.Shenbagaraj AP/IT Dept. MSEC 2011 and My sweetest friend ever. Thank you sir! 

Friday, June 24, 2011

அநியாயம்

உதடுக்குள் வார்த்தையை
சிறை வைத்து

என் உயிரை தூக்கி
தூக்கிலிட்டு

இப்படி என் கண்கள்
செய்த தவறில்
மனம் விழ்ந்து மயங்கியக்
குற்றத்திற்கு
தண்டனை என்ன
மற்றவர்க்கோ?

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்