Friday, September 30, 2011

அரசியல் சந்தை

தெருவோரம்
கூவி விற்கும்
வியாபாரிக்கும்
தமிழக அரசியல்
பீரங்கிகளுக்கும்
நான் பெரிதாய் கண்ட
வித்தியாசம்

முதாலாமவன்
வயிட்றிற்காய் பொருட்கள் விற்கிறான்
இரண்டாமவன்
பொருட்களுக்காய் தன்னை விற்கிறான்

பரிசுத்த ஆவி இவன்
அவன் உழைப்பில் உயர்ந்தோன்(உழல் பட்டியலின் உச்சத்தில் )
சுரண்டிக் கொண்டிருக்கிறான்
எஞ்சி இருக்கும்
ஏழையின் ஆவியை 

Thursday, September 29, 2011

தியாகம்

நெரிசலான பேருந்தில்
பயணம் முடித்த
பயணி...
பயண முடிவில்
பேருந்தை பார்க்கும்
வெற்றுப் பார்வை

போல தானடி
நீ என் மீது வீசும்
முறைப்பும் ...

என் நினைவு
உன்னை அவ்வளவு
நேரிக்கிறதேன்றால் சொல்...
உன் நினைவைத்
தொலைக்க முடியாது
உடலில் நிலைக்கும்
உயிரைத் தொலைக்கிறேன்  

கா(ந்)த(விய)ல்

என் உன் இருதயமும்
எதிர் துருவம்
எளிதாய் ஈர்க்கப்பட்டேன்

அனால் கண்களோ
நேர் துருவம்
நீ நோக்கா நேரம்
உன்னை நோக்கி ஈர்க்கப்படும்
என் கண்கள்

நாம் எழுதுவோம்
புது அறிவியல்
அறியாமைத் தேவைப்படும்
காதலுக்கு 

Tuesday, September 27, 2011

இந்தியா - மாறாத நிறங்கள்


தூக்கத்தில் நிரப்பிய 
மழலையின்
வீட்டுப் பாட நோட்டுப் போல
பொத்தாம் பொதுவாய் ஒரு சாலை 

சுதந்திர தினமேன்றால் 
விடுமுறை மிட்டாய் 
என்பதை மட்டும் மறக்காமல்
மற்றதை மறந்த 

எட்டனாக்காய் 
வெயிலில் காயும் 
ஏழை வியாபாரியிடமும்
கூட்டத்தில் திணறும் 
நடத்துனனிடம் 
பெட்ரோல் விலையில்  நசுங்கும் 
பகிர்வு ஆட்டோக்காரணிடமும் 
சண்டைபோட்டு பிறான் 
உழலுக்காய் வரியாக்கும் 
அறியாமை 

தன்னால் உணர்வதே 
வலி என்றும் பசி என்றும் 
பிறான் வழியால் பசியால் 
துடிப்பதை வேடிக்கையாக்கும் 
சுயநலம் 

பசியால் குழந்தை 
துவண்டு போகித் துடிக்கும்
மாலையில் குழந்தை 
வீடு சேர்ந்தது தெரியாமல் 
கழுத்தோடு கத்தி
வைத்து ஒருவன் நெரிக்கும் வரை
வீட்டின் நடமாட்டம் உனாராமல் 
(ஒற்றுமையாய் 
இருக்கும் உறவுகளை பிரிக்கும்)
தொடர்கதையில் முழ்கும் 
(50% ஆண்கள் 50% பெண்கள் )
மாக்கள் 

அன்பும் பண்பும் அளவான அழகும் 
தேட வேண்டிய திருமண வேட்டைகள்
விலை பெறா தங்கம் 
ஏமாற்றும் வியாபாரம் ஆக்கிய
ஆசை 

இப்படி மூவண்ணத்தின்
கரையை கோடி கோடி 
(மாற்றக் கூடிய)
மாற்ற முயலா 
அடையாளக் கரைகள்





தெரிவதில்லை

சென்னையின் பயணத்தையே 
கூட்டமாய் நீ சாலை 
கடக்கையிலே ஸ்தம்பிக்க 
வைக்கும் மனிதக் கூட்டமே 

ஏன் இந்த தகிரியம் 
ஊழலை எதிர்த்து 
வர மறுக்குது 
 
காய்கறிக்காரணிடமும் 
சில்லரைக்குத் திண்டாடும் 
நடத்துனநிடமும்  
எட்டனாக்காய் வாதாடும்
அற்பப் பதரே ...

அங்கே உன் (கோமன)மான(மும் )
பறிபோவது ஏன் தெரிவதில்லை 

Saturday, September 24, 2011

நான் கடவுள் (?)


ஆறுகளையும் கடல்களையும்  
கரைகளுக்குள் கட்டிப்போட 
கடவுளால் தான் முடியுமென்றால் 

மனிதனும் கடவுளாகிறான்
இதோ குப்பை குவியல்களால் 
கரைகள் அமைத்து 

அழிக்கும் கடவுளிவன் 

காதல் தியானம்

மனம்
ஒரு முகமடைதல் 
தியானம் ஆகின் 

உன் ஒரு முகத்தை 
மட்டுமே சிந்திக்கும் 
நான் தியானத்தில் 
தலையானவன் 


Wednesday, September 21, 2011

வேண்டுமா வலி?

சென்னை சாலை நெரிசல்
புகையை பத்து நிமிடம்
சுவாசித்த நரகம் வேண்டுமா?

காதலை சொல்லாமல்
சுமக்கும் ஒவ்வொரு
நொடியும் தரும் அந்த வலி 

Tuesday, September 20, 2011

போதும் வேண்டாம்

தயவு செய்து
உன் சல்வார்
துப்பட்டாவை
தரை உரச விடாதே
கற்களும் உயிர்
கொள்ளும்

ஏற்கனவே
என் காதலுக்கு
சாதி மதங்கள் போட்டியாக
அவைகளும் பட்டியலில்
சேர்ந்துகொள்ளப் போகுது

Monday, September 19, 2011

அவனுக்கும் இது சவாலே

ஆஸ்கார் நாயகனுக்கும்
கடினம் ... காதல் தோல்வியின்
பின்னே சிரிப்பதைப போல்
நடிப்பது
நான் விதி விளக்கும் இல்லை  

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்