Monday, August 30, 2010

கண்ணீராய்…

கடல் மணல்
கோபுரமாய் நினைவினைக்
குவித்துவிட்டாள்
நெஞ்சின் அலைஅடித்துக் கரைக்க
நினைத்து நினைத்துக் கரைந்து
போணேன் கண்ணீராய்…

Saturday, August 7, 2010

பளுவான பழுதுகள்

உன் எண்ணும் என் எண்ணும்
இன்னும் இருவரும்
பகிராத போதும் ...
உன் அழைப்பு வந்துள்ளதா
என பார்த்து பார்த்தே
என் கைபேசியின் பொத்தான்கள்
தேய்ந்து ஓய்ந்து போனதடி ...

அமிழ்த்தும்

பிரிவென்னும் வார்த்தை
நம்மோடு இருந்தால்
உயிரெனும் புணையும்
துளை ஒன்று இன்றி
தினம் தினம் முழுகும் ...

நெஞ்சோடு

ஊசியும் இல்ல நூலும் இல்ல
எப்படியோ அவள மட்டும்
எந்தன் நெஞ்சில் வச்சு
நானே தச்சு கிட்டேனே ...

தொடருது

எழுத்தாகத் தொடங்கிய
என் காதல் ...
வார்த்தையாக வரியாக
பக்கமாக நூலாக நூலகமாக
தொடருது இன்னும் ...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்