Monday, February 27, 2012

துளிகள் - 1


என் மொழியே! நீ எங்கே...
என் காகிதக் வயிறுகள் பசிக்கிறது.
கவிதை நாக்கு தவிக்கிறது

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

இனிக்கின்ற கண்ணீர் காதல்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

கண்ணீரின் மழையாலே
ஏன் என் கண்ணத்து நிலங்கள்
வறண்டு போகுது

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

ஆணுக்கு பெண்ணையும்
பெண்ணுக்கு ஆணையும்
கொடுக்கிறாள் காதல் தேவதை...
இதில் யாருக்கு கிடைத்தது வரம்?

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

இதழில் சொருகி
இதயம் வரை இறங்கும்
உருவமில்லா ஊசி அவள் முத்தம்


~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

விஷம் கயிறு மலையுச்சி
இல்லாமல் தற்கொலைக்கு
முயற்சிக்கிறேன்...
உன்னை மறக்க முயல்கிறேன்...


~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
 
காதல் என்னும் கல்
எல்லோருக்கும் கிடைத்துவிடுகிறது
சிலர் அதை செதுக்கி சிலையாக்கி
அழகு பார்க்கின்றனர்...
பலர் தன்மீது பட்ட சாணி
துடைக்கத்தான் அதை தேடுகின்றனர்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

அடியே! என் கடிதம்
என் காதலின் நகல்
என்இருதயத்தின் மகள்
இதோ தன்
தந்தையையும் தாயையும்
சேர்க்கும் முயற்சி

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*


உனக்கென்ன எளிதாய்
உடைத்து போய் விட்டாய்
இருதயத்தை
உடைந்த சில்கள்
நெஞ்சுக்கூட்டுக்குள்
 கிடந்தது கிழிக்குதடி

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

உன் இருதயம் என்ன
என் முகப்புத்தக சுவரா?என் காதல்
விமர்சிக்கபடாத என் கவிதைகள் போல்
சலனமற்று சவமாகுது

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

அவள் விழிகள் இருக்கு
உள்ளே கோடி மின்சாரம் இருக்கு...
இனிமேல் எதற்கு அனுவின் பிளவு?

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

பட்டு பாவாடைத் தாவணியில்
அவள் வருகையிலே...
கவிதைகள் காகிதங்களில் எழுதப் படுகிறதா
இல்லை பட்டுத் துணியில் எழுதப் படுகிறதா
என்று ஐயம் வருகிறது....

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

அவள் துப்பட்டா நிழல்
இருக்குமெனில்
12ல் 13 மாதம்
கோடையாக இருந்தாலும் சுகம்

Sunday, February 26, 2012

வரு(ம்)மானம்உணவாய் பணமாய்
பாவமாய் பரிகாரமாய்
அவரவர் செய்யும் வேலைக்கேற்ப
இந்த மண்ணில், வரும் வருமானம்


இந்த நெரிசலான உலகில்
உன்னை இன்னும் 
விட்டு வைத்திருக்க
ஒரே காரணம்...

உன்னை  நீ விற்ற
விலைப் பணம்...


30 நாள் 
யானைப் பசிக்காண
சோளப் பொறி இது...
ஏனோ 3 நாளில்
தீர்ந்து போகுது...


கலியுகத்தில்
பாசம், காதல், காமம்,
அன்பு, பரிவு,பசி
எல்லாமே  இந்தக்
காகிதத்தில்  தான்...
சொல்லப்படுகிறது,
தீர்க்கப்படுகிறது


என்? இவர்களது 
தலைக்கனம் சோகம்
எல்லாமும்கூட இதுவே..


இந்த காகிதபூவின் 
வாசத்தில் மயங்கிதானே...
இன்று  பல பட்டுப்பூச்சிகள்
அலுவலக கூட்டுக்குள்
சிறை இருக்குது...


உள்ளங்கையளவு 
இந்தக் காகிதந்தான்
மானத்தையே காக்குது...
இது வரவு என்கிறார்கள்
ஏனோ? பலருக்கு
வங்கி வட்டியாய்
போதை  புகையாய்
சுகத்திற்கு  சுங்கமாய்
பசிக்கு  ருசியாய்
செலவு கணக்கில் தான் சேருகிறது...

Wednesday, February 22, 2012

பெண்பால்மெல்லிய மொட்டுக்களை,மெதுவாய்
திறக்கும் பூந்தென்றல்கள், பெண்பால் தான்
இதோ இவள் விரல் தென்றல் தீண்டி
புத்தக மலர்கள் திறக்கையில் உணர்ந்தேன்...

காயப்பட்ட உள்ளத்தில் ஊற்றும்
அவள் கோபம் அமிலமாய்
நெருக்கடியில் நெருக்கிவிட்டு
செலவில்லா பொழுதில்
செழிக்கும் பணம், பெண்பால் தான்...

மறையாமல் யுகம் யுகமாய்
நீண்டு கிடக்கும் அவள் கோபமாய்
மண்ணுக்குள்  மக்காமல்
நிலைக்கும் பாலித்தீன் பெண்பால்தான்...

புரியாத பெண்மனமாய்
புதிர்கள் போடும் தமிழிலக்கணமும்,
பெண்பால்  தான்...

கோடி வரி கோடு நீ  எழுதினாலும்
தன் இஷ்டத்துக்கு நடக்கும்
மென்பொருளும், பெண்பால் தான்...

உனக்காக தேயவும் செய்யும்
வாயில்லா பல்கொண்டு
கடிக்கவும் செய்யும் செருப்பும்,
பெண்பால் தான்...

அப்பாவிகளை அற்ப offerகளில்
அப்பலமாய் நொறுக்கும்
அரசியலும் பெண்பால் தான்...

கிடைக்கவேண்டியவனுக்கு கிடைக்காமல்
ஏறக்கூடாதவன் கை ஏறி
தன் தரம் தானே தாழ்த்தும்
அதிகாரமும், பெண்பால் தான்...

சரியான நேரத்துக்கு வராத
அவள் பதிலால்
என் இருதயத்துக்குள்ளையே
அவள் நினைவுக்கு சிறை...
இதோ வாசிக்கப்படாத
என்  கவிதைக்கு blogக்குள் சிறையை போல்...
இதுவும் பெண்பால் தான்...

Tuesday, February 14, 2012

காதல் கிளிஞ்சல்கள்


இந்நொடி

வானின் அலைக்கற்றை
ஊடக நெரிசல் வரிசை
குறுஞ்செய்தியில்...

ட்விட்டர் சிட்டின்
காலை கீச்சுகளில்

கோடிகோடி ப்ளாக்
பக்கங்களில்

முகப்புத்தாக சுவர்களில்
ஆர்குட் துணுக்கு உரைகளில்
அலுவல் அளவளாவிகளில்

 சொல்லப்(பட்ட)படுகின்ற(படப்போகின்ற)
கோடிகோடி  காதல்களுக்கும்
கொள்ளப்(பட்ட)படுகின்ற(படப்போகின்ற)
சில சில காதல்களுக்கும்
வெல்லப்(பட்ட)படுகின்ற(படப்போகின்ற)
பல பல காதல்களுக்கும்
இனிய காதல் தின நல் வாழ்த்துக்கள்

உண்மைக் காதல் சொல்வோம்
அன்பால் உலகை வெல்வோம்
உவகையால் உள்ளங்களை ஆள்வோம்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

தவாணி சீலை மோதி
பல்சர்கள் குடை சாயும் 
விசை காதல்
இளைஞர்கள்
ஆர்வமாய்  எழுதும்
தேர்வு  காதல்
கிருமியோ காரணியோ இல்லாமல்
எல்லோருக்கும் சுகம் தர,
எல்லா இனத்திலும் பரவும்
நோய் காதல்
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

காதல்  ஒரு காகம்.
ஏனோ, இதன் எச்சத்திற்காய் 
காத்துகிடக்கிறது
கூட்டங்கள்  சிலைகளாய்

காதல் புனித மதம்.
உரு இல்லா  அன்பே கடவுள்.
இதற்கும் உண்டு
நாத்திகனும், ஆத்திகனும்
காதல் சொர்கத்து பதவி 
என்றான் ஒருவன்
நரகத்து வேதனை 
என்றான் மற்றொருவன்
எவன் நாத்திகன் 
அவிழா ரகசியம் இது...

உயிரின் கடலுள் இருந்து
சாதி  மத பண  முத்துக்கள்
எடுக்கப்பட்டு
திமிரலைகளால் விசிறி
எறியப்பட்டு அன்பின்
கரையொதுங்கிய  சிப்பிகள் காதல்
ஏனோ இங்கே சிப்பிகள் 
தான் விலை அதிகம்
என்னும் ரகசியம் 
சிப்பி பெருக்குபவருக்கே சொந்தம்

~*~*~*~*~*~*~*~*~*~*~

இரு இருதயம் 
துடித்து நீடிக்கும்
ஒற்றை 
உயிர் காதல்.
 புத்திசாலிகள்
செய்யும்  மடத்தனம்
நல்லவர்கள்
செய்யும் பாவம்
காதல்.
ஏனோ  இந்த
மடத்தனம் தான்
வெல்கிறது
இந்த பாவம் தான்
இனிக்கிறது.

இருவருக்காய்
இருவர் எழுதிய
வேதம் காதல்.

~*~*~*~*~*~*~*~*~*~

ஒரு  புண்ணிய 
வேள்வி  இது

சாதி மத பணம் வயது
என்று நீர்கொண்டு 
அணைக்க நினைக்கும்
கூட்டமே!

நீர்கொண்டும் எரியும்,
இளமை  நெருப்பால்
வளர்க்கப் பட்ட வேள்வி இது

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

சாதி
மதம்
பணம்
பகட்டு
அந்தஸ்து
அகங்காரம்
என்று பாவம் செய்து
சமுகம்  என்னும் நரகத்தில் 
இருந்து கொண்டு

காதல் செய்யும் சிசுவை 
சொர்க்கம்  வேண்டாமா 
என்று கேட்கிறது

கடவுளுக்கே வரம் கொடுக்கும் 
நப்பசையல்லவா அது

Tuesday, February 7, 2012

ரயில் காதல் - 1

பேருந்துக் காதல் - 1 | 2 | 3

 
சொந்தமாகாத இருக்கையை
பாவையோடு பங்கிட்ட 
அழகிய பயணம் அது

முத்து  நகரை பிரிந்து
முத்துச்சிலையோடு
பயணம்

அமர்ந்து  தொடர்ந்த
ஆசைப்  பயணம்அது

உறக்கம்  தொலைத்த
உறைபனி இரவில்
நேர் எதிரே
என்  கனவு அமர்ந்து
என்னோடு  பயணிக்குது
உறங்காமல்  கனவுகண்டவன் நான்
அதுவும்காதல் கனவு

இந்த  இரவில்
வானத்தை தனிமையில் 
தவிக்க விட்டுவிட்டு
என்னோடு பயணிக்க 
வந்ததோ நிலவு?

நிலவினில்  நீரிருக்கா நானறியேன்...
ஆனால், வெள்ளி இருக்குதுன்னு
பெரும்ரகசியம் சொன்னது
இருட்டுக்குள் உறங்கும் 
அவள் கால்  கொலுசு

முதல் முறை 
ஸ்டீவ் ஜப்சை வெறுத்தேன்
நான் ரசித்துக் கொண்டிருந்த
 வஞ்சி அவள்  ஐபாடை 
உரசி ரசித்த பொழுதுகளில்

அவள் பார்த்த
 ஓரப்பார்வையின்
புண்ணியத்தில்
 என் தலை அடிக்கடி
கோதல்கொண்டது
இரவினில் தலைகோதும்
அவசியம் உணர்ந்தேன் அன்று

கடை ஜாமத்தில்
இதழ் திறக்கும்
காதல் சொல்லும் ரோசா
கடும்  குளிரில்
பல் சிரிக்கும்
மார்கழி புஸ்பம்
நடுமதியம் சமயும்
வசீகரிக்கும் மல்லிகை
சூரியன்  கண்மறைவில்
வெட்கம் கலையும்
முல்லையும் முளரியும்
பூவாய்! நீ 
எந்தப் பூவகை?
இப்படி எல்லா நிமிடமும்
சோம்பல் முறித்து 
சிரிக்கிறாய் புதுமலராய்

ஐயோ! முன்றாம் சாமத்தில் 
அவள் கூந்தல்  காட்டுக்குள்
விரல் கலப்பையால் உழுதால்...
ஏனோ, என்  நெஞ்சுக்குள்
காதல் ம(ன்)னப்புழு நெளிந்தது
ஏனோ, ஆசை என் மனதினில்
விதை மழை  தூவுது
மும்மாரி பார்வை மழை தூர
காதல், என் இருதயத்தில்
அருவடையாகி 
அவள் இருதயத்திற்கு அனுப்பலாகிறது
காதல் விவாசாயம் இதுதானோ!

மெமரியிலிருந்து இசையை
குமரியின் காதுகளுக்குள்
தூவும் சுகத்தில் மலரவள்
துயில்ந்து போனாள்

அந்த அமைதியினில்
இவள் அழகு மழை 
சாரலில் நனைகையில்
என் காதுக்குள் இளையராசாவின் 
சேட்டைகள் உணர்ந்தேன்

உலகுக்கே  சூரியன் 
உதித்து விடிய
என்  இருக்கைக்கு மட்டும்
ஏனோ, நிலவு உதித்தது
போர்வைகுள்ளிருந்து

முதன் முறை
சரியான நேரத்தில்
இலக்கு சேர்ந்து
எந்தன் காதல் கனவை
கலைத்தது...இந்த ரயில்

பயணம் முடிந்த பெட்டிகள் போல்
 இருதிசையில் பிரிந்தது காதல்
நிலவுஅவள் கிழக்கு நோக்கி
சூரியன் நான் மேற்கு நோக்கி


P.S. -

1. என்னோடு RAC பயணம் கொண்ட அந்த பெண் இந்த கவிதை படித்து, என் கதை         முடிந்தது.

2. இந்தக் கவிதையில் வருவது போல் RACயில் ஒரு பெண்ணோடு பயணித்தது மட்டுமே உண்மை. மற்றவைகள் உறக்கம் இல்லாத கிறுக்கனின் கற்பனைகள்

காதல் அலைவரிசை


எட்டாத தொலை ஊருக்குள்
                 இரவு பொழுதில்
                 எதோ ஒரு அலைவரிசை
                 காதுக்குள் இரைச்சல் கலந்து
                 பாய்ச்சும் இசையின் சுகமாய்...
காதல் இல்லை
                என்று சொன்னாலும்
                பரவாயில்லை
                அப்படியாவது என்னிடம்
                பேசு... சுகமே

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

எஜமானன் யாரையும்
                 அழைக்கப்போகாத போதும்
                 தொடர்பில்லா காட்டுக்குள்ளே
                 அலைவரிசை தேடும் கைபேசியாய்
நானும் நீ 
                  காதலிக்கப்போகாத போதும்
                  உன்னுடன் பேச போராடி 
                  தொற்றுக்கொள்கிறேன் பெருமையாய்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

தூரத்து  கிராமத்துகுள்ளே
                  கிடைக்கும் ஒற்றை 
                  அலையின் நுனி பிடித்து
                  தொடரும் அழைப்பைபோலே
நீ காதலிப்பாய் என்னும்
                  ஒற்றை நம்பிக்கையின்
                  நுனி பிடித்து 
                  நீடிக்குது இந்த உயிர்

Monday, February 6, 2012

உனக்கென?என் காதலை
         உன் கணவனுக்கு

என் பெயரை
          உன் மகனுக்கு

உயிரோடு  மரணத்தை
          என் மீத நாட்களுக்கும்

உன் நினைவுகளை
          என் இருதயத்திற்கும்

என் உயிரை
          மரணத்துக்கு

என்று உயில் எழுதினேன்
(காதல்)மரணப் படுக்கையில்


காதலே! உனக்கு
இந்த உயில் காகிதம்
என்  இருதயத்தை கொடுக்கிறேன்

Thursday, February 2, 2012

தொலைத்த நாட்கள்

[Image Collage by My Friend Java Arun]
கல்லூரி மணி அடிக்க
     பத்து நிமிசம் இருக்கையில
     வந்து அவன் எழுப்ப
     இன்னும் அஞ்சு நிமிசமுனு
     சொல்லி விடிந்த
     காலை(லங்)கள் எங்க?
உன் பெயரில்
     நாலு defect ticketனு வருகிற
     மேனேஜரின் அழைப்பினால்
     அர்த்த ஜாமமே
     விடிந்து போகுது இங்க

அவ  திரும்பி கூட பாத்திருக்க மாட்டா
     சிரித்ததாய் சொல்லி
     150 ரூபாய் செலவா வரவா
     தெரியாமல் போக வச்ச
     நண்பர்கள் எங்க?
உண்மையிலயே அவ சம்மதிச்சப்ப
     மச்சான் உன் தங்கச்சி
     சரினு சொல்லிட்டானு
     முகபுத்தாக statusஇல்
     சொல்லும் நிலம இங்க     

 படிக்கட்டும் பசங்கன்னு
     கல்லூரி போட்டுத் தந்த
     அறைகுற LANஇல்
     ipmessenger, gtalk
     நட்பை பரிமாறிய
     காலங்கள் எங்க?
3ஜி நெட் இருக்கு, imac முன்னிருக்கு
     இருபக்கமும் available
     கட்டும் இருந்தும்
     இத்துனுண்டு நேரம் இல்ல இங்க


பதினைந்தாம் தேதி அவன் பிறந்தநாள்
     ஒவ்வொரு மாதமும்
     14 தேதி இரவு கொண்டாட்டங்களும்
     15 தேதி ரோட்டுக் கட விருந்துகளும் எங்க?
facebook பக்கம் சொல்லியும்
     ஐபோன் ஆப்ஸ் அறிவுருத்தியும்
     ஒரே ஒரு வாழ்த்து செய்தி
     அனுப்ப நொடிகள் இல்ல இங்க

பத்தாயிரம்  மைல் தாண்டி
     தோழி மடலிலே
     பத்திரிக்க அனுப்பி இருப்பா
     பத்து மெயில், பதினஞ்சு கால் பண்ணி இருப்பா
     கடைசியில irctc சொதப்பி போக
     யூடுபிள் வீடியோ ஸ்ட்ரீம்
      பாத்த கல்யாணம்
     முகப்புத்தகத்தில் க்யூட்னு எழுதி முடியும்
     அவள் மகன்(ள்) புகைப்படங்களில்

ரத்தம் கசியா
      அவனிடம் அடிவாங்கி வந்த
      ஆறு தையல் காயம்
      சுகம் தான்...எங்க?
ஏனோ அடிக்க
       யாரும் இல்ல
       இருந்து வலிக்கு நெஞ்சு இங்க...

நட்பை பாத்தியம் எழுதிய
       slam bookஉம்
நண்பனின்  முகவரி சுமந்த
       கைபேசி மேமரி மட்டும் தான்
       தூசி படிந்து போனது...

எங்கள் நட்பு
எங்கள் நினைவுகள்
இன்னும் தொடருது புது மலராய்...
இந்த  வரிகளுக்கு உதிரும்
ஒவ்வொரு கண்ணீரும் சான்றிதர்க்கு

P.S. Dedicated to my college friends, Junior friends and Staffs


As a Alumni Contribution to my College Campus Trails'12 - An Yearly Magazine
    

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்