Saturday, December 31, 2011

புதுமை எழுது


ஒவ்வொரு உயிரின்
ஜனனத்தின் போதே
அவன்  மரணம் 
நிச்சயிக்கப்படுமாம்

இதோ புத்தாண்டு
பிறப்பினில்
குழந்தை பூமியின்
மரணத்தை 
எழுதிக்கொண்டிருக்கிறான்
மனிதன்  வானவெடிகளால்
மாசாக்க முடிந்த நமக்கு அதை ஒழிக்க நேரம் ரொம்ப தேவை இல்லை...
சிந்திகாட்டும் மூளைகள்
பசுமையாகட்டும் தேசங்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

முடியு(தொடக்க)ம்

பலக்
கல்யாண மேடைகள்
பழையக் காதலின்
சமாதிகள்

வெறும்
முக்கால் பவுன் தாலி
காதலன் இருக்கும்
இருதயப் புறம் தொங்கையில்
முந்நூறு கிலோ சுமை

Friday, December 30, 2011

இரட்டிக்கும் மகிழ்வு

ஒற்றை மகிழ்ச்சி
இரட்டிக்கட்டும்
ஒற்றை வெற்றி 
இரண்டாகட்டும்
என்று சொல்லும்
வருடம்...

காயங்கள் தடங்கல்கள்
இரட்டிக்கையில்
சோர்த்துவிடாதே தோழமையே!
அதை கையாளும் வழிகளும்
இரட்டிக்கும் என்று
சொல்லும் வருஷம்

புன்னகை மலர்
உன்  இதழ் தோட்டத்தில்
மலரட்டும்
இன்பங்கள் வண்டு எனவே
உனைத் தேடி மொய்க்கட்டும்
2012 இன்பகர ஆண்டாகட்டும்

 சாதிகள் கடந்து
நட்பு மலரட்டும்
உழல்கள் இல்லாத
நாடு வளரட்டும்
தோல்விகள் காணாத
காதல்  பூக்கட்டும்
வறுமைகள் மறைந்து
வளம் செழிக்கட்டும்
மாசெல்லாம் களைந்து
சுழல் பசுமையாகட்டும்.

 தமிழ் வாழ்த்தும்
ஆங்கிலம் 
ஆங்கிலப் புத்தாண்டு
எல்லா மதத்தவரும்
பகிரும் வாழ்த்து
இந்தப் புத்தாண்டு
எங்கும் இனிமை இருக்கு
கொஞ்சம் பொருக்கி எடுத்துக்கோ
புத்தாண்டு வாழ்த்துடன் கௌரமி

Thursday, December 29, 2011

சென்னையில் தானேதொலைப்பேசி ரசிதுகளை 
நாள் தவறாமல்
செலுத்தும் அன்பு மகன்
முதியோர் இல்லத்தில் இருக்கும்
அன்னையை பார்க்கும் நாள்
மறந்து, கடந்து போவது போல்

நாள்  கடந்து
ஆடி மாத காற்றையும்
ஐப்பசி மாத மாரியையும்
மார்கழி மத்தியில் 
தமிழகம் அழைத்து வருது
தானே புயல்

பாசத்தை  விற்றுவிட்டு
கண்துடைப்புக்காய்
10 நூறு ரூபாய் தாள்களை
அன்னை கரங்களில்
திணித்துப் போகும்
பெற்ற பாசம் போல்

விருந்தாடி வந்து
வீட்டு குழந்தைக்கு
வாங்கி வரும் பலகார 
பொட்டலங்கள் போல்

தமிழகத்தை
நனைக்க போராடுறது
புதுவை புறம்
"தானே!" தானாய்


Tuesday, December 27, 2011

கலப்புத் திருமணம்

அறிவே இல்லா
காந்தங்கள்
சாதி மறந்து செய்யுது
கலப்புத் திருமணம்
எதிர் துருவங்களோடு...

ஆறறிவாம் இவனுக்கு
திரிகிறான்
சாதி வெறியோடு

இவ்வளவுதான்எப்பேர்பட்ட  வீட்டுக்கு
ஆண் வாரிசே ஆகினும்
பிறப்பது என்னவோ
மருத்துவமனைத் தொட்டிலில் தான்

கோடி ரூபாய்
கடிகாரமாகினும்
பாட்டரி  சாகையிலோ
சாவி கொடுக்க மறவையிலோ
நின்றுதானே போகிறது

வங்கிக் கணக்குகளை
எண்ணிக் கொண்டிருப்பவனுக்கும்
வாங்கியக் கடன்களை
எண்ணிக் கொண்டிருப்பவனுக்கும்
மாதத்தின் முப்பதாம் நாள்
நெருக்கடியாகவே நகர்கிறது

விலைநிலத்தை
வீடுமனை ஆக்கி
தங்கத்தில் தட்டு
வாங்கியவனும்
பசிக்கையில் அரிசிச்
சோறு தான் சாப்பிடனும்

எந்த மதமானாலும்
ஏதேதோ சாதி ஆனாலும்
கல்யாணம் என்னவோ
ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே?

தங்கக் காரு
வீட்டில் எட்டுக் 
கொண்டவனாகினும்
இறுதி  ஊர்வலம்
அமரர் ஊர்த்தியில் தான்
சந்தனக்  கட்டிலிலேயே
உறங்கியவன் ஆகினும்
இறுதி உறக்கம் என்னவோ
நெருப்புக் கட்டிலில் தான்
தங்கத்தட்டு அறுசுவை 
விருந்தோ
ஈயத்தட்டு  ஆறுவீட்டு
மிச்சமா
சாப்பிட்டு வளர்ந்த உடம்பு
முடிவது என்னமோ
ஒரு பிடி சாம்பலாய் தான்

 இதற்கு  நடுவே
எதோ வாழும்
பொருள்ளில்லா வாழ்க்கைப்
போராட்டம் எல்லாம்
ஒரு சான் வயிற்றுக்குத்தானே

Monday, December 26, 2011

கண்ணடி கண்மணி

எங்க ஊர்ல
முறப்பொண்ண பாத்துக்
கண்னடிச்சாலே...
முறுக்கு மீச மாமன்
ஆறடி அருவாளுக்கு
வேல வைப்பான்...

இங்கமுகம் தெரியா
பெண்ணும் எனக்கு அனுப்புறா
குறுஞ்செய்தி ஒன்னு
கண்ணடிக்கும் முக சித்திரத்தொடு...

Friday, December 23, 2011

மதம் கடந்த மனமார்ந்த வாழ்த்து


ஊருக்காய் உலகுக்காய்
முள்ளை ஏந்திக்கொள்ள
பூ பிறந்த தினம்

தெய்வம் மனிதனாய்
பிறந்த தினம்

அன்பு  ஒன்றே அழியாதது
என்று புறியாத
மனிதனுக்கு  சொல்ல
கடவுளுக்கே ஆயிரம்
பிறப்பு தேவைப்பட்டது
அதில் ஒரு பிறப்பு
எழுதப்பட்ட நாள்

மண்ணுக்கு சூரியன் வந்தான்
அவன் இருப்பிடத்திருக்கு
விண்மீன் வழி சொன்னான்

கிறிஸ்துமஸ் தாத்தாவின்
பரிசுக்காகவே 
நல்லெண்ணம் பூத்தது
பூக்களின் நெஞ்சினில்

அவர்  வெண் தாடி போல்
பொழிந்திடும் மார்கழிப் பனிபோல்
உள்ளம் வெளுத்தது
மகிழ்ச்சி செழித்தது


நான் வாழ்த்தையிலே
கிறிஸ்தவன் இதழ்கள்
சிரிக்கத்தான் செய்தது

கிறிஸ்த்தவன் கொடுத்த
கேக்கும் எங்கள்
தொண்டைக் குழிக்குள்
இனிக்கத்தான் செய்தது

மதங்கள்  பல
மனங்கள் பல
அனால் உள் 
எழுத முற்படுவது 
அன்பு ஒன்றுதான்
எங்கும் விழைவது
மகிழ்வு ஒன்றுதான்

உடலால் பிரிந்துக்
கிடக்கும் ஓர் உயிர்களே
இங்கு சந்தோசக் கூத்தாடுங்கள்

எல்லோருக்கும் இனிய
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


ஏற்றத்தாழ்வு


கைபேசியின் பைகளில்
பத்து ரூபாய் சேர்க்க முடியா
ஏழை வாழும் ஊரில் தானே

30 ரூபாய்
மாத வாடகையில்
அழைப்பவனின் காதுகளில்
இசை பாய்சுபவனும்
வாழ்கிறான்

காதலும்  காசும்
அருமை அறியாதவனிடம்
குவிந்து சிறுமையாகும்!!

Thursday, December 22, 2011

நிச்சயம்

ஓசை இல்லாமல்
வெடிக்கும் அணுகுண்டு
தெரியுமா?

ஆணின் அழுகை அது

ஆண் சிரித்தால்
ஆயிரம் காரணமிருக்கும்
மீசை துளிர் விட்ட
ஆணின் கன்னங்களில்
தூரிடும் கண்ணீருக்கு 
நிச்சயம் காரணம் பெண்

புதுவரவு

யமலோகத்தில்
வேலை இல்லாத்
திண்டாட்டம்...
காதலின்
வருகையால்...

நல்லவர்கள்  செய்யும்
ஒரே பாவம்...
காதல்

Sunday, December 18, 2011

என் 18 வயதுக் கவிதை


மகரகேதனன்மன்மதன் எனை வதைக்க
நான் முகனைபிரம்மன் நாட
அலரவனும்பிரம்மன் படைக்கிறான்
அழகி ஒருத்தியை

கல்லறையில் பதுங்கிய
கவிஞர்களின் கற்பனைகளை
கருவறையில் பிறக்கவைத்து
உந்தன் உருவம் வரைந்தானோ?

காற்றில் கலந்துவிட்ட
இசைஞர்களின் ஸ்வரங்களை
ஒன்றுதிரட்டி
உந்தன் குரலில் குவித்தானோ?

உலகின் ஆடல்களின்
அசைவுகள்சிலகடைந்தெடுத்து
உந்தன்  நடையழகாய்
உலவ விட்டானோ?

மழை மேகம் கடத்திவந்து
மிருதுவூட்டி ஜொலிப்பூட்டி
உந்தன் குழலாய் செய்தானோ?

 நட்சத்திரம் இரண்டை
வானில் பிரித்தேடுத்து
உந்தன் முகத்தில்
கண்ணெனப் பதித்தானோ?

மின்சாரமின்றி மிளிரும்
கச்சோதம்மின்மினி தான் பிடித்து
திலகமென நெற்றிதனில்
விட்டானோ?

முளரியின்தாமரை இதழ்களில்
சிறிது இதம் கூட்டி
உந்தன் இமைகளை 
இழைத்தானோ?

எந்தன்  இதழ்களின்
நகலெடுத்து
எனை சேரும்
உந்தன் இதழை
நகைக்க வைத்தானோ?

அமிழ்தம் சிறிதெடுத்து
மதுரம்தேன் தான் சேர்த்து
வெளிலிட்டுமத்து கடைந்தெடுத்து
உந்தன் வாயில் உமிழவிட்டானோ?

நீள் மூங்கில் ஒன்றை
இரு தூளை புல்லாங்குழலாக்கி
உந்தன் நாசியாக்கி
எந்தன் சுவாசம் பிரித்தெடுத்து
உனக்கு சுவாசம் கொடுத்தானோ?

இரட்டை பிறப்பாம் நிலவில்
ஒன்றை பிரித்து
மாசழித்து பொடியெடுத்து
உந்தன் வாயில்
புன்னகைக்கும் இரசனமெனபல்
படைத்தானோ?

கால் அடியில்
நீள் வாக்கில்
முத்தொன்று படைக்க
சிப்பிக்கு கட்டளையிட்டு
உந்தன் கழுத்தாக கடைந்தானோ?

மழைத்துளிகளை மின்னலில்
கோர்த்தெடுத்து
உந்தன் கழுத்தில்
மின்னிட விட்டானோ?

ராட்சஸ வாழைத்தண்டு படைத்தெடுத்து
விஸ்வகர்மா செதுக்கித் தர
எழு வபுவாய்உடல் நிறுத்தி
எந்தன்  துடிப்பில் துளியை
அதில் பரப்பி விட்டானோ?

வாயுவினை இருகுழலில்
சிறை பிடித்து உந்தன்
பொற்பாதம் படைத்தானோ?

ஆலங்கட்டிகள் ஆய்ந்தெடுத்து
கொலுசாய் கோர்த்தெடுத்து
உந்தன் கால்களில் கட்டிவிட்டானோ?

இயற்கையை நூர்த்து நூலெடுத்து
வானவில்லில் சாயமெடுத்து
உனக்கென  துகில் நெய்தான்

இப்படி கலம்பகபதினெட்டு
ஆண்டுகளுக்கு முன்னாள்
எனக்கென பிறந்து
கண்முன்னே கலமிரங்கினாய் நீ
காதல் கழுவினால் ஏற்றினாய் என்னை


Friday, December 16, 2011

உறுத்தல்

சுவையான, சூடான
உணவை வாய் நிறைய
அள்ளி வைத்து விட்டு
முழுங்க தவிக்கிற
தருணம்  போல

இல்லை என்றுத் தெரிந்த
உனது நினைவு
மூளைக்குள் கிடந்து
உருளுது...
உறுத்துது...
மறக்க முயலவில்லை நான்...

உயிருக்கு கொள்ளி

 உந்தன் உயிர்
நீங்கிய  பின்பு
உன்  மகன்
செய்ய வேண்டியதை

உன் உயிரை
நீக்க நீயே
என் செய்கிறாய்?


கலி(காதல்) யுகம்

 
காதலின் பதிலுக்காய்
காதலியின் இதழ் பார்த்துக்
காத்திருந்த காலம்போய்

கணிப் பொறியையும்
கைப்பேசியையும் முறைத்து
பார்த்து அன்பின் பதிலுக்கு
காத்திருக்கும் காலம் இது...

அளக்க முடியாக் காதலை
ஒரே ஒரு குறுஞ்செய்தி
முறுவல் சித்திரத்தில்
சொல்லி விடும் அவசர உலகமிது

திறமைக்காரன்


சாக்கை, லெவிஸ் ஜீன்ஸ்
என்று விற்கிறான்...
இன்னும் இந்தியன் தான் 
வர்த்தக வித்தகன்...

காஞ்சுப் போன ரொட்டிய, பிசாவா
வியாபிக்கிறான்...
இன்னும் இந்தியன் தான் 
அறுசுவை சொந்தக்காரன்...

நானும் நீயும் இல்லாம உலகத்துல
ஒரு கம்ப்யூட்டர் சிந்திக்காது...
நாம செஞ்ச ப்ராசசர்
நம்ம ஊர்ல விலை அதிகம்

இத விட பெருமை படும் விஷயம்

உலகத்துல வருமான கணக்கு கேட்காம
வங்கிக் கணக்கு தரும் 
எல்லா வங்கிக்கும்
அதிக வருமானம் தருவது...

இந்திய ஊழல்!! :O

வாலறுந்த

காற்றின் வேகத்தில்
வாலாறுந்த காற்றாடியும்
காதல் சோகத்தில்
வலி  ஏறிய இதயமும்
நம் பேச்சை கேட்கும்
 என்று  சொல்லித் திரிவது...

தூரத்து ஒளியை
வைரமேன்று நம்பும்
மடத்தனம்

Thursday, December 15, 2011

ரகசியக் கசிவு

விசத்தை  குடித்துதான்
உயிர் வாழ்வதாய்
உளறுவான்
காதலில் மட்டும் தான்

இதன் வலிகளில்
சுகத்தை புரிந்ததாய்
பிதற்றுவான்
காதலில்  மட்டும் தான்

அவள்  காதலால்
உலகை வென்றேன் என்றவன்
அவளின் உதறலால்
பிணமாகிப் போவது
காதலில்மட்டும் தான்

அன்பை பொழியும்
கூட்டத்தை விட
வெறுப்பை அள்ளி எறிந்து
அவள்  தந்த
தனிமையை ரசிப்பான்
 காதலில் மட்டும் தான்

வெளிக் கசியாமலே
உன்னை சந்தி
சிரிக்க வைக்கும் யுக்தி
கொண்ட ரகசியம்
காதல் மட்டும் தான்

Monday, December 12, 2011

பாரதி


முருக்கிய மீசையில்
கசிந்தது தீந்தமிழ்

வாளுக்கும் வேலுக்கும்
அஞ்சாத வெள்ளை நரிக்கு
ஐரோப்பா வழி சொன்ன
அன்னைத் தமிழ்

இந்திரப் பிரசத்து
மருமகள் பாஞ்சாலியும்
தமிழில் சபதமிட்டால்
இவன் பேனா வழி

சிந்து தொட்டு...
தென் பெருனை, காவிரி வரை
நதி நீர் இணைந்தது
தேசம் தழைத்தது
இவன் கவிதைகளில்

புதுமைப் பெண்
சாதி அழிவு
தமிழன்னை பேசிய
பாமரத் தமிழ்
இப்படி எழுத்தால்
இயல்பை புரட்டிப் போட்டவன்
இவனன்றோ! ஒராள் படை
வாலெதற்கு...இவன் சொல்லிருக்க

இங்கு இவனது
நாளிதழ் அச்சிட்ட ஓசை
இங்கிலாந்து நடுங்கியது
ஊமை பேனாவும்
சுதந்திர மொழி பேசியது...
பெண்ணை அடக்கிய கைகள்
முறிந்து போனது

தமிழ் பேசிய
ஆரிய வேதம் இவன்
இவனைப் பார்த்து
சமஸ்கிருதமும் தமிழ்ப்பால்
கொண்டது வஞ்சம்

பிரங்கியை நோக்கியும்
அச்சமின்றி மார் நிமிர்த்தலாம்
ஆச்சமில்லை என்று உச்சரித்துப் பார்
காதுக்குள் தேனொழுகும்
தமிழ் சொல்லிக் கேள்
ஆண்மகன் வாழலாம்
வாழ்க்கையாம் பெண்ணை வாழ விடு
சாதிகள் தொலையும்
காலை படி
கல்வித் தொல்லையும் சுகமே

இத்தனைக் கண்டானே
இவனைத் தமிழ் ஐன்ஸ்டீன்
என்பதா?
ஐன்ஸ்டீனை ஜெர்மன் பாரதி
என்பாதா?

Sunday, December 11, 2011

விடலைப் பருவம்


அறியாத வயதின்
எல்லை கடந்து...
அறிவின் எல்லை வரை
அறிய வந்த வயது...

பயமறியா தவறிலையா
இளங் கன்று வயதிது

பூக்கள் கனியாகும் பருவம்
கதிர்கள் முதிர்கின்ற தருணம்

பதின்ம பருவம்
நொடிக்கொரு காதலென்று
பொய்கள் சொல்லி
வலிகள் தந்த வயது
புரியும் வயதில்
காதல் புதிருக்கு
விடைகள் தந்தது...
காதல் ஒற்றை உயிரேன்றது

ஹார்மோன்களின் கலகம்
துணையாய் காதல்
ஒன்று கேட்டு
கண்ணிமைகள் அழையும்
எங்கோ பார்த்த முகம்
என்று புலம்பும்
இதயம் உள்ளே உறுத்தும்
இவள் உன் துணை
என்று சொல்லி
காதல் மலரும் அழகான பருவம்


வள்ளுவனுக்குக் கூட
இருவரி தேவைப் பட்டது
நட்பே உனை சொல்ல
மௌனங்கள் கொண்டு
இரு இருதய தூரம் கடக்கும்
நட்பின் வயது...

பூக்களுக்கு
மகரந்தம் பாரமா?
பறவைக்கு
இறகுகள் பாரமா?
மனிதத்துக்கு
குடும்பம் பாரமோ?
தாயே! உயிர் தகப்பனே! உறவே!
உன் அருமை அறிந்த வயது

பிழையான தமிழும்
அழகான கவிதையாகும் வயது
காதல் வாசம் தாண்டி
பெண்மை பூவில் நட்புத் தேனும்
பருகும் வயது
உலகை அழகாய் பார்க்கும் வயது
நாட்டை பற்றிக் கூட
மூளை நரம்பில் சிந்தை பாயும் வயது

மயூர மென்மையாய்
மேவாயில் கார்மேக மீசையும்
இடியின் இன்னலாய்
தேச இடைஞ்சலை துடைக்கத்
துடிக்கும் வயது...
பயமரியாக் கன்று நீ
என்று உன்னை உலகம்
கோழையாக்கும் வயது
வாயில்லாப் பிள்ளை
என்று சொல்லி
சுயநலமும் பிறழ்ந்த அறமும்
விதைபடும் வயது

இந்த வயது
வோட்டு மையினால்
நாட்டை திருத்தி எழுதும் வயது
குட்டி மனதினுள்
கொள்ளை நல்ல எண்ணம்
அள்ளிக் கொள்ளும் வயது


நீயும் அழகாவாய்
உன்னால் உலகம் அழகாகும்

Saturday, December 10, 2011

தேய்பிறை

வேலைத் தேடுபவன்
பாதம்...

அடிக்கடி
அடக்குக் கடை வரும்
மனையாளின் தாலி...

காதலிப்பவன்
credit card கன்னம்...

அடிக்கடி உரைக்கப் படும்

முதல் இரண்டின்
தேய்மானத்தால் வருமானம்...
மூன்றாம் தேய்மானம்
இன்று செலவு...பாசத்தின் வரவு...

உயிரோ(ஆ)ட்டம்

முடியாது என்று தெரிந்தும்
30 பந்துகளில் தேவைப்படும்
170 ஓட்டத்திற்காய்
பந்துகளை பரதேசம் அனுப்பும்
அணியாளனின் வீரியமாய்

உன்னை நோக்கி
வரும் என் காதல்
இந்த உயிர்
எஞ்சி இருக்கும்
இறுதி நொடி வரை ...

Thursday, December 8, 2011

தீபத் திருநாள்


கார்த்திகை
அறிவியலையே
வியக்க வைக்கும் நாள்

மண்ணின் மீன்கள்...
இதில் மயங்கும் 
விண்ணின்மீன்கள்

~*~*~*~*~*~*~*~*~

மின்சார மலர் சூடி
சுற்றி வரும் பூமிப் பெண்ணை
நிலா முகிலிடுக்கு வழி
பார்த்து ரசிக்கும்
கார்த்திகை இரவு

*~*~*~*~*~*~*~*~*~*

இன்று ஒரு நாள்
சூரியன் பூமியிடம்
ஒளிக் கடன் கேட்கும்

~*~*~*~*~*~*~*~*~

ஐயோ!
பூமியின் தேவதைகளே
இன்று ஒரு சேர சிரித்தீரோ?

~*~*~*~*~*~*~*~*~


ஒரு நாட்டையே
விழாக் கோலம்
சுட்டி விட்டவன்

இருட்டிக் கிடந்த
கோவில் கருவறைக்கே
ஒளி சேர்த்தவன்

ஏனோ இவன்
வாழ்க்கை இன்னும்
இருட்டியேக் கிடக்கிறது
தெருவோர விற்பனைகளில்

ஒளி ஏற்றும்
அகல் வியாபாரம் 
இருட்டிப் போனது
மெழுகுகளின் 
வியாபாரத் தீயில்

பரந்து விரிந்த
மனம் வேண்டும் 
பாடம் சொன்னது அகல்

நிமிர்ந்த நெஞ்சம்
வேண்டும் 
சொன்னது தீபம்

இயற்கையின் வாசம்தான்
சுவாசம் சேர வேண்டும்
(மின்சாரம் போல்)
பொய்க்காத வெளிச்சம் வேண்டும்
வேதம் சொன்னது
கார்த்திகை தினம்

*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

தீபத்தின் ஒளி வெள்ளம்
உங்கள் புன்னகை கடல்
சேரட்டும் ...

தீபத் திருநாள்
நல் வாழ்த்துக்களுடன் GowRamiஅலுவல் அளவளாவி


புதையல்கள்
இலக்கியம் சொன்ன
ஏழு மலைகள், ஏழு கடல்கள்
தாண்டி புதைந்து கிடந்தாலும் 
தூரமாய் தெரியாது...

கணிப்பொறி ஊளையிட
கீபோர்டு சல சலக்க
வியாபரா இருள் சூழ்ந்த
விஞ்ஞானக் காட்டுக்குள்

காதலியை பிரிந்து
2 அடி தூரம்
தள்ளி அமர்ந்திருந்தாலும்
தூரமாய்த் தெரியும்

இந்தத் தூரங்கள் எல்லாம்
துகள்கள் ஆனது
என் இமை அசைவும்
அவள் அறியச் செய்தது
அலுவலக அளவளாவி
(office communicator)

விஞ்ஞானியின்
அளப்பரியா கண்டு பிடிப்பு
அனுவைப் பிளந்ததல்ல
கண்டுபிடித்த கைப்பேசி 
அளவளாவி மென்பொருள் வழியே
காதலை இணைத்தது தான்

Wednesday, December 7, 2011

படியாமை


2 அடிக் குறள் போதும்
நிச்சயமாய் தேர்வில் வரும்...
ஆனால் குறளின் ஒரு சீர் கூட
ஏறவில்லை இவன் நாவில்

அதிகம் ஒன்றும் கேட்கவில்லை
5 கூட்டல் 6 எவ்வளவு!
அவ்வளவு தான்
அவன் மதிய உணவில்
பாதி கேட்டது போல் முழித்தான்...
ஆறுமுறை விரல் கொண்டு எண்ணி
ஏழாம் முறை சொன்னான் 9 
என்று அன்று

ஆனால் இன்று!

10 அடி தூர சுவர் நிறைய
எழுதி இருக்கும் உணவு ரகம்
குறை இல்லாமல் சொல்கிறான்
ஹோட்டல்களில்

ஐந்து மேசை
மேசைக்கு நான்காய்
20 நபர்கள் ஆர்டர்
தவறாமல், ரசிது போடுகிறான்

கணினி தோற்றுப் போகும் 
கணிதத்தில் தோற்று
இன்று மேசை துடைக்க
வந்தவனின் கணிதத்தில்

இந்த பசி துரத்தும் ஓட்டத்தில்
தன்னால் நியாபக சக்தி ஏறுது
கணிதம் வசமாகுது
மூடன் இவனுக்கும்

வாழ்கை சுமை
மேலும்
இதில் படியாமை
என்னும் படிக்கல்
சேராமை நன்று!
Tuesday, December 6, 2011

பித்து முத்திப் போச்சு!


இவனைத் தொலைத்தவன்
அவளைத் தேடுகிறான்
கேட்டால் "காதல்" என்கிறான்

தொலைந்த இடம்
தெரியும் என்கிறான்
இருக்கட்டும்
மீட்டு அவள் தருவாளென
தேடவும் மறுக்கிறான்

"அவளுக்காய் 
சாகவும் தயார் என்கிறான்",
வராது என்ற தகிரியமோ?
பாசத்தோடு வளர்த்த
பெற்றோரை மறந்து
அவளுக்காய் வேசமோ?

"காற்றில் மிதந்தேன்"
என்பான்
நியூட்டன் என்ன
முட்டாளோ?
"இவன் நினைத்ததை
அவள் பேசுவாள்"
என்றான்
கிரகாம் பெல் என்ன
கிறுக்கனா?

இவனைப் பார்த்தே
அவள் சிரிப்பதாய்
தினமும் பெருமை வேறு
காரணமில்லாமல்
சிரித்தாளோ அவள்?
அது காதலில்லை
அறிவுக் கொழுந்தே!
அமாவசை நெருங்குகிறது
இருவரில் ஒருவருக்கு
பித்தம் முத்துகிறது!
என்று பொருள்


எழுதாமல் தோற்றேன்!

கணிதம்
சொல்லிக் கொடுத்துவிட்டு
தேர்வறையில்
அறிவியல் கேள்வித்தாளைத்
தருவது போல்!

காதலிக்கத் தானே
சொல்லித் தந்தாய்
இன்று மறப்பதற்கு கேட்கிறாய்

அரும்பும் தருணம்


காதலியின் காது
மடல் தொட்டு
தோல்வி உற்று உதிர்கின்ற
என் காதல் வரிகள் போல்

தினம் தினம்
அலுவலக வாயில்களில்
வங்கிக் கடன்,
வலைப்பூ விலை,
வசிக்கும் வீடு என்று
விளம்பரக் காகிதங்களில்
வேண்டுகொள்களும்
வீசி எறியப்படுகிறது 
குப்பைகளாய்...

காதலின் அருமை
அறியா என் காதலி போல்

அரும்பில் கல்வியறியா
இளசுகளின் வாழ்க்கை
முற்றி விலையற்றுப்
போகிறது குப்பைக்கு
அந்தக் ககிதங்களோடு

Monday, December 5, 2011

என் கவிப் பிள்ளை


கார்விழித் திருடன்
களவாடிக் குவிக்கிறான்
காட்சிகளாய்...
அழகுகளை,
நிகழும் அழுக்குகளை...

கடக்கின்ற காலத்தால்
கற்பனை தூசி படிக்கிறது
குவியல்கள் மேல்
மணக் கருவறைக்குள்

தமிழ் உயிர் சேர்ந்து
காட்சிக் கரு
உருக் கொள்கிறது
கவிதை மழலையாய்

என் மனையாள்
பேனா வயிறு வீங்கா
கற்பம் கொண்டு
பெற்றெடுத்த தமிழ் மகன்
தலை மகன் தழைத்த மகன்

என் கவி மகனின்
முதல் மொழி
காதல்


என் வித்து
பேனா மடிமோதி
தமிழமுதம் தினமுண்டு
வளர்கிறான்
உலகின் கத கதப்பில்

நிகழ்ந்தேரும் அநியாயங்கள்
கிள்ளி விடுகையில்
பேனாவின் தாலாட்டுக்கள்
அவனை உறங்க வைக்கிறது
கவிதைகளாய்
காகிதத் தொட்டிலில்

ஏழை அப்பன் நான்
காகிதத் தொட்டில் தந்தேன்
இன்று புத்தகமாய் வளர்ந்தவன்
அலமாரிக் கட்டில் கேட்கிறான்

சமாளிக்கத் தெரியாமல்
என் மூளைக்கும் வேலைக்கும்
இடையிலே
மின் வலையாலே
ஊஞ்சல் ஒன்று
கட்டிக்கொடுத்து
ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்...

இதோ இன்னும்
சிதறல்கள் வலை ஊஞ்சலின்
ஆட்டத்தின் மயக்கத்தில்
என் கவிக் குழந்தை
வளர்கிறான்
Saturday, December 3, 2011

கண்ணீர்(ரின்) கதை


இதயங்களின் சுவரெங்கும்
சுவடாகிப் போன 
உன் பெயரை

அருவியாய் அழுது
அழித்தொழிக்க விரும்புகிறேன்

கொடுமை!
நேற்று முயற்சியின் தோல்வி
இன்று கண்ணீர் பஞ்சம்
Monday, November 28, 2011

வி(னா)டை

ஜாதி?
மதம்?
பணம்?
தொழில்?

இப்படி
உன்னைப்
பெற்றவர் அடுக்கிய
கோடி கேள்விகளுக்கு...

நான் திருப்தி படுத்தும்
என்று நம்பி கொண்டிருக்கும்
ஒரே பதில்
நான் உன்னை 
காதலிக்கிறேன்...

காதல் கவிதை

ஒருக் கவிஞனை
காதல் கவிதை
எழுத சொல்லிப் பார்...

நிச்சயம் வெற்றுக்
காகிதம் தருவான்,
காதல் வார்த்தைகளுக்குள்
அடங்காத பொருளென்று 
புரிந்தவன்

Thursday, November 24, 2011

ஊருக்குப் போறேன் I


புழுதிக் காட்டுக்காரன் மகன்

மென்பொருள்...
விளங்காதவனின் மகன்(ள்)கள்
அதை உலகுக்கு
விளக்கிக் கொண்டிருக்கிறோம்

தேன் சுறக்கும்
மலர்களை சுமந்த 
மரத்தில் கூடு கட்டி
வாழ்க்கையை மேடாக்கிடலாம் என்று
விழித்திருக்கும் கண்ணில்
கனவுகளை கரு சுமந்து
நெடுந்தூரம் வந்தவனில்
நானும் ஒருவன்

நிறுவனம்
ஒரு விசித்திர
அத்தி மரம்
வருடம் இதில் நிச்சயம்
12 முறை விடுமுறை
பூத்து விடும்...

சனி ஞாயிரோடு
சேர்த்து ஒன்றிரண்டு
பூக்கையில
ஒத்திவச்ச திபாவளி பொங்கல்
சந்தோசத்த ஒட்டுக்க 
கொண்டாடி தீர்த்துக்கணும்

அப்படி சேர்த்துவச்ச
சொச்ச மிச்சத்த
ஒரேயடியா தீர்க்கப்
போறேன்...
பத்து திங்க
வயித்தில் சுமந்த தாய
வாழ்வெல்லாம் மாரில்
சுமந்த தந்தைய
ரொம்ப நாளு கழிச்சு
பாக்கப் போறேன்
விடுமுறைக்கு ஊருக்குப் 
போறேன்...

ராவு நேரத்துல
ஓவர்டைம் பாக்குற
விளக்கு கண் விழிச்சு
வழி சொல்ல இல்லாத
இருட்டு ரோடுதான் 
இருந்தும்
ஓர வயலு வரப்புல
நெல்லு சேக்கும்
எலிக் குஞ்சும்
பெரிய குளத்துல
ஒட்டி நிக்கும்
கொஞ்சூண்டு தண்ணியில
கும்மாளமிடும் தவளையும்
வழி சொல்லும்
சொந்த ஊரு

தாரும் கருங்கல்லும்
குளைத்து கெட்டியா
போடப்படாத ரோடு தான்
உச்சி வெயிலுல
ஓரமா ஒதுங்கி நிக்கும்
வேம்பும் புளியம் மரங்க
நிழல என் பாதத்துக்கு
செருப்பா தரும்
ஊரு தான்

முடியாம நீளுகிற
பொம்பள பொழப்பு 
கண்ணீரப் போல
நீண்டு கிடந்து
கத கதையா சொல்லும்
பாத வழியா
உயிரைத் தேடி
ஒரு உடலு
தெக்காம கொள்ளும்
பயணம் இது...

குளச்ச மண் வச்சு
பாதமா பதனி சேர்த்து
ஆணையே இடிச்சாலும்
அசையாம நிக்குற
சுவரு வச்சு
சாணி மொழுகிப் போட்டு
கோமிய மருந்தும் இட்டு
அரிசி மாவால 
கோலம் போட்ட 
வீட்டுக்குள்ள வெறுந் தரையில
படுத்து பாரு
காதலிக்கிறவன்கூட 
கொறட்டையோடத் தூங்குவான்

சாஜெஹான் மட்டும்
ஒரு தடவ இங்க 
வந்திருந்தான் நிச்சயம்
மண்ணால தான்
தாஜ் மகாலே 
கட்டி இருப்பான்
அந்த சொர்க்கத்துல
ரெண்டு நாளு
நானு சுகமாத்தான்
தூங்கப் போறேன்

சந்தன சோப்பு
கத்தாழ சாம்பு போட்டு 
அடைச்சு வச்சத்
தண்ணிக்குள்ள ஆயிரம்
பேரு நீச்சலடிச்சு
குளிச்சோம் இத்தன நாளா

உச்சித் தொட்டு
உள்ளங்காலு வர
பூண்டு போட்டுக்
காச்சிய நல்லெண்ண
தடவிக்கிட்டு
சீகக்காயும், புன்க காயும்
பூந்திக் காயும்,வெந்தயமும்
போட்டு அரைச்சு
ஆத்தா தர
கரைச்சு தலையில
தடவிக்கிட்டு
பருத்திக்காட்டுக்கு பத்தியத்துக்கு
தண்ணி விடுகிற
மோட்டார் பம்பில்
குளிச்சுப் பாரு
வாழும் போதே
சொர்கத்த பார்க்கலாம்
அப்படியும் ஒரு நாளு
இந்த விடுமுறையில
குளிக்கப் போறேன்

அளவு சாப்பாடு
விதவித சாப்பாடு...
ஐயோ செத்துப்
போன நாக்குக்கு
புதுசா உயிரு
தரப் போறா 
என் ஆத்தா

5 மணிக்கே
என்ன பெத்தவன
எழுப்பி விடும் பாசம்
ஓடிப் போயி
மொத ஆடு
நல்ல இள ஆடு
அறுத்து...
பட்டினி கிடந்து
அவன் சேர்த்த காசுல
 அரக்கிலோ கறியும் 
கொஞ்சூண்டு ஈரலும்
தெம்பு ஏற நான் கடிக்க
நாலு நல்லி எலும்பும்
வாங்கி வந்து தருவான்

மிச்சத்தில் எல்லாம்
எனக்கு உயிர் கொடுத்தவ
கை தேர்ந்தவ
அம்மிக் கல்லுக்கும்
மசால் உரலும்
அவ மருமகளுக போல
அந்த ரெண்டு நாளு 
இடுப்பு ஓடிஞ்சுப் போக வேல

என்ன மாயம் செஞ்சாளோ
ரெண்டு நாளு
காலும் ஆளும்
ஊரு காடு சுத்தித்
திரிஞ்சாலும்
மூக்கும் நாக்கும் மட்டும்
அவ அடுப்பு பக்கமா
சீட்டு ஒன்னு போட்டு
உட்கார்ந்தே இருக்கும்

இன்டர்நெட்டும் கம்ப்யூட்டரும்
இல்லாத சுதந்திரம்

ஏசி விட்டு
தூசி இல்லாத காத்து
நாசி நிரப்பும் பாத்து

என் கூட
நிலாச்சோறு சாப்புட்ட
குட்டப் பாவாட குமுதா
ரெட்ட சடையில ஆள
ஆண்ட அனிதா
சைக்கிள் டயரு
வச்சு f1 ரேசு
விளையாண்ட வேலு
இப்படி சிதறிப்
போன உயிரை
மீண்டும் சேக்கப் போறேன்

அடி பட்டவன
பாதில ரோட்டுல
போட்டுட்டு
LOP*யே காப்பத்த
கரையான போல
ஆபிசுக்கு ஓடுற ஊரு
தாகமுன்னு சொன்னா
2 ரூபா வாங்கிக்கிட்டு
வியாதிய பிளாஸ்டிக்ல
தர்ற ஊரு
மேகம் சேர்ந்தா
அதிசயம மழையா விழுந்தா
உலகை மறந்து
உடமை நனைய
கொண்டாடும்
சுத்தந்திரம் இல்ல ஊரு
நம்ம ஊருக்குள்ள
வேற ஒருத்தன் வந்தான்
அவனுக்காக நாம
வாடக நாக்குல பேசுற ஊரு

இந்த பாசாங்கு எல்லாமே
வாழ்க்கை நாடகத்தில்
நானு போட்டுகிட்ட வேஷம்...
வேஷத்த 2 நாலு
அவுத்துப் போட்டுட்டு
பாசத்த பாசமா பக்கப் போறேன்

நானு விடுமுறையில
தவணை முறையில
என் உயிர பாக்க
போறேண்டா

ஐபோனு தேச்சு
சோர்ந்தது போன
விரல தும்பி பிடிக்க
வச்சு சொடுக்கு எடுக்க போறேன்

மின்சார போதையில
என்னத்த நான்
அடிச்சாலும் தப்புன்னு
சொல்லும் கம்ப்யூட்டர்
பாத்தக் கண்ணால
பாவட தாவணியோடு
துள்ளி வரும்
தமிழ் கவித
 படிக்கப் போறேன்

என் பெத்த
ரெண்டாவது தாயு...ஊருதான்
அவ மடியத் தேடிப் போறேன்...

*-Loss of Pay

Tuesday, November 22, 2011

அவளைப் பார்த்து


என்னை வைத்து
உன் இருதயத்திலிருக்கும்
காதல் வைத்து
ஒரு கவிதை என்றாள்!

கவிதை படித்துக் 
கொண்டிருப்பவனை
பார்த்து
கவிதை எழுது
என்கிறாயே என்றேன்

என்னைப் பற்றிதான்
கவிதை கேட்டேன்
கள்வரே! கவிஞரே!
உங்கள் எண்ணம்
பற்றி அல்ல...

என்னைக் கவிஞனென்றுவிட்டு
கவிதையாய்
கோபித்துக் கொண்டது
என் கவியின் உவமை

செல்லக் கோபம்தான்
இருந்தும் ஏனோ?
சட்டென்று சூரியன்
சட்டைப் பைக்குள்
விழுந்ததாய் உணர்ந்தேன்

உனக்கு " ----"
என்று பெயரிட்ட
உன் பெற்றோரைவிட
நான் ஒன்றும்
பெரிதாய் கவி
சொல்லிவிட முடியாது
என்றேன்...

காதல் மலர்
கல்யாணக் கனியாகையில்
பெற்றோருக்கு மேலன்றோ நீ?
நிரூபி உன் கவிதையில்
என்றாள்!

இதோ!!!

"எந்த மொழியோ நீ!
எனக்கு மட்டும் புரிய
உன்னை பெற்றவர்
எழுதியக் கவிதை நீ!

அழகு, அடக்கம்,
கல்வி, கலாச்சாரம்,
அன்பு, அரவணைப்பு
வெறும் ஆறே வார்த்தைகளில்
ஆறடி காகிதம் நிரப்பியவள்
நான்கு வேதங்கள்
அடக்கி ஆண்டவள்

நீ வந்தாய்
16 செல்வமும்
தேடி வந்தது
நம்மை மணக்கோலத்தில்
வாழ்த்தப் போகும்
பெரியோருக்கெல்லாம்
நிச்சயம் வார்த்தைப் பஞ்சம்

ஐயோ! நீ
உற்று நோக்கையில்
கவிதையால் படிக்கப்படும்
கவிஞனாகிறேன்

ஏனோ நீ
பக்கம் நெருங்கையில்
என் இருதய
வாய்க் கொண்டு
நூறுக்கு மேல்
சொல்லிப் பார்க்கிறேன்

நான் வாழ்ந்த
22 ஆண்டுகளுக்கான
பரிசா நீ?
இல்லை
வாழப் போகும்
நூற்றாண்டுகளுக்கான
வரமா நீ?

எழுத்துக்கள் சேர்ந்தது
வார்த்தைகளாவது
முக்கியமல்ல
பொருள் ஒன்று
வேண்டும் அதற்கு
இந்தக் கவிதை
வெறும் வார்த்தைக்
குவியல் இல்லை
என் வாழ்வின்
பொருளே, உனை
பொருள்படப் பாடும் இது"
என்று முடித்தேன்

பரிசுகள் சொல்லாமல்
துவங்கப் பட்ட
கவிதைப் போட்டி அது
இருந்தும்
என் அதிர்ஷ்டம்
முத்தப் பரிசுகளால்
என் கன்னத்து பர்சு நிறைந்தது

Monday, November 21, 2011

மெஹந்திக் கோலம்


பிரம்மனின்
அழகுப் படைப்புகளின்
அழகுப் படிப்பிது

எழுத்துக்கள் இல்லாதக்
கவிதை இது
இமை உதடுகளால்
வாசிக்கும் ஊர்
மயங்கிப் போய்

மருதாணிக் கூம்பிற்கு
அப்படி என்ன காதல்?
இப்படி ஓவியமாய்
முத்தமிடுகிறான்

இது என்ன
அழகுப் புதையலுக்கான
வரைபடமோ?

இயற்கையின்
பெண் ரசிகர்கள்
வாங்கிக் கொண்ட 
கை ஒப்பமோ!

என்ன மொழி
இதுவெனத் தெரியாது 
ஆனால் என்னை
மயக்கும் மாய மொழி
மந்திரம்...அது நிச்சயம்
Sunday, November 20, 2011

மதரா(ஸ் வா)சி


மதராஸ் அன்னையின் மடியில்
ஆறுமாத அனுபவம்


ஒரு ஜான்
வயிறு துரத்த
மூளை வியாபாரம்
செய்ய வந்தவன் நான்

சென்னை சுயநல
பூமி என்றான்
ஊர் நாட்டமை...
பத்திரம் என்றால்
திண்ணைப் பாட்டி...
கவனம்
என்றாள் தாய்...
சிக்கனம்
என்றார் தந்தை

எல்லாம் நிச்சயம்
என்று
பத்திரமாய் மடியில்
இடமொன்று
கொடுத்தாள் மண் அன்னை
அவள் தான் சென்னை

அழகான ஊர்

சிலந்தி
வலை கொண்டு
தன்னைத் தானே
சுற்றிக் கொண்டதுபோல்
சாலைகள் பின்னிப்
பிணைந்த குழப்பம்

கூவம் வீச்சம்
சேரி அரசியல்
சுரண்டிப் போட்ட மிச்சம்
இப்படி கவிதையான
ஊர்

21g, t51, e18, pp66
போகும் வழியும்
ஊர் பெயர் வாழ்ந்த
தமிழ் மொழியும்
குழம்பும்
பேருந்து பெயர்கள்
பாமரனும் ஆங்கிலம் பேசினான்

காலை
30 ரூபாயில்
பொங்கலோ, பூரியோ
அரை வயிறு நிறையும்

பொம்மைக் கடை
பார்த்த மழலையாய்
11 மணித் தொட்டு நச்சரிக்கும்
பசி கண்ட வயிறு...
எனக்காய் 37.50 ரூபாய்
கல்லாவிடம் கொத்தடிமையாகி
என் பசி போக்கும்

37.50 ரூபாய் காக்க
மறந்ததை
10 ரூபாய் மசாலா பூரி
சமாதனப் படுத்தும்

இரவு 40/50
திருப்தியாய்
அண்ணனோடு விருந்து
பாசமும் மகிழ்ச்சியும்
சேர்ந்து நிரப்பும் வயிறை

இப்படி 150 ரூபாய்
(ஒரு நாளைக்கு)
சிக்கனமாய் பசிக்குப் போக
மீதி கொஞ்சத்தை
வாடகை வீடும்,
மின்சாரக் கட்டணமும்,
பேருந்து பயணமும்
இணைய வலையும் முழுங்கும்

மிஞ்சியது என் தந்தை
சொன்ன சிக்கனத்திற்கு


எதிர்காலம்!
சிசுக் கொலையும்
பிறப்பு விகிதமும் 
குறைத்த பெண் எண்ணிக்கையால்
ஆண் பிறந்தவுடன்
மணமுடிக்க பெண் தேடும்
நிலை வரும்


அது போல
ஊரைப் பார்க்கும்
ஏக்கம் தீர்க்கும்
ஒரே நாள்
பண்டிகை விடுமுறைக்கு
சன நெருக்கடியால்
3 மாதம் முன்னாள்
ஒரே நிமிடத்தில்
தீர்ந்து போகும்
ரயில் சீட்டு முன்பதிவு

சென்னைக்கு
அழகு மட்டுமல்ல
உயிரும் இருக்கு
உருவான க்ளுகோஸ்
தின்று உடலுள்
பாய்ந்தோடும் குருதிபோல்
உற்பத்தியாகும் பெட்ரோல்,மின்சாரம்
தின்று ஊருக்கு குருதியை
ஓயா ஓடும்
ரயிலாலும் ஊர்திகளாலும்
நிருபணமான உண்மை

12 மணிநேரம் ஓடும்
கடிகாரம்
மென்பொருள் நிபுணன்

அழகான நெரிசல்
அளவான பேருந்து அழகி
அமைக்கப் படாத சாலை
என்று தினம் எப்படியோ
அவனுள் உள்ளக் கவிஞனுக்கும்
வேலை வரும்


இரண்டு நாள்தான்
அவன் சுவாசிப்பதை
உணரும் விடுமுறை நாள்

ஸ்பென்சர் முற்றமும்
ஈ.ஏ வாயிலும்
இவன் வருகைக்கு
காத்திருக்கும் நாட்கள்
மெரினா அலைகள்
ஓடி வந்து
கால்கள் கட்டிக்கொள்ளும் நாட்கள்
மகாபலிபுர சிலைகள்
உயிர் கொள்ளும் நிமிடங்கள்
அண்ணா நூலகம்
என்னை வாசிக்கும் நாட்கள்
துவைக்காத ஜீன்ஸில்
அப்பாவின் லோன் பைக்கில்
சென்னை அழகாகும் நாட்கள்
கட்டிடங்களையும் கல் மண்ணையும்
காதலிக்க வைக்கும் நாட்கள்

காசிருந்தாலே
வாழ முடிந்த ஊர் இது
முதலாளியிடம்
காசு இருக்கு
முதல் தேதி என் கை
சேரும் நம்பிக்கையில்
தினம் விடிந்து முடிகிறது
என் நாட்கள்
இந்த ஊரில்
ஓட்டமும் நடையுமாய்


(இது என் அனுபவமே...தவறிருந்தால் மன்னிக்கவும்/Its just my xperience. Sorry for the mistakes and hurtings, if any)

காத(ல்)லை சுவை

எவோனோ
ஒருவன் செய்ததை
காதலென்று கொண்டு

உன் மேல்
உண்மையாய்
கொண்ட காதலோடு
ஒப்பீடு பார்த்து
தொலைப்பது

மார்கழி காய்ச்சலுக்குப்
பயந்து
பங்குனி தாகத்தில்
அன்பாய் கிடைத்த
இளநீரை
வேண்டாமென்பதடி...

துணி


இறகுத் துடுப்பு போட்டு
காற்றில் மிதக்கலாம் 
என்று முதல் பறவை 
முயலாதவரை இனம் அறியா!

தேனீ முத்தம் பெறாமல்
தேன் சுவைக்கும் என்று 
இதழ்கள் அறிந்ததெப்படி 

ஆழம் பாராமல்
காலை விடத்
தடை சொல்லும் ஊரே!

தினவு கொண்டு 
இறங்கிப் பார்
அப்போது தெரியும் 
அது கணுக்கால் அழ 
வெட்டை என்று...


Friday, November 18, 2011

என்ஜீனியரால் என்ஜீனியருக்காய்


Dedicated to all Engineers, Technicians and Workers 
Who build this world

நேற்று......
இவன் பக்தன்
இல்லா கடவுள்

நிகர் செய்ய முடியா
கலைஞன்

தான் ஆக்கிய 
அகிலத்துக்காய்
சனம் உருவாக்கியவன்
கடவுள்

உருவாகிய உடல்களுக்காய்
அகிலத்தை
அழகாக்கினான் இவன்

பலர் பசிக்காய் 
கல் கொண்டு
காயப் படுத்தி
பசுங் கறி கொள்கையில்
உரசிய கல்லில்
கனல் கண்டான்

துரத்திய பசிக்காய் 
தூரம் ஒடித் திரிகையில்
ஒருவன் உருண்டு ஓடிய 
கல் ஆராய்ந்து
கண்டறிந்தான் சக்கரம்

நரிகள் போல்
ஊளையிட்டு
காற்றில் கலந்து 
எண்ணம் பகர்ந்த காலத்தில்
ஒருவன் எரியும் நெருப்பாலும்
திரியும் புகையாலும் 
செய்தி சொன்னான்
தொலை தூரத்துக்கும்

பலர் குளிருக்கு சுகமாய்
கம்பளி தேடுகையில்
ஒருவன் 
கம்பளி உரசிய 
ரப்பர் துணுக்கில் 
நிலை மின்சாரம் கண்டான்

நாள் இருண்டதும்
அன்று முடிந்ததாய்
எல்லோரும் தூங்கிப் போகையில்
ஒருவன்
ஓடும் எலெக்ட்ரானை
சுருளுக்குள் நிறுத்தி 
மின்னால் ஒளிரும் 
சூரியன் தந்தான்

உட்கார்ந்த இடம் இருந்து
ஒருவன் 
பூமி இருபுறம் 
பிதுங்கிய கோலம் என்றான்

இரண்டு கண்ணாடி
அடுக்கி வைத்து 
தூரங்கள் கடந்து 
அண்ட வெளியின் அழகை 
கண்களால் அளக்க
வைத்தான் ஒருவன்

மற்றொன்றை சார்ந்தும் 
மற்றான் உயிர் 
உரிந்தும் 
நாம் இங்கே பசிக்காய்
போராடுகையில்
அங்கே ஒருவன் 
அந்த போராட்டம் தான் 
பரிணாமத்தை வளர்த்தது என்றான்

எரிகின்ற நெருப்பில்
நீர் சிறிது கொதிக்கையில்
ஆவது அவிக்க மட்டுமல்ல
என்ஜினை இயக்கவும் கூடும் 
என்றான் இன்னொருவன்

பேயென்று பயமுறுத்திய
வியாதிகளை எல்லாம்
பென்சிலின் என்ற 
ஒற்றை உச்சரிப்பில்
பட்டுப் போக செய்தான் 
இன்னும் ஒருவன்

எப்படி வளர்ந்தான்
எப்படி வெளுத்தான்
எப்படி படித்தான் 
என்று ஒவ்வொருவரும்
சுற்றத்தை வியக்க வைக்கையில்
எல்லாம் பொதிந்து கிடக்குது
உன் DNAக் குள்ளே 
என்று உலகை எழுப்பிவிட்டான் 
ஒருவன்

இப்படித்தான் துவங்கியது 
இந்த என்ஜீனியர் 
சகப்தம் 

இன்று.......

கடல்களால் பிரிந்த 
பூமியின் காதலை 
கற்பனைக்கெட்டா
பாலனங்களால் சேர்த்தான் 

வியாபார பிள்ளை 
கப்பல் கால் கொண்டு 
தவழ்ந்து விளையாட 
நிலம் பிளந்து வழி தந்தான் 

நீண்ட காலம்
காத்து பிரிந்து
கிடக்கும் 
விண் மண் காதலை 
சேர்க்க மண்ணுக்கு 
கட்டட விரல்கள் 
கட்டித் தீர்ந்தான்

பூமிப் பெண்ணின்
வனப்பில் மயங்கிப்
போனவன் 
அவள் வளங்கள் ரசிக்க
கோடி கண்களை 
வெளியில் சுற்ற விட்டான்

மனிதனை
பறவை ஆக்கினான் 
நனையாமல் நீரில் 
நீந்த வைத்தான் 
அணுவை பிளந்தான் 

இங்கு என் இதழ்கள்
முனங்கியத்தை 
எழாயிரம் மைல்கள் 
அப்பாலிருக்கும் 
என் காதலின் பூங்காதுகள் 
சேர்க்கும் கைப்பேசித் 
தந்தான் 

எட்டா(வது) கிரகங்கள்
தொட்டு 
முட்டாள் மனிதன்
வாழும் அதாரம் 
தேடித் திரிகிறான் 

நாளை......

கணினிக்குள் காதல் 
சிமுலேடட் காமம்

எட்டாவது பூமி
எண்ணூறு அதிசயம் 

துளி மின்சாரத்தில் 
தொள்ளாயிரம் கிலோமீட்டர் 
பயணம் 

யாருக்காக?

இருக்கும் பூமியை
சுடுகாடாக்கி 
கிடைக்கும் பூமிக்குத் 
தொடரும் போட்டு காத்து கிடக்கும் 
அற்ப பதருக்காய் 

தாய்மை தொலைத்து 
அன்புக் காதல் புனிதம்
தொலைத்து 
நட்பின் வாசம் சுயநல நாற்றமகிப்
போன புளுக்களுக்காய் 

இப்படி கோடி கண்டறிவான் 
தன் ஊரைத் தொலைத்து 
தொலைவில் உறவை பிரிந்து 
மாடாய் உழன்று

தன் நிகரில்லா
புனிதம் 
மனித உருவில் கடவுள் 
பொறியாளன் ... பெருமை பட வேண்டிய பிறப்பு 

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்