Saturday, December 31, 2011

புதுமை எழுது


ஒவ்வொரு உயிரின்
ஜனனத்தின் போதே
அவன்  மரணம் 
நிச்சயிக்கப்படுமாம்

இதோ புத்தாண்டு
பிறப்பினில்
குழந்தை பூமியின்
மரணத்தை 
எழுதிக்கொண்டிருக்கிறான்
மனிதன்  வானவெடிகளால்
மாசாக்க முடிந்த நமக்கு அதை ஒழிக்க நேரம் ரொம்ப தேவை இல்லை...
சிந்திகாட்டும் மூளைகள்
பசுமையாகட்டும் தேசங்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

முடியு(தொடக்க)ம்

பலக்
கல்யாண மேடைகள்
பழையக் காதலின்
சமாதிகள்

வெறும்
முக்கால் பவுன் தாலி
காதலன் இருக்கும்
இருதயப் புறம் தொங்கையில்
முந்நூறு கிலோ சுமை

Friday, December 30, 2011

இரட்டிக்கும் மகிழ்வு

ஒற்றை மகிழ்ச்சி
இரட்டிக்கட்டும்
ஒற்றை வெற்றி 
இரண்டாகட்டும்
என்று சொல்லும்
வருடம்...

காயங்கள் தடங்கல்கள்
இரட்டிக்கையில்
சோர்த்துவிடாதே தோழமையே!
அதை கையாளும் வழிகளும்
இரட்டிக்கும் என்று
சொல்லும் வருஷம்

புன்னகை மலர்
உன்  இதழ் தோட்டத்தில்
மலரட்டும்
இன்பங்கள் வண்டு எனவே
உனைத் தேடி மொய்க்கட்டும்
2012 இன்பகர ஆண்டாகட்டும்

 சாதிகள் கடந்து
நட்பு மலரட்டும்
உழல்கள் இல்லாத
நாடு வளரட்டும்
தோல்விகள் காணாத
காதல்  பூக்கட்டும்
வறுமைகள் மறைந்து
வளம் செழிக்கட்டும்
மாசெல்லாம் களைந்து
சுழல் பசுமையாகட்டும்.

 தமிழ் வாழ்த்தும்
ஆங்கிலம் 
ஆங்கிலப் புத்தாண்டு
எல்லா மதத்தவரும்
பகிரும் வாழ்த்து
இந்தப் புத்தாண்டு
எங்கும் இனிமை இருக்கு
கொஞ்சம் பொருக்கி எடுத்துக்கோ
புத்தாண்டு வாழ்த்துடன் கௌரமி

Thursday, December 29, 2011

சென்னையில் தானே



தொலைப்பேசி ரசிதுகளை 
நாள் தவறாமல்
செலுத்தும் அன்பு மகன்
முதியோர் இல்லத்தில் இருக்கும்
அன்னையை பார்க்கும் நாள்
மறந்து, கடந்து போவது போல்

நாள்  கடந்து
ஆடி மாத காற்றையும்
ஐப்பசி மாத மாரியையும்
மார்கழி மத்தியில் 
தமிழகம் அழைத்து வருது
தானே புயல்

பாசத்தை  விற்றுவிட்டு
கண்துடைப்புக்காய்
10 நூறு ரூபாய் தாள்களை
அன்னை கரங்களில்
திணித்துப் போகும்
பெற்ற பாசம் போல்

விருந்தாடி வந்து
வீட்டு குழந்தைக்கு
வாங்கி வரும் பலகார 
பொட்டலங்கள் போல்

தமிழகத்தை
நனைக்க போராடுறது
புதுவை புறம்
"தானே!" தானாய்


Tuesday, December 27, 2011

கலப்புத் திருமணம்

அறிவே இல்லா
காந்தங்கள்
சாதி மறந்து செய்யுது
கலப்புத் திருமணம்
எதிர் துருவங்களோடு...

ஆறறிவாம் இவனுக்கு
திரிகிறான்
சாதி வெறியோடு

இவ்வளவுதான்



எப்பேர்பட்ட  வீட்டுக்கு
ஆண் வாரிசே ஆகினும்
பிறப்பது என்னவோ
மருத்துவமனைத் தொட்டிலில் தான்

கோடி ரூபாய்
கடிகாரமாகினும்
பாட்டரி  சாகையிலோ
சாவி கொடுக்க மறவையிலோ
நின்றுதானே போகிறது

வங்கிக் கணக்குகளை
எண்ணிக் கொண்டிருப்பவனுக்கும்
வாங்கியக் கடன்களை
எண்ணிக் கொண்டிருப்பவனுக்கும்
மாதத்தின் முப்பதாம் நாள்
நெருக்கடியாகவே நகர்கிறது

விலைநிலத்தை
வீடுமனை ஆக்கி
தங்கத்தில் தட்டு
வாங்கியவனும்
பசிக்கையில் அரிசிச்
சோறு தான் சாப்பிடனும்

எந்த மதமானாலும்
ஏதேதோ சாதி ஆனாலும்
கல்யாணம் என்னவோ
ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே?

தங்கக் காரு
வீட்டில் எட்டுக் 
கொண்டவனாகினும்
இறுதி  ஊர்வலம்
அமரர் ஊர்த்தியில் தான்
சந்தனக்  கட்டிலிலேயே
உறங்கியவன் ஆகினும்
இறுதி உறக்கம் என்னவோ
நெருப்புக் கட்டிலில் தான்
தங்கத்தட்டு அறுசுவை 
விருந்தோ
ஈயத்தட்டு  ஆறுவீட்டு
மிச்சமா
சாப்பிட்டு வளர்ந்த உடம்பு
முடிவது என்னமோ
ஒரு பிடி சாம்பலாய் தான்

 இதற்கு  நடுவே
எதோ வாழும்
பொருள்ளில்லா வாழ்க்கைப்
போராட்டம் எல்லாம்
ஒரு சான் வயிற்றுக்குத்தானே

Monday, December 26, 2011

கண்ணடி கண்மணி

எங்க ஊர்ல
முறப்பொண்ண பாத்துக்
கண்னடிச்சாலே...
முறுக்கு மீச மாமன்
ஆறடி அருவாளுக்கு
வேல வைப்பான்...

இங்கமுகம் தெரியா
பெண்ணும் எனக்கு அனுப்புறா
குறுஞ்செய்தி ஒன்னு
கண்ணடிக்கும் முக சித்திரத்தொடு...

Friday, December 23, 2011

மதம் கடந்த மனமார்ந்த வாழ்த்து


ஊருக்காய் உலகுக்காய்
முள்ளை ஏந்திக்கொள்ள
பூ பிறந்த தினம்

தெய்வம் மனிதனாய்
பிறந்த தினம்

அன்பு  ஒன்றே அழியாதது
என்று புறியாத
மனிதனுக்கு  சொல்ல
கடவுளுக்கே ஆயிரம்
பிறப்பு தேவைப்பட்டது
அதில் ஒரு பிறப்பு
எழுதப்பட்ட நாள்

மண்ணுக்கு சூரியன் வந்தான்
அவன் இருப்பிடத்திருக்கு
விண்மீன் வழி சொன்னான்

கிறிஸ்துமஸ் தாத்தாவின்
பரிசுக்காகவே 
நல்லெண்ணம் பூத்தது
பூக்களின் நெஞ்சினில்

அவர்  வெண் தாடி போல்
பொழிந்திடும் மார்கழிப் பனிபோல்
உள்ளம் வெளுத்தது
மகிழ்ச்சி செழித்தது


நான் வாழ்த்தையிலே
கிறிஸ்தவன் இதழ்கள்
சிரிக்கத்தான் செய்தது

கிறிஸ்த்தவன் கொடுத்த
கேக்கும் எங்கள்
தொண்டைக் குழிக்குள்
இனிக்கத்தான் செய்தது

மதங்கள்  பல
மனங்கள் பல
அனால் உள் 
எழுத முற்படுவது 
அன்பு ஒன்றுதான்
எங்கும் விழைவது
மகிழ்வு ஒன்றுதான்

உடலால் பிரிந்துக்
கிடக்கும் ஓர் உயிர்களே
இங்கு சந்தோசக் கூத்தாடுங்கள்

எல்லோருக்கும் இனிய
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


ஏற்றத்தாழ்வு


கைபேசியின் பைகளில்
பத்து ரூபாய் சேர்க்க முடியா
ஏழை வாழும் ஊரில் தானே

30 ரூபாய்
மாத வாடகையில்
அழைப்பவனின் காதுகளில்
இசை பாய்சுபவனும்
வாழ்கிறான்

காதலும்  காசும்
அருமை அறியாதவனிடம்
குவிந்து சிறுமையாகும்!!

Thursday, December 22, 2011

நிச்சயம்

ஓசை இல்லாமல்
வெடிக்கும் அணுகுண்டு
தெரியுமா?

ஆணின் அழுகை அது

ஆண் சிரித்தால்
ஆயிரம் காரணமிருக்கும்
மீசை துளிர் விட்ட
ஆணின் கன்னங்களில்
தூரிடும் கண்ணீருக்கு 
நிச்சயம் காரணம் பெண்

புதுவரவு

யமலோகத்தில்
வேலை இல்லாத்
திண்டாட்டம்...
காதலின்
வருகையால்...

நல்லவர்கள்  செய்யும்
ஒரே பாவம்...
காதல்

Sunday, December 18, 2011

என் 18 வயதுக் கவிதை


மகரகேதனன்மன்மதன் எனை வதைக்க
நான் முகனைபிரம்மன் நாட
அலரவனும்பிரம்மன் படைக்கிறான்
அழகி ஒருத்தியை

கல்லறையில் பதுங்கிய
கவிஞர்களின் கற்பனைகளை
கருவறையில் பிறக்கவைத்து
உந்தன் உருவம் வரைந்தானோ?

காற்றில் கலந்துவிட்ட
இசைஞர்களின் ஸ்வரங்களை
ஒன்றுதிரட்டி
உந்தன் குரலில் குவித்தானோ?

உலகின் ஆடல்களின்
அசைவுகள்சிலகடைந்தெடுத்து
உந்தன்  நடையழகாய்
உலவ விட்டானோ?

மழை மேகம் கடத்திவந்து
மிருதுவூட்டி ஜொலிப்பூட்டி
உந்தன் குழலாய் செய்தானோ?

 நட்சத்திரம் இரண்டை
வானில் பிரித்தேடுத்து
உந்தன் முகத்தில்
கண்ணெனப் பதித்தானோ?

மின்சாரமின்றி மிளிரும்
கச்சோதம்மின்மினி தான் பிடித்து
திலகமென நெற்றிதனில்
விட்டானோ?

முளரியின்தாமரை இதழ்களில்
சிறிது இதம் கூட்டி
உந்தன் இமைகளை 
இழைத்தானோ?

எந்தன்  இதழ்களின்
நகலெடுத்து
எனை சேரும்
உந்தன் இதழை
நகைக்க வைத்தானோ?

அமிழ்தம் சிறிதெடுத்து
மதுரம்தேன் தான் சேர்த்து
வெளிலிட்டுமத்து கடைந்தெடுத்து
உந்தன் வாயில் உமிழவிட்டானோ?

நீள் மூங்கில் ஒன்றை
இரு தூளை புல்லாங்குழலாக்கி
உந்தன் நாசியாக்கி
எந்தன் சுவாசம் பிரித்தெடுத்து
உனக்கு சுவாசம் கொடுத்தானோ?

இரட்டை பிறப்பாம் நிலவில்
ஒன்றை பிரித்து
மாசழித்து பொடியெடுத்து
உந்தன் வாயில்
புன்னகைக்கும் இரசனமெனபல்
படைத்தானோ?

கால் அடியில்
நீள் வாக்கில்
முத்தொன்று படைக்க
சிப்பிக்கு கட்டளையிட்டு
உந்தன் கழுத்தாக கடைந்தானோ?

மழைத்துளிகளை மின்னலில்
கோர்த்தெடுத்து
உந்தன் கழுத்தில்
மின்னிட விட்டானோ?

ராட்சஸ வாழைத்தண்டு படைத்தெடுத்து
விஸ்வகர்மா செதுக்கித் தர
எழு வபுவாய்உடல் நிறுத்தி
எந்தன்  துடிப்பில் துளியை
அதில் பரப்பி விட்டானோ?

வாயுவினை இருகுழலில்
சிறை பிடித்து உந்தன்
பொற்பாதம் படைத்தானோ?

ஆலங்கட்டிகள் ஆய்ந்தெடுத்து
கொலுசாய் கோர்த்தெடுத்து
உந்தன் கால்களில் கட்டிவிட்டானோ?

இயற்கையை நூர்த்து நூலெடுத்து
வானவில்லில் சாயமெடுத்து
உனக்கென  துகில் நெய்தான்

இப்படி கலம்பகபதினெட்டு
ஆண்டுகளுக்கு முன்னாள்
எனக்கென பிறந்து
கண்முன்னே கலமிரங்கினாய் நீ
காதல் கழுவினால் ஏற்றினாய் என்னை


Friday, December 16, 2011

உறுத்தல்

சுவையான, சூடான
உணவை வாய் நிறைய
அள்ளி வைத்து விட்டு
முழுங்க தவிக்கிற
தருணம்  போல

இல்லை என்றுத் தெரிந்த
உனது நினைவு
மூளைக்குள் கிடந்து
உருளுது...
உறுத்துது...
மறக்க முயலவில்லை நான்...

உயிருக்கு கொள்ளி

 உந்தன் உயிர்
நீங்கிய  பின்பு
உன்  மகன்
செய்ய வேண்டியதை

உன் உயிரை
நீக்க நீயே
என் செய்கிறாய்?


கலி(காதல்) யுகம்

 
காதலின் பதிலுக்காய்
காதலியின் இதழ் பார்த்துக்
காத்திருந்த காலம்போய்

கணிப் பொறியையும்
கைப்பேசியையும் முறைத்து
பார்த்து அன்பின் பதிலுக்கு
காத்திருக்கும் காலம் இது...

அளக்க முடியாக் காதலை
ஒரே ஒரு குறுஞ்செய்தி
முறுவல் சித்திரத்தில்
சொல்லி விடும் அவசர உலகமிது

திறமைக்காரன்


சாக்கை, லெவிஸ் ஜீன்ஸ்
என்று விற்கிறான்...
இன்னும் இந்தியன் தான் 
வர்த்தக வித்தகன்...

காஞ்சுப் போன ரொட்டிய, பிசாவா
வியாபிக்கிறான்...
இன்னும் இந்தியன் தான் 
அறுசுவை சொந்தக்காரன்...

நானும் நீயும் இல்லாம உலகத்துல
ஒரு கம்ப்யூட்டர் சிந்திக்காது...
நாம செஞ்ச ப்ராசசர்
நம்ம ஊர்ல விலை அதிகம்

இத விட பெருமை படும் விஷயம்

உலகத்துல வருமான கணக்கு கேட்காம
வங்கிக் கணக்கு தரும் 
எல்லா வங்கிக்கும்
அதிக வருமானம் தருவது...

இந்திய ஊழல்!! :O

வாலறுந்த

காற்றின் வேகத்தில்
வாலாறுந்த காற்றாடியும்
காதல் சோகத்தில்
வலி  ஏறிய இதயமும்
நம் பேச்சை கேட்கும்
 என்று  சொல்லித் திரிவது...

தூரத்து ஒளியை
வைரமேன்று நம்பும்
மடத்தனம்

Thursday, December 15, 2011

ரகசியக் கசிவு

விசத்தை  குடித்துதான்
உயிர் வாழ்வதாய்
உளறுவான்
காதலில் மட்டும் தான்

இதன் வலிகளில்
சுகத்தை புரிந்ததாய்
பிதற்றுவான்
காதலில்  மட்டும் தான்

அவள்  காதலால்
உலகை வென்றேன் என்றவன்
அவளின் உதறலால்
பிணமாகிப் போவது
காதலில்மட்டும் தான்

அன்பை பொழியும்
கூட்டத்தை விட
வெறுப்பை அள்ளி எறிந்து
அவள்  தந்த
தனிமையை ரசிப்பான்
 காதலில் மட்டும் தான்

வெளிக் கசியாமலே
உன்னை சந்தி
சிரிக்க வைக்கும் யுக்தி
கொண்ட ரகசியம்
காதல் மட்டும் தான்

Monday, December 12, 2011

பாரதி


முருக்கிய மீசையில்
கசிந்தது தீந்தமிழ்

வாளுக்கும் வேலுக்கும்
அஞ்சாத வெள்ளை நரிக்கு
ஐரோப்பா வழி சொன்ன
அன்னைத் தமிழ்

இந்திரப் பிரசத்து
மருமகள் பாஞ்சாலியும்
தமிழில் சபதமிட்டால்
இவன் பேனா வழி

சிந்து தொட்டு...
தென் பெருனை, காவிரி வரை
நதி நீர் இணைந்தது
தேசம் தழைத்தது
இவன் கவிதைகளில்

புதுமைப் பெண்
சாதி அழிவு
தமிழன்னை பேசிய
பாமரத் தமிழ்
இப்படி எழுத்தால்
இயல்பை புரட்டிப் போட்டவன்
இவனன்றோ! ஒராள் படை
வாலெதற்கு...இவன் சொல்லிருக்க

இங்கு இவனது
நாளிதழ் அச்சிட்ட ஓசை
இங்கிலாந்து நடுங்கியது
ஊமை பேனாவும்
சுதந்திர மொழி பேசியது...
பெண்ணை அடக்கிய கைகள்
முறிந்து போனது

தமிழ் பேசிய
ஆரிய வேதம் இவன்
இவனைப் பார்த்து
சமஸ்கிருதமும் தமிழ்ப்பால்
கொண்டது வஞ்சம்

பிரங்கியை நோக்கியும்
அச்சமின்றி மார் நிமிர்த்தலாம்
ஆச்சமில்லை என்று உச்சரித்துப் பார்
காதுக்குள் தேனொழுகும்
தமிழ் சொல்லிக் கேள்
ஆண்மகன் வாழலாம்
வாழ்க்கையாம் பெண்ணை வாழ விடு
சாதிகள் தொலையும்
காலை படி
கல்வித் தொல்லையும் சுகமே

இத்தனைக் கண்டானே
இவனைத் தமிழ் ஐன்ஸ்டீன்
என்பதா?
ஐன்ஸ்டீனை ஜெர்மன் பாரதி
என்பாதா?

Sunday, December 11, 2011

விடலைப் பருவம்


அறியாத வயதின்
எல்லை கடந்து...
அறிவின் எல்லை வரை
அறிய வந்த வயது...

பயமறியா தவறிலையா
இளங் கன்று வயதிது

பூக்கள் கனியாகும் பருவம்
கதிர்கள் முதிர்கின்ற தருணம்

பதின்ம பருவம்
நொடிக்கொரு காதலென்று
பொய்கள் சொல்லி
வலிகள் தந்த வயது
புரியும் வயதில்
காதல் புதிருக்கு
விடைகள் தந்தது...
காதல் ஒற்றை உயிரேன்றது

ஹார்மோன்களின் கலகம்
துணையாய் காதல்
ஒன்று கேட்டு
கண்ணிமைகள் அழையும்
எங்கோ பார்த்த முகம்
என்று புலம்பும்
இதயம் உள்ளே உறுத்தும்
இவள் உன் துணை
என்று சொல்லி
காதல் மலரும் அழகான பருவம்


வள்ளுவனுக்குக் கூட
இருவரி தேவைப் பட்டது
நட்பே உனை சொல்ல
மௌனங்கள் கொண்டு
இரு இருதய தூரம் கடக்கும்
நட்பின் வயது...

பூக்களுக்கு
மகரந்தம் பாரமா?
பறவைக்கு
இறகுகள் பாரமா?
மனிதத்துக்கு
குடும்பம் பாரமோ?
தாயே! உயிர் தகப்பனே! உறவே!
உன் அருமை அறிந்த வயது

பிழையான தமிழும்
அழகான கவிதையாகும் வயது
காதல் வாசம் தாண்டி
பெண்மை பூவில் நட்புத் தேனும்
பருகும் வயது
உலகை அழகாய் பார்க்கும் வயது
நாட்டை பற்றிக் கூட
மூளை நரம்பில் சிந்தை பாயும் வயது

மயூர மென்மையாய்
மேவாயில் கார்மேக மீசையும்
இடியின் இன்னலாய்
தேச இடைஞ்சலை துடைக்கத்
துடிக்கும் வயது...
பயமரியாக் கன்று நீ
என்று உன்னை உலகம்
கோழையாக்கும் வயது
வாயில்லாப் பிள்ளை
என்று சொல்லி
சுயநலமும் பிறழ்ந்த அறமும்
விதைபடும் வயது

இந்த வயது
வோட்டு மையினால்
நாட்டை திருத்தி எழுதும் வயது
குட்டி மனதினுள்
கொள்ளை நல்ல எண்ணம்
அள்ளிக் கொள்ளும் வயது


நீயும் அழகாவாய்
உன்னால் உலகம் அழகாகும்

Saturday, December 10, 2011

தேய்பிறை

வேலைத் தேடுபவன்
பாதம்...

அடிக்கடி
அடக்குக் கடை வரும்
மனையாளின் தாலி...

காதலிப்பவன்
credit card கன்னம்...

அடிக்கடி உரைக்கப் படும்

முதல் இரண்டின்
தேய்மானத்தால் வருமானம்...
மூன்றாம் தேய்மானம்
இன்று செலவு...பாசத்தின் வரவு...

உயிரோ(ஆ)ட்டம்

முடியாது என்று தெரிந்தும்
30 பந்துகளில் தேவைப்படும்
170 ஓட்டத்திற்காய்
பந்துகளை பரதேசம் அனுப்பும்
அணியாளனின் வீரியமாய்

உன்னை நோக்கி
வரும் என் காதல்
இந்த உயிர்
எஞ்சி இருக்கும்
இறுதி நொடி வரை ...

Thursday, December 8, 2011

தீபத் திருநாள்


கார்த்திகை
அறிவியலையே
வியக்க வைக்கும் நாள்

மண்ணின் மீன்கள்...
இதில் மயங்கும் 
விண்ணின்மீன்கள்

~*~*~*~*~*~*~*~*~

மின்சார மலர் சூடி
சுற்றி வரும் பூமிப் பெண்ணை
நிலா முகிலிடுக்கு வழி
பார்த்து ரசிக்கும்
கார்த்திகை இரவு

*~*~*~*~*~*~*~*~*~*

இன்று ஒரு நாள்
சூரியன் பூமியிடம்
ஒளிக் கடன் கேட்கும்

~*~*~*~*~*~*~*~*~

ஐயோ!
பூமியின் தேவதைகளே
இன்று ஒரு சேர சிரித்தீரோ?

~*~*~*~*~*~*~*~*~


ஒரு நாட்டையே
விழாக் கோலம்
சுட்டி விட்டவன்

இருட்டிக் கிடந்த
கோவில் கருவறைக்கே
ஒளி சேர்த்தவன்

ஏனோ இவன்
வாழ்க்கை இன்னும்
இருட்டியேக் கிடக்கிறது
தெருவோர விற்பனைகளில்

ஒளி ஏற்றும்
அகல் வியாபாரம் 
இருட்டிப் போனது
மெழுகுகளின் 
வியாபாரத் தீயில்

பரந்து விரிந்த
மனம் வேண்டும் 
பாடம் சொன்னது அகல்

நிமிர்ந்த நெஞ்சம்
வேண்டும் 
சொன்னது தீபம்

இயற்கையின் வாசம்தான்
சுவாசம் சேர வேண்டும்
(மின்சாரம் போல்)
பொய்க்காத வெளிச்சம் வேண்டும்
வேதம் சொன்னது
கார்த்திகை தினம்

*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

தீபத்தின் ஒளி வெள்ளம்
உங்கள் புன்னகை கடல்
சேரட்டும் ...

தீபத் திருநாள்
நல் வாழ்த்துக்களுடன் GowRami



அலுவல் அளவளாவி


புதையல்கள்
இலக்கியம் சொன்ன
ஏழு மலைகள், ஏழு கடல்கள்
தாண்டி புதைந்து கிடந்தாலும் 
தூரமாய் தெரியாது...

கணிப்பொறி ஊளையிட
கீபோர்டு சல சலக்க
வியாபரா இருள் சூழ்ந்த
விஞ்ஞானக் காட்டுக்குள்

காதலியை பிரிந்து
2 அடி தூரம்
தள்ளி அமர்ந்திருந்தாலும்
தூரமாய்த் தெரியும்

இந்தத் தூரங்கள் எல்லாம்
துகள்கள் ஆனது
என் இமை அசைவும்
அவள் அறியச் செய்தது
அலுவலக அளவளாவி
(office communicator)

விஞ்ஞானியின்
அளப்பரியா கண்டு பிடிப்பு
அனுவைப் பிளந்ததல்ல
கண்டுபிடித்த கைப்பேசி 
அளவளாவி மென்பொருள் வழியே
காதலை இணைத்தது தான்

Wednesday, December 7, 2011

படியாமை


2 அடிக் குறள் போதும்
நிச்சயமாய் தேர்வில் வரும்...
ஆனால் குறளின் ஒரு சீர் கூட
ஏறவில்லை இவன் நாவில்

அதிகம் ஒன்றும் கேட்கவில்லை
5 கூட்டல் 6 எவ்வளவு!
அவ்வளவு தான்
அவன் மதிய உணவில்
பாதி கேட்டது போல் முழித்தான்...
ஆறுமுறை விரல் கொண்டு எண்ணி
ஏழாம் முறை சொன்னான் 9 
என்று அன்று

ஆனால் இன்று!

10 அடி தூர சுவர் நிறைய
எழுதி இருக்கும் உணவு ரகம்
குறை இல்லாமல் சொல்கிறான்
ஹோட்டல்களில்

ஐந்து மேசை
மேசைக்கு நான்காய்
20 நபர்கள் ஆர்டர்
தவறாமல், ரசிது போடுகிறான்

கணினி தோற்றுப் போகும் 
கணிதத்தில் தோற்று
இன்று மேசை துடைக்க
வந்தவனின் கணிதத்தில்

இந்த பசி துரத்தும் ஓட்டத்தில்
தன்னால் நியாபக சக்தி ஏறுது
கணிதம் வசமாகுது
மூடன் இவனுக்கும்

வாழ்கை சுமை
மேலும்
இதில் படியாமை
என்னும் படிக்கல்
சேராமை நன்று!




Tuesday, December 6, 2011

பித்து முத்திப் போச்சு!


இவனைத் தொலைத்தவன்
அவளைத் தேடுகிறான்
கேட்டால் "காதல்" என்கிறான்

தொலைந்த இடம்
தெரியும் என்கிறான்
இருக்கட்டும்
மீட்டு அவள் தருவாளென
தேடவும் மறுக்கிறான்

"அவளுக்காய் 
சாகவும் தயார் என்கிறான்",
வராது என்ற தகிரியமோ?
பாசத்தோடு வளர்த்த
பெற்றோரை மறந்து
அவளுக்காய் வேசமோ?

"காற்றில் மிதந்தேன்"
என்பான்
நியூட்டன் என்ன
முட்டாளோ?
"இவன் நினைத்ததை
அவள் பேசுவாள்"
என்றான்
கிரகாம் பெல் என்ன
கிறுக்கனா?

இவனைப் பார்த்தே
அவள் சிரிப்பதாய்
தினமும் பெருமை வேறு
காரணமில்லாமல்
சிரித்தாளோ அவள்?
அது காதலில்லை
அறிவுக் கொழுந்தே!
அமாவசை நெருங்குகிறது
இருவரில் ஒருவருக்கு
பித்தம் முத்துகிறது!
என்று பொருள்






எழுதாமல் தோற்றேன்!

கணிதம்
சொல்லிக் கொடுத்துவிட்டு
தேர்வறையில்
அறிவியல் கேள்வித்தாளைத்
தருவது போல்!

காதலிக்கத் தானே
சொல்லித் தந்தாய்
இன்று மறப்பதற்கு கேட்கிறாய்

அரும்பும் தருணம்


காதலியின் காது
மடல் தொட்டு
தோல்வி உற்று உதிர்கின்ற
என் காதல் வரிகள் போல்

தினம் தினம்
அலுவலக வாயில்களில்
வங்கிக் கடன்,
வலைப்பூ விலை,
வசிக்கும் வீடு என்று
விளம்பரக் காகிதங்களில்
வேண்டுகொள்களும்
வீசி எறியப்படுகிறது 
குப்பைகளாய்...

காதலின் அருமை
அறியா என் காதலி போல்

அரும்பில் கல்வியறியா
இளசுகளின் வாழ்க்கை
முற்றி விலையற்றுப்
போகிறது குப்பைக்கு
அந்தக் ககிதங்களோடு

Monday, December 5, 2011

என் கவிப் பிள்ளை


கார்விழித் திருடன்
களவாடிக் குவிக்கிறான்
காட்சிகளாய்...
அழகுகளை,
நிகழும் அழுக்குகளை...

கடக்கின்ற காலத்தால்
கற்பனை தூசி படிக்கிறது
குவியல்கள் மேல்
மணக் கருவறைக்குள்

தமிழ் உயிர் சேர்ந்து
காட்சிக் கரு
உருக் கொள்கிறது
கவிதை மழலையாய்

என் மனையாள்
பேனா வயிறு வீங்கா
கற்பம் கொண்டு
பெற்றெடுத்த தமிழ் மகன்
தலை மகன் தழைத்த மகன்

என் கவி மகனின்
முதல் மொழி
காதல்


என் வித்து
பேனா மடிமோதி
தமிழமுதம் தினமுண்டு
வளர்கிறான்
உலகின் கத கதப்பில்

நிகழ்ந்தேரும் அநியாயங்கள்
கிள்ளி விடுகையில்
பேனாவின் தாலாட்டுக்கள்
அவனை உறங்க வைக்கிறது
கவிதைகளாய்
காகிதத் தொட்டிலில்

ஏழை அப்பன் நான்
காகிதத் தொட்டில் தந்தேன்
இன்று புத்தகமாய் வளர்ந்தவன்
அலமாரிக் கட்டில் கேட்கிறான்

சமாளிக்கத் தெரியாமல்
என் மூளைக்கும் வேலைக்கும்
இடையிலே
மின் வலையாலே
ஊஞ்சல் ஒன்று
கட்டிக்கொடுத்து
ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்...

இதோ இன்னும்
சிதறல்கள் வலை ஊஞ்சலின்
ஆட்டத்தின் மயக்கத்தில்
என் கவிக் குழந்தை
வளர்கிறான்




Saturday, December 3, 2011

கண்ணீர்(ரின்) கதை


இதயங்களின் சுவரெங்கும்
சுவடாகிப் போன 
உன் பெயரை

அருவியாய் அழுது
அழித்தொழிக்க விரும்புகிறேன்

கொடுமை!
நேற்று முயற்சியின் தோல்வி
இன்று கண்ணீர் பஞ்சம்




குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்