Wednesday, November 24, 2010

செய்தி தாள்

இவர்களின் ஈனச்
செயலை செய்தியாக்க...
எனக்கு கரும்புள்ளி
செம்புள்ளி குத்தித்
தண்டனை ...

Sunday, November 21, 2010

சரியா? தவறா?

எதுவுமே!
திறக்கப்படும் வரைதான்...
திறக்கப்பட்டால்
ரகசியமேதும் இல்லை ...
தவறேதும் இல்லை ...

இருந்தாலும் தவறுகள் கூட 
ஒன்று கசந்துவிடும் ...
இல்லை திகட்டிவிடும் ...

அரைத் தாசிகள்

உலகம் மொத்தத்தின்
அர்த்தம் சொன்னக் காதலின்
அர்த்தம் தெரியாதவர்களுக்கு ...
கண்களின் எல்லையில்
காத்து நின்ற காதல் ...
இன்று காமத்தில் ஆழ்த்தும்
அரசனாகிப் போனது ...


இப்படி அர்த்தம் தெரியாத
மூடர்கள்(காதலர்கள்) ...
மனதளவுத் தாசிகள் தாமே ?

பாமரக் காதல்

நான்
எழுதப் படிக்கத்
தெரியாதவன்தான்...
நானே ஒருக்
கவிதை படித்தேன் ...
உனை நோக்கிய நொடியில் ...

Real Wireless...எல்லைஇல்லாதது

இணைப்பில்லா முறையில்
செய்திகளை பரிமாறுவதில்
கணிப்பொறிகளையும் மிஞ்சிவிட்டார்கள் 

காதல் பொறியில்
சிக்கிக்கொண்ட காதலர்கள் ...

Saturday, November 20, 2010

அறிவியல் காதல்

நியூட்டன் மட்டும்
காதலித்து இருந்தால்...

கண்ணீரின் விழ்ச்சி
பார்த்துதான் புவி விசையை
கண்டறிந்திருப்பான்...
ஆப்பிளை பார்த்து அல்ல ...

நீ

"நீ" என்ற
ஒரு உயிர்மெய்யைத்
தொலைத்துவிட்டு ...

"நான்" என்ற
ஒரு நூல் மொத்தமும்
பொருளற்றுப் போனதடி ...

தேய்வு

உன்னை தேடித்தேடி
என் விழிகள் அலைவது
என்னவோ
அந்த, ஒரு அங்குலச்
சாலையில் தான்...
அதற்குள்ளாகவே 
அதன் பாதமணிகள்
தேய்ந்து தோற்கிறதே ...
உனைக் காண முடியாமல் 

தொடர் கண்ணீர்

இல்லத்தரசிகள்
அழுவதை விட்டுவிட்டார்கள்...
நெடுங் கதைக்கு
அழுது அழுது கண்ணீர்
தீர்ந்து போனதால்...

மறுபிறப்பு

இப்பிறப்பில்
தவறு செய்தவனை
தண்டிக்க முடியாத
கடவுளின் இயலாமை தான்
மனிதனின் மறுபிறப்பு ...

Monday, November 15, 2010

அழும் ...ஆழம்

உண் பிரிவின்
சோகம் என்னை வாட்டவே ...
அழுது அழுது இன்று
அந்தக் கண்ணீரே
என்காதல் அளம்
கண்டு என்னைக்

காதலிக்குது ...
உண் கண்களுக்கு மட்டுமேன்
என் காதல் ஆழம் தெரிய மறுக்குது ?

சிறை

ஏனோ திருடி
உன்னிடம் என்னை
திருடு கொடுத்துவிட்டு ...
தண்டனையாக உண்
கண்களில் நானே
சிறையும் இருக்கிறேன் ...

Sunday, November 14, 2010

மனிதனின்(கடவுளின்) நாடகம் ?

நாடகம் நடத்துபவன்
என்னவோ கடவுளாக
இருக்கலாம் ...

ஆனால் அதில் கடவுளுக்கு
வேடம் நிர்ணயிப்பதே,
மனிதனும் அவன் மூளையும் தான் ...

உண்டியல்

திருப்திபடாத ஒரேத்
திருவோடு ...
மனிதன் கடவுளுக்கு
வடிவமைத்துக் கொடுத்த
உண்டியல் ...

மனித சாம்ராஜ்யம்
கடவுளையும் விட்டு வைக்கவில்லை
அவனையும் பிச்சைக்காரனாக்கிவிட்டது ...

Saturday, November 13, 2010

இயலாமை

அந்த தூரங்கள்
என்னிடம் தோற்று போனதடி,
என்னை உன்னிடமிருந்துப்
பிரிக்கும் முயற்சியில் ...
கள்ளி நீ மட்டும் எப்படி
நம்புகிறாய் நான் உன்னை
மறப்பேன் என்று ...
மண்டு, சகாராவில் என்றுமே
ரோஜா முளையாதடி ...


என்னாலும் உன்னை மறக்க இயலாதடி ...

முதலாமாவது

உண்மையில் என்னை
அவள் காதலிக்கவில்லையாம்...
பின்பு எதற்காக தந்தாள்...
இந்த வலிஎன்னும் பரிசை...

Friday, November 12, 2010

சண்ணலோரம்

பேருந்தினுள் இருந்து
ஒரு மேகம் என்மீது
சாரல் மழை
பொழிந்தது போலிருந்தது ...

அவள் பார்த்த அந்த
ஒரு பார்வை ...

எட்டா(வது) அதிசயம்

எந்தன் கல் நெஞ்சில்
தவறி விழுந்தால் அந்தக் 
கண்ணாடி பதுமை ...
இங்குதான் முதன் முறை
கண்ணாடி மோதி உடைந்தக்
கல் பார்த்தேன் ...

Thursday, November 11, 2010

வெட்கம்


கணவன் இதழ்
பட்டப் புதுப் பெண்
போல ...
அவளை தீண்டி
வெட்கப்படுகிறது மருதாணி ...

Tuesday, November 9, 2010

தாய்க்கு குழந்தையின் சுமை

தான் பிறந்த
தாய் கருவை
தானே அளிப்பது போலன்றோ ...

தனக்கு பசியாற்றிய
தாய் முலையை தானே
சிதைப்பது போலன்றோ ...

மனிதன் பூமிக்கு இளைப்பது ...

Sunday, November 7, 2010

என்ன அது?

ஓவியம் கொண்டத்
தூரிகையோ ...
அவள் நெற்றியிலாடும்
ஒற்றை முடி ...

மெல்லிய உளியது
என்னை சிலையக்கியது ...

காதல் நவீனம்


நீ நவீனம்
என்று வளர்க்கச்சொன்னத்
தாடி நம் காதல்
சிதைவின் சின்னமாகிப்
போனதடி ...

Tuesday, November 2, 2010

காதல்/நட்பு

நட்பின் போதை
அதிகமாகையில் ...
காதல் வானில்
மிதந்திருபோம் ...

நட்பென்னும் வேலி

பிடித்துதான் ...
நம் காதல் கோடி படரவிடுவோம் ...

தண்டனை ?

காதல் தூக்கில்,
விட்டுப் பிரிந்தால்
தான் மிகவும் வலிக்கிறது ...
என்னை மீண்டும் ஏற்றிக்கொள் ...
அதில் சாவதற்கும் தயார் ...
ஆனால் விலகிவிட அல்ல !...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்