Sunday, July 29, 2012

திரை இசை

இவர்கள்
நாதஸ்வரத்தால் நலம் விசாரித்தார்கள்
கிடாரால் காதல் சொன்னார்கள்
மௌத்  ஆர்கனால் முத்தமிட்டார்கள்

குழலால்  காதலை அழைத்தார்கள்
வயலினால்  அழுதார்கள்
வீணையால் திருமண சந்தையில் விலை போனார்கள்
ஹார்மோனியத்தால் பிச்சை எடுத்தார்கள்

உருமியால் தெய்வத்தை அழைத்தார்கள்
பியானோவால் முன்னால் காதலை பாடினார்கள்
மகுடியால் பாம்பு பிடித்தார்கள்


இப்படி இசையை மேடையேற்றிய
திரையுலகில் இன்று  எல்லாம் தூசியேரி
மூலையில் விட்டு கணினி வாசிக்க
கண்டதெல்லாம் இசையென்கிறான்

புரட்சி  என்று சொல்லிவிட்டு
பார்த்து செய்த வீணையை
புழுதியில் எறிகிறார்கள்

இசை இன்னும் அநாதை ஆகவில்லை
எங்கள் நம்பிக்கைக்கும் உயிர் போகவில்லை ...

Wednesday, July 25, 2012

பாலில் விஷம்



மனிதனை அசுரன் என்று 
நினைத்தானா?
இப்படி அவனுக்கு உணவிடும்
பாற்கடலில்  விஷம் சேர்க்கிறான் மோசக்காரன் - மார்பக புற்று நோய்...

கர்பம் கலைத்த பாவம்
மரபணு என்னும் சோகம் 
புகை போதை என்னும் மீதம் 
இந்த மோகினிகள்தான் 
உங்களுக்கு அதை தருகிறாள்...

இறைவா! உயிரை சுமக்க
அதை கொடுத்துவிட்டு 
அதில் சாவை சுமக்க வைத்தது ஏனோ? - கருப்பை புற்று நோய்...

HPV வைரஸ்* ஒரு வழி நுழைய
சிகரட்  புகை மறு வழி நுழைய
உன்னை மட்டுமால்ல
வரும் சந்ததி வரை வழிக்கும்
இறங்கும் இந்த கூரான கத்தி...
ஆணுறை
HIV இடம் இருந்து காப்பற்றி விட்டு
HPVக்கு உன்னை பலி கொடுக்கும்
அவலமும்  உண்டாம் ...
காமம்
வரதட்சணை
சிசுக் கொலை இது போதாதா
பெண் பூக்களை கசக்க
இந்தக் கரம் வேறா?


சுத்தமான வாழ்க்கை
சுகாதாரமான  பழக்கம்
ஒழுக்கம் பிறழா வழக்கம்
இந்த விரல்கள் ...
மரபணு உன் தொண்டையில்
ஊற்றும் விஷத்தையும் தடுக்கும்...
அதையும் தாண்டி நடந்தால்
விதியை குறை சொல்லலாம்...

வரும்  முன் காப்பதே சிறந்தது.

செயற்கை ஒரு விஷம்
நாமே  நமக்கு விதிக்கும்
மரண தண்டனை அது...

* - HPV பற்றி மேலும் இங்கே படிக்கலாம்
என்னை விட புற்று நோய் பற்றி விக்கிக்கு அதிகம் தெரிகிறது...
பாதிக்கப்படும்  பெண்களின் எண்ணிக்கை, அமெரிக்காவில் மட்டும்...22280 & 15500மரணம்.
 More @ இங்கே





தலைக்கவ(ச)னம்

உன்னை காக்கும்
ஒரே தலைக்கனம் இது

உன் விதியை நீயே
தீர்மானித்துகொள்ளும்
ஒரு வாய்ப்பு

கர்ணனுக்கும் வாய்க்காத
கவசமிது
நாகாஸ்திராமிடம் தப்பிக்க
அர்ஜுனனும் அறியாத ரகசியமிது

இந்த இரும்பு சாவித்திரிக்கும்
உனக்கும் எந்த தாலி பந்தமும்
இல்லாமல் போனாலும்
உனக்காய் எமனை விரட்டுவாள்

உன் மூளைக்குள்
இருக்கும் புத்திசாலித்தனம்
உலகமெங்கும் பரவவேண்டும் தான்
ஆனால், மண்டை நசுங்கி சிதறி அல்ல...

சொர்க்கத்தில் உனக்காய்
இடமிருக்க நரகத்திற்கென்ன அவசரம்... தலைக்கவசம் அணிவோம்...


Pic Courtesy - V-vek Studios

Tuesday, July 24, 2012

காதலித்தானாம்



வாரம் ஒரு நாள் ஷாப்பிங்
முடிச்ச  பின்னால் ஒரு சினிமா
மீதி நாளை சுடும் கடற்கரை மணலில்
தொலைத்திட வேண்டும்

இல்லாத காரணத்திற்கெல்லாம்
புத்தாடை கொடுத்திட வேண்டும்

மாலை என்றால்
மெழுகுதிரி ஒளி விருந்து வேண்டும்

பச்சை சல்வாருக்கு ஏற்ப
கிளிப்பச்சை கம்மல் என்றாலும்
ஆஹா ஓஹோ என வேண்டும்...

நாளெல்லாம் இவளோடு
களி(ழி)த்திருக்கனும்
ஆனாலும் வாழ பங்களா,
போக வர காரு வேணும்

நடுராத்திரி  12 மணிக்கு
தூங்காம  அவள் புலம்ப
கேட்டிருக்க வேண்டும்...

கருவாச்சியாய் இவளிருந்து
ராட்சசியாய் ஆட்சி செய்தாலும்
ராபர்ட் பேட்டிசன் கணவனாகவும்
அலைபாயுதே காதலும் வேண்டும்

சொர்க்கம் கண்டிராத
திருமணம் வேண்டும்
FB வியக்க தேனிலவு வேணும்

வேற என்ன பெருசா
நகை கடை கூட்டி செல்ல
கணவன் வேண்டாம்
கிரெடிட் கார்ட் போதும்...
கோவிலில் பார்த்ததை விட
அரை இஞ்சு பெரிய சரிகையோட
நாலே நாலு புடவை வேணும்...

இவற்றில் ஒன்று குறைந்தாலும்
காதல் இல்லை என அர்த்தம் 
மூன்றாம் பால் சொல்லாததைக்கூட
மூன்று முடிச்சு சொல்லும்
இவ்வளவு தான்சிக்கிவிடும்...

இதை  எல்லாம் விட்டுவிட்டு
இங்க லூசுகளைப் பார்

கவிதை எழுதினானாம்,
சிக்ஸ் பேக் வைத்தானாம்,
பெட்ரோல் தீர அவள் வீட்டை
சுற்றி வந்தானாம்...
தாடி வைத்தானாம்,
மீசை இழந்தானம்,
குருடனுக்கு  உதவினானாம்,
அவள் தெருகுழந்தைக்கு
மிட்டாய் கொடுத்தானாம்,
கால்கடுக்க காத்திருந்தானாம்...
இதற்கு மேலாக காதலித்தானம்

மொழி அறியா ஊரில்
காலை வணக்கம் சொல்வதுகூட
கேட்ட வார்த்தை பேசுவது போல் தான்...

Monday, July 23, 2012

அவசர "முடிவு"



நாம் எல்லாம் ரப்பர் கொடுத்து
மிட்டாய் பங்கு வாங்கிய வயதில்
இன்று இருதயம் கொடுத்து
முத்தம் பரிமாறிக் கொள்கிறார்கள்...
.
தெய்விகம் என்று சொல்லி
தொடங்கிய என்பது சதவிகிதம்
எம்  எம் எஸ் ஸ்கேன்டலாகி
தெருவுக்கு வருகிறது...
பத்திரிகை அனுப்பி
வராதே என்கிறது...
இவள் இல்லாத நேரத்தில்
இன்னொன்று கேட்கிறது...
அமிலம்  ஊற்றி, எரியும்
வஞ்சக நெருப்பு அணைக்கிறது...

மூன்று  முடிச்சு போட்டு
இறுக்கி கட்டியும்
மூன்று மாதம் முழுகாத செய்தியைகூட
விவாகரத்து நீதிமன்றத்தில் தான்
சொல்லிக் கொள்கிறார்கள்...

ஹார்மோன்களின்  சேட்டைகளால்
சேவல் பாராமலே முட்டை வரும்
பத்தினி கொழிகளிடமிருந்து...
அதை  தின்று இன்று
15 16 ல் மலர வேண்டியது
13 க்கு முன்னமே  பற்றிடுது
பெற்றோர்  வயிற்றில் நெருப்பாக...

சென்னை வாழ்க்கை, குடும்பத்தில்
ஐந்தாவது ஆளை சுமையாக  காட்ட
பொண்டாட்டியின் செல்லம்(2வது) ஜிம்மிக்கு,
புடவைக்கு  ஒன்றாய் ஒன்பது  செருப்புக்கு
இருக்கும்  இடம் கூட இல்லாமல் போக
முதியோர் இல்லங்களுக்கு தாழ்
தேவை இல்லாமல் போனது...

தலைக்கவசம் இல்லாத அவசர பயணி...
விலாசம் இல்லாத நகரத்து கடிதம் போல
மனைவி குழந்தை என்னும் சுவர்க்கமிருக்க 
விலாசம் மாறி நரகம் செர்ந்துவிடுகிறார்கள்

உறவுகள் அந்த போல்டருக்குள்
கல்லூரி நினைவுகள் இந்த போல்டருக்குள்
நட்பென்றால்  ஹாய் ஹலோவென
இப்படி எல்லாம் சுருங்கிப் பொய் கிடக்க
வேற்று காகிதத்திற்காய் எல்லாத்தையும் இழக்கிறான்

தன்னை  சீண்டும் வரை
முட்சேடியும் தப்பில்லை என்று
வேதாந்தம் பேசுகிறான் அவன் தலைமேல்
காலப் பறவையின் எச்சத்தொடு
முட்செடியின் விதையும் விழுந்ததை உணராமல்...

இருக்கும்  வாழ்க்கை உணராமல் 
தேடலின்  பொது தொலைக்கிறான்...
ஆயிரம் பேர் நுழைக்கிற அண்டாவுக்குள்
வாழ்க்கை என்னும் அவசரத்தால்
சுண்டு விரல் நுழைக்க வழியின்றி முழிக்கிறான் ...


Thursday, July 19, 2012

தம்பி மணி என்ன?


கிழக்கால சூரியன் வந்துட்டான்
மணி ஆறு ஆச்சு இன்னும் என்ன தூக்கம்...
மாட்டுக்கு  தண்ணி வைக்கணும் எந்திரிடே

உச்சானிக்கு வந்துபுட்டான் சூரியன்
இன்னும் அஞ்சு மூட்டகூட காயு சேரல
அங்க என்னவே பேச்சு...
சட்டு  புட்டுன்னு வேலைய பாருங்க

சோத்துப்பான அடி மாதிரி கருத்து போச்சு வானம்...
இனி என்னடி வயசு பொண்ணுக்கு வெளிய வேல?

சூரியன் பாமரர் கடிகாரம்

கிழக்காம  போற ரயிலு போவுது
மணி நாலாவுது
பரிச்சைக்கு எந்திருச்சு படிலா

மில்லுல சங்கு அடிச்சுருச்சு
மணி எழு ஆவுது
எழுந்திருச்சு பள்ளிக்கூடம் கிளம்புளே

நியூஸு போட்டுட்டாங்க
மணி எட்டாச்சு
இன்னும் சோறு வடிகலியா நீ

இயந்திரங்கள்  தான்
உழைப்பாளர் கடிகாரம் 

அத்திபூக்கள் போட்டச்சோ;
மணி 12 இப்ப கரண்ட் போயிரும்

திருமதி  செல்வம் போட்டுட்டான
மணி  எட்டாச்சு
இப்ப அவுக வந்திருவாக

செல்லமேவே இப்ப தான் போட்டிருக்காங்க
அதுக்குள்ள பசிக்குதுன்னு
ஏன் என் உசிர எடுக்குரிங்க

மாமியார் மருமகள்களின்
கண்ணீர் தான் பெண்கள் கடிகாரம் 

ராஜேஷ் ஆன்லைன் வந்துட்டாரா
மணி பத்து ஆயிருச்சு
இன்னும் ஒரு வேல முடிக்கல

ஸ்வப்னா  டீ பிரேக் கூப்பிடுறா
மணி பதினொண்ணு ஆயிருச்சு
15நிமிசத்துல call இருக்கு

கனடா-ல இருக்குற JohnWingler-க்கு
பிங் பண்ணி சந்தேகம் கேக்கணும்
பூமியின்  அந்தப்பக்கம் என்ன நேரம் இது ?


கடிகாரத்திற்கு மட்டுமல்ல
இவனுக்கும் ஓய்வு கிடையாது
இது மென்பொருள் கடிகாரம்






காதல் சர்வதிகாரம்



தூரத்து தேசத்து ஒற்றன் நீ
வியாபாரியை உள்(ளம்) வந்தாய்

நா(டு) ன் பார்த்தறியா
புதுமைகள் என்னுள்ளே காட்டினாய்

உன் வணிகம் இல்லாமல் நாடு(ன்)
இல்லாத பொருளாதார சரிவை உண்டாக்கினாய்

என் மூளை முச்சந்தியில்
போராட்டாங்கள் வெடித்தது
இரவுப் போராளிகள் தூக்கிலப்பட்டார்கள்

சிரிப்பென்னும் தோட்டாக்கள் செலவிட்டாய்
அன்பின் ஹிம்சையால்
இருதய சிம்மாசனம் கைப்பற்றினாய் 
காதலாட்சியை குடியேற்றினாய்

மொ(மு)த்தமாய் கொடுத்த வரிக்கணக்கை
உதடுகளிடம் கேட்டுப்பார்
உன் புன்னகை சர்வதிகாரத்தை
என் இரவுகளிடம் கேட்டுப்பார்
 உன் ஆட்சியால் வறட்சியே
என் இருதய ஓசை கேட்டுப்பார்

என்னுள்ளே வந்து என்னை கவர்ந்து
என் உரிமைகள் கேட்கும் என்னை
தீவிரவாதி என்றா முத்திரை குத்தினாய்
சிந்திய செந்நீ(கண்ணீ)ரிடம் கேட்டுப்பார்
தீவிரவாதத்தின் பொருள் அது சொல்லும்

சாத்தான் குரல்

சாத்தான்கள் பலநேரம் 
நம்மில் ஒருவராய் நம்மோடு ஒருவராய்
பயணிக்கிறது பேசி சிரிக்கிறது  
தோழமை என்ற சட்டை போட்டு
உந்தன் புத்திக்குள்
சேட்டைகள் செய்யும் அந்த சாத்தான்   
 
"மச்சான் அவ உன்ன தான் பார்க்கிறாள்"
என்று தூண்டும் ஆண் சாத்தான்களை விட
"ஹாய் அஞ்சு மீட் mr . கார்த்திக் "
என்று விதைத்து போகும் பெண் சாத்தான்கள்தான்
உன் வாழ்க்கை வேளாண்மையில்
விசச் செடி நட்டுப் போகும்...
 
அந்த சாத்தானின்
புத்தி என்னும் அன்னம்
உன்னவன் செய்த சிறு சிறு தவறை
தவறை மட்டுமே பிரித்துக் காட்டி
வஞ்ச நஞ்சை உன்னை உண்ண செய்யும்
 
என் கணவன் அங்க இருந்து
இது வாங்கி அது வாங்கி தந்தான்
என்று சொல்லி
அன்பென்னும் பன்னீர் தூவுபவன் மேல்
கொபம்மேன்னும் அமிலம் வீச செய்யும்
 
கிழம்  எதுக்கு சுமையாய் வீட்டில்
என்று சொல்லி
அரண்மனையின் மகராணியை
முதியோர் இல்லத்தின் அகதியாக்கும்
 
இந்த சாத்தானை
நாம் அடையாளம் கண்டிருந்தாலே
உண்மை காதல்கள் பிழந்திருக்காது...
கண்டதும் காதலென்று சொல்லி
உன்னை நெருங்கி இருக்காது...
உன் தாம்பத்தியம் கசந்திருக்கது...
முதியோர் இல்லம் பிறந்திருக்காது...
 
சாத்தான்கள் பலநேரம் 
நம்மில் ஒருவராய் நம்மோடு ஒருவராய்
பயணிக்கிறது பேசி சிரிக்கிறது  
தோழமை என்ற சட்டை போட்டு
 
 
 
 

Monday, July 16, 2012

கற்பு களவு


பெண்ணின் கற்பையும்
ஆண்களின் பெயரையும்
சேர்ந்து கெடுக்கும்
ஆண்மைத்தனம்... கற்பழிப்பு

ஆசை என்னும் மலம் தின்றவன்  
காமம் என்னும் மூத்திரம் குடித்து 
தாகம் தீர்த்தானம்... கற்பழிப்பு 

பெண் கற்பிழந்தாள்
என்றது  உலகம்...
அவன் ஆண்மை இழந்தான் 
என்பது... உண்மை...

ஊசி துளையுள் அனுமதியின்றி
நுழைந்த ஒரு நூல்...
பட்டுத்துணியை கிழித்தது ஏன்?


முட்கள் இல்லாமல் ரோஜா பார்த்ததும் 
விரல்களுக்கு திமிறேறியதோ?
கொடுக்கில்லாத  தேனீ என்பதால் 
எவன் வாய்க்கும் தேன் கேட்குதோ?

இத்தேசம் சூத்திரம் சொன்னது 
உன் மனையாளோடுகளிப்புறத்தான்
தவிர... அடுத்தவளை சீரழிக்க அல்ல!

பரத்தையாகிப்  போனவள் கூட 
மகள் மானம் காக்க போராடையில்
பணத்திற்காய்  மகளை அடுத்தவன் 
பாய்க்கு இறையாக்கும் பேய்களுண்டு
இவன் பசிக்கு ருசி வேண்டும்
அது மகளானாள் என்ன? பிஞ்சு மலாரானால் என்ன?
என்று சொல்லும் மிருகங்களுண்டு
கல்லுக்கு புடவை சுற்றி இருந்தாலும் 
ஆசைக்கு அடிபணிய சொல்லும் 
அசிங்கங்கள் உண்டு... 
இவர்கள்  நடுவில் மாதவம் செய்து 
பிறந்தவளோ பாதாளத்தில் வீழ்கின்றாள்

இங்கே சிவலிங்கம் என்று தெரியாமல் 
கால் தூக்கும் நாய்களுண்டு...
நீ கல்லெடுக்கவிடில் குறைப்பதுவும் கடிக்கும்...


பின்குறிப்பு - ஒரு தோழி முகப்புத்தகத்தில் அசாம் கற்பழிப்பு வழக்கு பற்றி எழுதியது தொடர்ந்து... என் தேடலில் கிடைத்தவை... சட்டத்தின் கண்களில் சிக்கியவை இங்கே... கூகுளின் கண்களில் சிக்கியவை இங்கே... இவைகள் படித்த பின்பு என் கன்னத்தில் ஒரு செருப்படி உணர்ந்தேன்.




Saturday, July 14, 2012

இந்த பெண்களுக்கும் ஏற்கனவே காதலிருக்கு


60களில் வாழ்ந்த என் தாத்தாவின் 
எதிர்த்த வீட்டு தாவணி தேவதை 
மீதான காதல் இன்னும் உயிருடன்
நாட்குறிப்பின் நடுவே இருந்தது...

80களில் வாழ்ந்த பெரியப்பா
பத்தாம் கிளாசு படிக்கையில 
பதினொன்னு படிச்ச வாணி மீதான காதல் 
இன்னும் பச்சையமாய் மார்பின் இடப்பக்கம்

என் இருவத்தொராம் நூற்றாண்டில்...

எதிர்  வீட்டு தாவணி தேவதை
அவள் காதலன் வாங்கித்தந்த
சல்வாருக்கு மாறிப்போனாள்

குளிவிழுக சிரிச்சு  பாசத்தில் நனைச்ச
கல்லூரித் தோழி தன் காதலுக்கு
என்னிடமே கவிதை கேட்டாள்...

என் அத்தை மக கருவாச்சி கூட
கல்லூரி காதலன் வாங்கித் தந்த
பௌடரில் வெளுத்து அழகாகி இருந்தாள்

என் அலுவலகத்தின் பூங்காவில்
காற்று வாங்க போனேன்...
அங்கே செருப்பு கூட ஜோடியாய் இருந்தது
என்னைத் தவிர...

இதோ என்னை கடந்து போகும்
இந்த பெயர் தெரியாத தேவதை
அழகாகத்தான் தெரிகிறாள்...
உன் பாதியென்று கடவுளின் குரலும் கேட்குது...
ஆனால் நிச்சயம் இவளுக்கும் காதல் இருக்கும்...

என் காதல் எங்கே இருக்கும்?

பி.கு. - ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை எதிர்காலத்தை நடுங்க வைக்கும். உணவிற்காக சண்டையிட்ட நிலை போய், பெண்ணிற்காய் சண்டையிடும் நிலை வரும்... பெண் சிசுக் கொலையை நிறுத்துங்கள்.

Sunday, July 8, 2012

அயோக்கியக் கவிஞன்

சப்ப பிகரு மச்சி
என்று வீதிகளில் சொல்லி திரிபவரெல்லாம் 
கருப்பு, குள்ளம், எத்துப் பல்
என்று  திருமணசந்தைகளில் குறைபேசுபவரெல்லாம்
அழகுக்கு இலக்கணம் வகுத்தவறல்ல...

இருந்தும் வெட்கமின்றி
வாய் பேசுபவர் போலே நானும்...

பிளாஸ்டிக்கில் வாங்கிய காய்கறிகள்,
சமைந்து எனக்கு உணவாகி மிச்சங்கள்
அதே பிளாஸ்டிக்கில் குப்பை போகிறது...
இப்படி தினமும் மண்ணை மாசுபடுத்திவிட்டு 
பூமி மாசுபற்றி அக்கறையாய் கவிதை எழுதினேன்...

அம்மாவை நோக வைத்த  நாட்களுண்டு
அப்பா சொல் கேளாது போனதுண்டு...
இன்று அன்னையர் தினம் தந்தையர் தினத்தில்
புகழ்ந்து அவர்களை தள்ளுகிறேன் கவிதைகளாக...

என் கண்கள் மண்ணிற்கு தான்
என் ரத்தம் முழுக்க அழுக்கு தான்...
ஒரு தானம் செய்யாத நானோ...
உடலுறுப்பு தானத்திற்காயும் கவி பாடினேன்...

படிக்காத  உணவக பையன் கூட
என்ன சாப்பிடுரிங்க அண்ணா என்கிறான்...
படித்த நானோ four idli என்றதுண்டு
இருந்தும் சாகும் தமிழை காப்பதாய் கவிதைகள்...

இது மட்டுமில்லை என்னால்
ஒரு குழந்தை தொழிலாளியாகிறான்
ஒருவன் மனதில் காயமடைகிறான்
எரிசக்திகள் நீர் வீணாகுது
வயல் நிலங்கள் வீடாகுது
என்று நீள்கிறது பட்டியல் ...

தவறை செய்பவன் அதைபற்றி
அறிவுரைக்க தகுதி இல்லாதவன்
என்றார் நபிகள் ...
நான் தகுதி இழந்த அயோக்கியன்...
தவறை உணர்கையில்
அயோக்கியன் புனிதமாவதாய்
சொன்னது மகாபாரதம் ...
இன்று தவறுகளை உணர்கிறேன்...


Thursday, July 5, 2012

பார்த்த பார்க்க

பாலில் மீன்கள் வாழும்
என்று தெரிந்து கொண்டது
உன் முகம் பார்த்த பிறகுதான்...

இவ்வளவு மின்சாரம் தயரிக்கவல்ல
குட்டியூண்டு மின் ஆலை
இரண்டு  உன் முகத்தில் 

கோபம், ஆசை, நாணம்
கெஞ்சுதல்; கொஞ்சுதல்; காதல்
என்று  அவள் அதிகம் பேசுவது 
இதழ்களால் இல்லை இமைகளால் தான் 
நான் தட்டாமல் கேட்டுவிடும் கட்டளைகள் அது

குறிப்பு  - நான் தினம் பார்க்கும் அந்த பெயர் தெரியாத அழகிக்காய் இந்த கவி...

#O#O#O#O#O#O#O#O#O#O#O#

பலர் சூடியும் வாடாமல் 
அடுத்தவர் சூடக் கொடுக்க  
முடிந்தது விழி மலர் மட்டும் தான்...

இந்த இரண்டு காசுகள்
என்றும் செல்லாமல் போகாது...
அது ஏன் வீணாய் செல்லரித்துப் 
போக வேண்டும்?

கடவுள் செய்த பிழையை 
திருத்தும் ஒரு வாய்ப்பு 
கண்தானம் செய்கையில் 

குறிப்பு - கண்தானம் பற்றி சங்கர நேத்ராலயா சொல்வது.


திரிஷாவாகிடாத திவ்யாக்கள்

வழுக்கை தலைகளில்
அழகு கேசம் முளைவிடுமா?
அப்படித்தான் முதல் காதலை
இன்னொருத்தியின் பாசம்
முற்றிலும் ஈடு செய்திடுதலும்...

கொடுக்கை இழந்து மாண்டக் குளவி
மீண்டு எழுந்து உயிர் பெறுமா?
அதுபோல் தான் இரண்டாவது வந்தவளை
உண்மைக் காதலென்று பிதற்றுவதுவும்...

குற்றிய பச்சையம் தளும்பின்றி
தொலைந்து போகுமா?
அப்படித்தான் தோற்றக் காதல் மறந்து
தேற்றிக் கொண்டேன் என்பதுவும்...

இரண்டு உடலுக்குள் வாழ முடியுமா?
இரண்டாவதாய் காதலிப்பதும் அப்படித்தான்

இருதயம் கர்ப்பப் பையல்ல
இரண்டு காதலை சிசுவை சுமக்க...
கர்ப்பகிரகம் ஒரு காதல் தான் குடிகொள்ளும்...

வேரோடு புடுங்கியப் பின்
சடமாய் இருக்க நான் மண்ணல்ல
சாதாரண மனிதன்...
எந்த திவ்யாவும் அந்த திரிஷா
ஏற்படுத்திய வெறுமையை நிறைக்க முடியாது
நிறைத்தாலும் ஈடாகாது...

Wednesday, July 4, 2012

முடியாதக் காதல்


அவள் முறைத்துப் பார்த்தும் 
விடாது துரத்தும் ஒரு தலை காதல் கூட,
மச்சான்காரனின் மிரட்டலில் பயப்படும்...
என்னுளிருக்கும் உன் நினைவை
எதை  கொண்டு மிரட்ட விரட்ட?

சம்பள சனிக்கிழமைகளில் 
தூரத்துக் கிராமத்து கடைசி பேருந்தின்
பரவிக் கிடக்கும் சாராய வாசனை  கூட,
வீசும்  காற்றில் கொஞ்ச நேரம் பரதேசம் போகும்...
என்னுள் நிறைந்த உன் நினைவுகளோ,
குருதி பாயா இடம் கூட பரவிக் கிடக்கு!

இனி இதை தொடக் கூடாது
என்ற பெரும் குடிகாரன் கூட,
மறுநாள் வரை காப்பாற்றி விடுகிறான்...
நான் இன்னும் உன்னை மறக்கபோவாதாய் 
உறுதி  மொழியக்கூட முடியாமல் தோல்வியில்...

சயனைடு சுவையை
எழுத முற்படும் மூடனாய்,
உன்னை மறக்கும் முயற்சியில் நான்...
ஒரே வித்தியாசம்...
உயிர் போகமால் மரணித்துக்கிடக்கிறேன்...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்