Thursday, May 20, 2010

நஞ்சு


என் துரதிர்ஷ்டம் ...
நீ வெறுத்த இந்த
உயிரை நஞ்சும் ஏனோ
வெறுக்குதடி ...

பூப்பாதம்

பூப்பாதம் என வர்ணித்த
இந்தக் கயவனுக்கு ...
கனலுக்கும் பூவென்றொரு
பெயருண்டேன்று ...
நினைவு புண்ணால் வடுவிட்டு
உணர்த்தி ... இந்த இலையை
உலர்த்தி ஓடிபோனயோ ...
உயிரே ...

Wednesday, May 19, 2010

வள்ளுவம்

மனிதர்கள் வள்ளுவனை
மதிக்க கற்றுக்கொண்டனர் ...

துன்பத்தில் சிரிக்கிறார்கள் ...
தன் துன்பத்தில் அல்ல
பிறர் துன்பத்தில் ...
முயற்சியில் பயனடைகிறார்கள் ...
தன் முயற்சியில் அல்ல
பிறர் முயற்சியில் ...
திருத்த பட வேண்டிய ஆனால் முடியாத குற்றங்கள் ...

Monday, May 17, 2010

தாய்மை


பிறந்த சிசு ஒவ்வொன்றும் 
பேனாவே இல்லாமல் பிறந்த
நொடியில் தன் தாய்க்குக்
கொடுத்த தாய்மை என்னும் 
கவியை என்று எவன் விழ்த்தினனோ...
அவன்தான் கவிஞன் என்று
மார்தட்டிக் கொள்ளலாம் ...
கரை ஏறாதா கனவுகள் தான் ...

வள்ளுவன் தொலைத்த உவமை

உடுக்கை இழந்த கை 
மட்டும் தான் நட்புகேன்று
வள்ளுவனிடம் சிக்கிய உவமை ...
நம் நட்பை மட்டும் வள்ளுவன் 
பார்த்திருந்தால் அந்த கவி பஞ்சம், 
உவமை பஞ்சம் அன்று அவனுக்கு 
வந்திருக்காது ...

உறவுகள்




உலகத்தின் மொழி போலே
மனிதம் ஒரு மொழி தானே

உறவென்னும் உருவாலே
கோடி வார்த்தைகள் இதில் உண்டு...

அர்த்தங்கள் இல்லாவிடினும
உறவென்னும் அகராதி
இழக்க முடியாத பக்கங்கள் ...உறவுகள் ......

Tuesday, May 4, 2010

திருப்தி

பக்கங்கள் கோடி எழுதிவிட்டேன்
உன்னை எழுதி வர்ணித்த திருப்தி இல்லை

Monday, May 3, 2010

படிக்காதவன்

படிக்காமல் உன்னை படிக்கவைத்து
வரலாறு தெரியாமல் வரலாற்றில் இடம்பிடித்து ...
எங்கள் கல்விக்கு கண் கொடுத்து ...
எங்கள் கண்ணுக்கும் நீர் கொடுத்தாயே ...

அன்புள்ள அப்பா

துடிக்கும் துன்பத்திலும்
புத்தக மூட்டை நான் சுமக்க
மூட்டை நீ சுமக்கிறாய் ...
உன் வியர்வையின் மதிப்பிடம்
கண்டிப்பாக என் தங்கபதக்கங்கள்
தோற்று போகத்தானே செய்யும் ...
நான் திருபி செலுத்தி ஈடு செய்ய முடியாத கடனாளி யகிறேன் உன் அன்பில் ...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்