Saturday, October 30, 2010

முடியுமா?

முடியுமா என்றொரு
கேள்வி இருந்தது ...
மனிதன், நாம்
சிந்திக்கத் தொடங்கும் முன் ...

Thursday, October 28, 2010

மின்சார முத்தம்

உன்னிடம் ஒரு முத்தம்
வாங்கிய நானே நிலத்தில் இல்லை ...

உண் விரலின் கோடி முத்தத்தை
நோடிகொரு முறை ஏற்கும்
அந்தத் தட்டச்சுப் பலகை
எப்படித்தான் தங்குகிறதோ ...
அந்த போதையை ...

Wednesday, October 27, 2010

காதல் வங்கி

உன் காதலைச்
சேமிக்கும் வங்கி
என் இதயம் ...

இங்கே வங்கி என்ன
தில்லு முள்ளு செய்தலும்
ஏமாற்றினாலும் ...
பாதிப்பு என்னவோ வங்கிக்கே ...
வங்கிக்கு மட்டுமே ...  

சுகமானத் தண்டனை

காற்றைக் கட்ட முடியுமா ?
தொட்டுப் போகும் தென்றலை ...
தப்பிக்க முடியாமல்
கட்டிப் போட்டதடி அவள்
கொலுசு ...
என்னவொரு சுகமானத் தண்டனை

வி(டை)(னா)

எரும்பூரியக் கற்களேத் தேய்கிறது...
உண் நினைவின் பாதம் நடந்தால்
என் நெஞ்சம் எப்படித் தேயாமல் இருக்கும் ...

Tuesday, October 26, 2010

பிளாஸ்டிக் காதலி

பிளாஸ்டிக் ...
பூமியின் காதலி ...
அதனால் தான்
பிரியவும் மறுக்கிறாள்
உயிரையும் எடுக்கிறாள் ...

இந்தக் காதலை பிரிப்பது
உண்மையில் பாவமன்று ...

எப்பொழுது

உறங்காமல் உருண்டோடும்
கடிகாரம் கூட அறியாதடி ...
உன்னிடம் நான் காதல்
கொண்ட நொடியை ...

விந்தை

நீரில் முழ்கியும்
முச்சுத் திணறவில்லை ...
காதல் கடலில்
மட்டும் தான் இந்த அதிசயம் ...
 

பூக்களின் தாகம்

ஊடலின் இடையே வரும்
சண்டைகள் தான் காதல்
தேன் சேர்க்கும் தேனிக்கள் ...

இங்கே விந்தை என்னவென்றால்
பூக்கள் நமக்குத்தான் இந்த
தேனிக்கள் தேன் மல்கும் ...

முடிவுகள்

காதலென்பது முடிவுகள் அல்ல
இரண்டு இதயங்களுக்குள் முடிச்சுகள்

எனவே இந்தக் கவியைக்குட
முற்றுப் புள்ளி இன்றி முடிக்கிறேன் ...

Monday, October 25, 2010

மீளாமல்

கவி எழுத
காதலின் ஆழம் தொடத்
தெரிந்த கவிங்கனுக்கு
மீளத் தெரியாமல்
முடிந்து போகிறான் ...
வரிகளின் முற்றுப் புள்ளிகளோடு ...

கா(சு)(கடவுள்)

மனிதனுக்கும்
கடவுளுக்கும்
இடையே உள்ள
தூரத்தை நிர்ணயிப்பது
பணமாகி போன கழி ...
சிறப்பு தரிசனக் கட்டணம்
எனக்குச் சொன்ன ஞானப்பாடம்
 

தொல்விவரி(லி)

காதலியின் காதலுக்கு
வரிகள் எழுதுகையில் தான்
அழகான வரிகளிலும்
தோற்கிறான் கவிஞன் ...

Tuesday, October 19, 2010

நிஜம் நிறைவேறுமா?

பெப்ரவரி அன்னைக்கு
30 ஆம் குழந்தை பிறக்கும்
என்பது உண்மையானால்
உன்னை நான் மறப்பேன்
என்பதும் நடக்கும் ...

தமிழின் ஆகாயத் தாமரையும்
அக்ஷயப் பத்திரமும் நிஜமகுமானால்
நான் உன்னை மறப்பதும் சாத்தியமாகும் ...

Friday, October 8, 2010

அக்னி

சுடுபவன்
சுட பயண்பட்டவன்
இவன் தேடுவது
மனித நலனையா ? நலிவையா ?

தேர்வமுதம்

கசக்கும் மருந்தும்
தேர்வும் ஒன்றுதான் ...

தொண்டை குழியில்
நின்றுகொண்டு கொடுமை
படுத்தும் ...

Friday, October 1, 2010

வலைப்பூக்கள்

நங்கள் புத்தகப்பூச்சிகள் இல்லை,
பூவில் தேன் தேடும் பூக்கள் ...
வலையில் விரும்பி விழும் மீன்கள் ...
தேனும் நஞ்சாகக் கூடாது ...
வளையும் கொலை செய்யக்கூடாது ...
வேண்டுகிறேன் இறைவா நினையே ...

மறுபரிசிலனை

மறுபதிப்புகளில் தவறுகளை
திருத்திக் கொள்ள ...
வாழ்கை புத்தகமும் அல்ல
காதல் பெரிய பிழையும் அல்ல ...
இவை எல்லாம்,
புரிந்தும் ஏன் மறுக்கிறாய் ...
புதிராய் என்னை குழப்புகிறாய் ...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்