கார் முகில் போர்த்திய வெண்மதியே...
மணியோசைக்கு அதிரும் கோபுர புறாவை
அதிர்ந்து அதிருந்து அமரும் பூ விழியே ...
பன்னீர் பூவாய் வெட்க நகையோடு
நிலன் நோகும் பூமுகமே ...
பூமி நோகா சுவடு தெரியா
நடையிடும் பட்டு பாதம் ...
உயிர் தனியாய் நடந்து போக
உடல் அதை வேடிக்கை பார்ப்பது போல்
உறைந்து போகிறேன் ...
உந்தன் பாதைகளில்
நீ விதைத்து போனது சுவடுகள் மட்டும் அல்ல
என் உயிர் முடிச்சுகளும் தான் ...
No comments:
Post a Comment