Wednesday, September 29, 2010

கொலைகாரன்

தோல்வியுற்ற நான்
விஷம் தேடத்தேவை இல்லை
உண் சொற்களே
அந்த வேலையை முடித்துவிட்டது ...

சிற்பம்



உளியின் வலிகின்ற
முத்தத்தை சுகத்தோடு
ஏற்ற காதலின் ஜொலிப்புதான்
சிற்பம் ...

Monday, September 27, 2010

ஜன்னலோர இருக்கை

இதை தங்கைக்கு
விட்டுக் கொடுத்த சுகத்தை
தென்றலும் தந்திடுமோ...

இதற்கான போராட்டத்தில் தெரியும்
நம் நாட்டின் ஒற்றுமை ...

உலகின் அத்தனை முகங்களையும்
 நமக்கென்று திரையிடும்
சிறு திரைக்கூடம் ...

மின்விளக்கு

மின்சாரம் உண்டு
வாழ்பவன் உண்டோ ...
வாழ்கிறான் நமக்காக
ஒருவன் ...

மின்வெட்டு



நம் உயிரை எடுக்க
எடுத்துவிடுகிறார்கள் ...
மின்விளக்குகளின் உயிர்களை ...

விலங்கிடப்பட்ட பூக்கள்


பூக்கள் மோதி
கற்கள் உடையும் அதிசயம்...
இது வரமல்ல
என் தாய் நாட்டின் சாபம் ...

sms காதலி



செய்தியின் நீளம் போலத்தான்
இந்தக் காதலின் களமும் ...

Friday, September 17, 2010

கலை...ஒரு புது கோணம்

ஆயிரம் கரங்கள்
கொண்டு அந்தக் கதிரவன்
உதய ஓயியம் தீட்டுகையில் ...
அது அழகென்று
வர்ணிப்பதே விந்தையடி ...
கலைஞனின் இருக்கர ஓவியத்திற்கு ஈடாகுமா அது...

வீரமரணம்

என் பேனாவின்
வீர மரணங்கள்...
உனை எழுதி தீரையிலே ...

எங்கே என் மொழி

முறிந்த வில்லெய்யும்
கணைபோல் தான்
உன்னை பிரிந்த பிறகு
என் நாவில் எழும்
என் மொழிகள் திறமின்றி
வீழ்கிறதே...

Wednesday, September 15, 2010

தோல்வி

புருவ வில்லில் நாணேற்றி
மண்மத கணை தான் தொடுத்து
என்னை காதல் களத்தில் விழ்த்தி
கொலுசில் சிறை அடைத்து ...
காதோரம் சரிந்த கரிசல் அருவியில்
தூக்கில் ஏற்றினாள்...
உயிர் போகும் முன்னர் அவிழ்த்தெடுத்து
துடிக்க துடிக்க உயிரோடு அவள் நெஞ்சில் என்னை புதைத்தாள்...

Saturday, September 4, 2010

அறிவிதையம்

விஞ்ஞானிகள்
அன்று இல்லாமல்
இருந்து இருந்தால் ...
உன் பாதையை விட்டு
விலகும் பொழுது
என் இதயம் உன் திசையில்
இர்க்கப்படும் விந்தை கண்டே
                           நான்தான் கண்டுபிடித்திருப்பேன்
                           அந்தக் காந்த விசையை ...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்