Wednesday, May 25, 2011

வேலி

என் ஆறாம்
அறிவின் ஆளுமை
பார்த்தாயா?

உன்னை
உன் வீட்டுக்குள்
நடமாட தடை விதித்து
சிறை வைத்தேன்
மின்சார வேலியால்...

விலங்கிடம் மனிதன் 

Monday, May 23, 2011

கோடை மழை



வெயிலின்
கொடுமை பார்
வருண பகவானின்
கல் நெஞ்சமும்
கரைகிறது...
கோடை மழையாய் 

Wednesday, May 18, 2011

என் தோழமை

தூரத்து உடலில்
நமக்காய்
துடிக்கும் ஓர் இதயம்

இன்னொரு உடலில்
வாழும் என்
உயிர்

என் தோழமை 

கற்பனை அருவி

கல் மேகம்
சிந்தும்
மழையோ!

கல்லுக்கு அப்படி
என்ன சோகம்
இவ்வளவு கண்ணீர்


Saturday, May 14, 2011

டிஜிட்டல் உலகம்

எதிர் வரும்
மின்னனு உலகத்தில்

டிஜிட்டல் தாயும்
சிமுலேட்டட்  பாசம்
மட்டும் தான்
சந்தையில் கிடைக்காத
கிடைத்தாலும்
நிஜத்தை நிகர் செய்ய
முடியாதது...

மூன்றாம் கண்

உடலை பிரிந்து
நிழல் வாழ முடியாதோ?

இதோ அறிவியலை
பொய்யாக்கியது
என் மூன்றாம் கண்ணின்
பார்வையாம்

நிழல் படம் 

தினம் மலர்

இது கதிரின்
கண் தீண்டாமல்
மலர்ந்த
காகித மலர்

மொழி மனம் வீசும்
காகித மலர் 

செயற்கை

பெற்றெடுத்த தாய்க்கு
விஷமூட்டிவிட்டு

அவள் முலையில்
பால் தேடும்
மடமைதானே

இந்த செயற்கை உரம்

சாதனை

இறைவனால்கூட
முடியாத அமைதியை
இதோ தமிழக அரசு
தினம் தினம் சாதிக்கிறது
இரண்டு மணிநேரம் மட்டும்
மின்வெட்டால் 

Tuesday, May 10, 2011

தலையாய தானம்

இதோ
இரண்டாமுறை
ஓர் உடலில்
உயிர் புகுத்தும்
தெய்விகத் தன்மை
அடைந்தான் மனிதன்

ரத்த தானத்தால்





Its not the donation, Its an revoking an life from death

Know more about Blood donation...
Be aware and Be ready
http://en.wikipedia.org/wiki/Blood_donation


ஒருவனின் வேண்டுகோள்

அனுப்புனர்
                ஒருவன்
                நவ நாகரிக உலகம்

பெறுநர்
                 பெற்றோர்
                  நிஜத்தில்-நவ நாகரிக உலகம்
                  நம்புவது-ஏமாற்றும் உலகம்

ஐயா,

           பொருள்- காதல் திருமணம் அதரவு வேண்டி
            குறிப்பு- ஏறி வரும் தங்க விலை
                              www.goldenchennai.com

ஏறி வருவது தங்க விலை மட்டுமல்ல
கல்யாண சந்தையின் விலைவாசியும் தான்
இன்னும்
உங்களுக்கு உண்மை காதல் மேல்
நம்பிக்கை வர விலையோ?

சாதி என்னும் சுடுகாட்டில்
பணம் என்னும் மணல் போட்டு
உங்கள் மகள்களை
உயிரோடு புதைப்பதன்  பெயர்தான்
ஒழுக்கமோ? நாகரிகமோ? கலாச்சாரமோ?

இப்போதும்
எதிர்பார்ப்பு இன்றி தான் இருக்கிறோம்
அப்பாவிக் காதலர்கள்
எங்களை நம்பலமஅல்லவா
உண்மைக காதலை அதரிக்கலமல்லவா?

                                     இப்படிக்கு,
                          பெண்ணிடம் உண்மை
                       அன்பை மட்டும் எதிர்பார்க்கும்
                                         
                                        ஒருவன் 

இயந்திரக் குதிரை


காற்றை உண்டு
கடிந்து ஓடும்
இயந்திரக் குதிரை

மனியோசைதான்
இதன் கனைப்பு


கவிக்கு உயிர் கொடுத்த நிழல் படம்: ஜாவா அருண் 

பாவமா? பவித்திரமா?

மருத்துவமனை ஊசிக்கு 
பவக்கணக்கிடுவதுதான்
சித்திரக்குப்தனுக்கு 
மிக கடினமான வேலை 

அது உண்மையில் செய்வது 
பாவமா? பவித்திரமா?

Monday, May 9, 2011

போட்டி!

மாமியார்களுக்கும்
மங்கா சுவர்ணத்திர்க்கும்
ஒரு போட்டி 

எண்ணின் அளவில் 
உச்சம் எட்டுவது

நான் வாங்கும் அளவா?
இல்லை உன்னை விற்கும் அளவா?

இதோ நடுங்கும் பெண் நிலையும்
நடுங்க வைக்கும் பொண்ணின் விலையும் 

எதோ?

உண்மையில்
இரு மன இணைவு
சொர்கத்தில் நிச்சயிக்கப்
படுகின்றதேன்றால்

நம்மை எல்லாம்
இயக்குவது கடவுளென்றால்

காதல் தோல்விகள் ஒன்று
கடவுளின் குற்றமாகத்தானே
இருந்திருக்க வேண்டும்

இல்லை நம் வாழ்கை
கடவுளின்
பொழுது போக்கு
சதுரங்கமாக வேண்டும்

Friday, May 6, 2011

அர்க்கமேடிசை என்று படித்தாய் ?

நிறைந்திட்டக் கனத்திற்கு
சமமாய் உயிரை 
வெளியேற்றும் காதலே!

நீ அர்க்கமேடிசின் 
தத்துவம் என்று படித்தாய் 

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்