Friday, April 23, 2010

நினைவுகள்

உன்னை மறக்க சொல்லிவிட்டாய்
அன்று முதல் எங்கும் உன்முகம் ...
எதிலும் உன் பெயர் ...
இப்பொழுதுதான் நான் உன்னை
முன்பைவிட அதிக முறை நினைக்கிறன் ...

"மறந்துவிடு"


தமிழின் அழகை எனக்கு
நீ அறிமுகம் செய்த பொழுது
தமிழை விரும்பிய நான் ...
உன்னால் இன்று தமிழில்
ஒரு வார்த்தையை வெறுக்கிறேன்
"மறந்துவிடு"

Friday, April 9, 2010

இதழ் பயணம்

 உந்தன் இதழ் பாதம்
 பயணித்த எந்தன் கன்னத்துச் சாலைகளில்
 வேறு எவள் இதழும் பயணிக்கக்
 கூடாது என்று தாடி முட்களால்
 வேலியிட்டேன் ...

Thursday, April 8, 2010

நல்லதொரு வருத்தம்

உன்னை ரோஜாவக்கிய  கவிதைக்காக
முதன் முதல் வருந்துகிறேன் ...
இன்று புயல் காற்றில்
எனவிட்டு ரோஜாச் செடி
சிக்கி கொண்ட பொழுது ...

கல்லறை பூ



வாடிய புது மலருக்கு
வாடாத புது மலர் ...
காதலின் கைகளால்

ஏனோ

உனை ...
காணமல் உதித்த சூரியன்
ஏனோ என்னக்கு பகலை
இரவை கட்டுதடி ...

குழப்பம்


மல்லிகை மலர் சூடி
நீ வருகையிலே ...
உன்னால் மல்லிக்கு அழகா?
இல்லை மல்லியால்  உனக்கு அழகா?
தினம் தினம் குழம்பி போகிறேன் ...

இதழே



மழையிலடிய ரோஜா போலவே ...
பெரு வெற்றிக்கு கூட
சிறு புன்னகை செய்யும் உன் இதழ் ...

துலாபாரம்


இறைவனை வேண்டினேன் ...
இயற்கையிடம் கெஞ்சினேன் ...
உனக்கு இணையாக துலபரதிற்கு
பொருள் கேட்டு ...

வியாபாரம்


என் காதல்
கண்ணை விற்று விட்டு
கண்ணீர் வாங்கிய சோகம் ...
என்ன லாபங்கள் வந்தால் கூட
சந்தோசம் இருக்காது ...

முகவரி - முதல்வரி

என் முகவரி நீ என்று
தெரிந்த பின் தான்
நான் முதன் முதலில்
தொலைந்து போகிறேன் ...

நினைவுச் சிலுவை



சிலுவையில் சிக்குண்ட ஏசுவிற்குக் கூட
உயிர்த்து எழ புனித ஞாயிறு ஒன்று இருந்தது...
உன் நினைவுகளில் அறைய பட்ட எனக்கு
அந்த புனித ஞாயிறு என்றென்று சொல்லடி

Friday, April 2, 2010

பணம் பத்தும் செய்யும்

பள்ளங்கள் நோக்கி வெள்ளங்கள்
பாய்ந்த கலங்கள் ஓய்ந்துவிட்டது
இன்று பணம் இருக்கும் திசை நோக்கித்தான்
பண்ணீர் நதிகள் கூட பாய்கின்றது ...

நாணயம்


சுற்றி வருவதால் வட்ட வடிவம்
நாணயம்
அது மனிதனையே சுற்ற வைக்கிறது
நா நயம் இல்லததலா

அறிவு




என் அறிவின் தேடல்கள்
நான் அதன் விழைவில்
தொலைந்து போவதற்கே ...

விமானப் புகை

எழுத்தில்லாமல் புகை
மையினால் வானக் காகிதத்தில் ...
விமானத்தின் வழிச் சுவடால் ...

31/03/2010

முடிந்தது மார்ச் மாதம் மட்டுமல்ல
உன் பிரிவால் எந்தன் வாழ்கையும் தான்...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்