அ – அரசியல்...
தேசத்து புனித
நதிபோலிது...
ம(மா)க்களின் ஆறாம்அறிவு
நாசமாக்கியது இதை...
நதிபோலிது...
ம(மா)க்களின் ஆறாம்அறிவு
நாசமாக்கியது இதை...
ஆ – ஆன்மிகம்
கோயிலையே
மறைக்கும் அளவு
சாமியாரைப் பற்றிய
சாமியாரைப் பற்றிய
விளம்பரப் பலகை பார்கையிலே...
“பிள்ளையாரே எலியிலே
போகையிலே...பூசாரிக்கு ____ கேக்குதோ”
என்பது நியாபகம் வந்தது..
இல்லை கீதை சொன்ன
மனித உருவில்
கடவுள் அவதறிப்பான்
என்பதை தவறாய்
உணர்ந்தனரோ...
இ – இடைவெளி
ஆக்குவதோர் இயந்திரம்
ஆட்டி வைப்பதோர்
இயந்திரம்(உயிருள்ள!)...
இரண்டுக்கும் நூலளவு
இயந்திரம்(உயிருள்ள!)...
இரண்டுக்கும் நூலளவு
இடைவெளி...ஆறாம்அறிவு
ஈ – ஈகை
தர்மம் தலைகாக்கும்
இது கலியுகத்திற்குத் தகா!
இங்கே தர்மம் செய்தவனும்
ஒருநாள் யாசகம் கேட்பான்...
இதோ வாழ இடம் கொடுத்த
பூமி உயிர் யாசகம் கேட்பதுபோல்...
உ – உண்டியல்
திருப்திபடாத ஒரே
திருவோடு...
மனிதன் கடவுளை
பிச்சைகாரனாக்கி
கையில் கொடுத்த
உண்டியல்...
ஊ – ஊணம்
அநீதியை எதிர்த்துப் பேசா நா...
நீதி துடிதுடித்து சாக காணும் கண்...
தீய பாதையில் அடியிடும் கால்...
அக்கிரமத்திற்கு மடுக்கும் செவி...
உலகத்தை சிதைக்கும் கரம்...
உண்மையை சிந்திக்காத மூளை...
எ – எட்டு
உலகில்...
மனிதம்-அமைதி-நட்பு-தாய்மை
நன்மையை விளையும்
நா-சிந்தணை-கல்வி-செல்வம் ஆகிய
எட்டா கனிகள் எட்டை எட்ட முயல்.
ஏ – ஏலம்
நாகரிக உலகம் ஒரு
விசித்திர சந்தை...
இங்கே மனிதன் தன்னைத்தானே
கொத்தடிமையாய் ஏலமிடுகிறான்...
ஒ – ஒவ்வா!
பொது இடத்திலே உண்மை (அரசியல்) பேச,
தாயை மழலையால் “அம்மா” என அழைக்க,
பெண்களில் சிதையையும் ஆண்களில்
ராமனையும் தேட ஒவ்வா கழியுகமிது...
ராமனையும் தேட ஒவ்வா கழியுகமிது...
ஓ – ஓட்டம்
வாழ்க்கையுமோர் ஓட்டம் தான்
இங்கே உண்மையாண வெற்றிக்கு
எல்லை கோட்டை தாண்டிதான்
வேகம் மேலும் அதிகரிக்கனும்...
ஐ – ஐயம்
இவன் காதலின்
காதலின் மெய் பொருள்
காதலின் மெய் பொருள்
உணர்வான், எந்நாள்?
இளமையின் உண்மை
இலக்குணர் நாளென்ரோ?
ஔ – ஔவை
ஔவையை போல
கன்னியிலேயே கிழவியாகிருப்பாளோ
தமிழண்ணை...அதன் விரைவில் அவளை
மரணம் துரத்துகிறது...
ஃ
முற்றுப்புள்ளியாய்
மூன்று புள்ளி வந்தது கவிக்கு...
என் கவி முடிகிறதென்றால்
அவள் சிரிக்கவில்லை என்று
பொருள்...
awesuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuum...........da
ReplyDelete