Tuesday, March 8, 2011

மாதராய் பிறந்திட மாதவம் செய்தவளே

அம்பொன்று குறியடைய
நானொன்று தேவை
ஆண்மகனே நீ
ஜெயமடைய பெண்ணொன்று தேவை...

+ கருப்பையில் பாரம்
சுமந்து பூமிக்கு உவமையானால் 
+ தமக்கையாய், தங்கையை 
விட்டில் ஒரு தோழி நகலாய்
வலம் வந்தால் 
+ காதலி என்றொரு பெயரில்
எனை இரண்டமொருமுறை 
ஈன்றேண்டுத்தால் 

இவைகள் எல்லாம் முடியும்
உறவுகள்...

எதிர்பார்ப்பு இல்லாமல்
பாலை தித்திக்க வைக்கும்
நெருப்பு போல... 
என் வயதுத் தாயாய்,
அதட்டாத தந்தையாய்,
மூளையில் இருள் விளக்கும் 
புது அறிவாய்...
என்னை நிதம் காக்கும் தோழி...
நம்மை காலன் நினைத்தாலும்
பிரிக்க முடியாதடி...


இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

      

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்