Tuesday, May 8, 2012

இரயில் காதல் - 2

பேருந்துக் காதல் - 1 | 2 | 3 | இரயில் காதல் - 1


  உறக்கத்தை RAC பயணம் புடுங்கி கொண்டு போக...
உயிரை, அழகி அவள் புடுங்கி போனாள்...

கருப்பு நிலவோ! கரிய தங்கமோ?
இப்படி  கருப்பு உவமைகளைத்
தேட  வைத்த கருப்(பு அழகி)பி அவள்

சன்னலோரத்தில்  அவள் இருக்க
இரவு நேரத்தில் வேடிக்கை பார்த்த
முதல் அசடு நான்...

TTR கேட்ட அடையாள அட்டைக்கு
உன்னை விரல் நீட்டி கட்டுகிறேன்...
என்  அடையாளம் நீயாகிப் போனாய்...

இரயிலின் நித்திரைப் பெட்டியில்
மெத்தை இருக்கை தானே!!
அதை முள் படுக்கையாக்கிப் போனாள்...



நான் உறங்க தன் இடத்தை கொடுத்துவிட்டு
தூக்கத்தை  தூக்கிக்கொண்டு போனால் விழுப்புரத்துக்காரி...

இரவு  முழுக்க
ஒரேக் கவிதையை
திரும்பத் திரும்ப படித்தேன்...
ஏனோ அவள் போன நொடியில்
மறந்து போனதை உணர்ந்தேன்...
நெஞ்சம் கனத்தது பிரிவில்...


பின்குறிப்பு : நல்ல வேளையாய் நான் ரசித்து வந்ததை அவள் தந்தை பார்க்கவில்லை... பித்தன் போல் தனியாய் சிரித்து ரசித்ததை அவள் பார்க்கவில்லை... இன்னும் அவள் இந்த கவிதை படிக்கவில்லை... இதில் எது நடந்திருந்தாலோ! நடந்தாலோ நான் தொலைந்தேன்...

6 comments:

  1. கவிதைப்பயணம் தொடரட்டும்.அடிக்கடி RAC பயணம் போவீர்கள் போல... அதென்னது RAC ??

    ReplyDelete
    Replies
    1. RAC reserved against cancellation. oru sleeper (lower berth) rendu peru share pannanum...

      Delete
  2. கவிதை
    ம்ம்ம்.... அருமை அருமை

    ReplyDelete
  3. காலை ரயிலில் ஏறி மாலை இறங்கும் முன் காதலில் விழுந்த அனுபவம் எனக்கு உண்டு!
    ரசித்தேன்

    ReplyDelete
  4. நன்றி அண்ணா :)

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்