அங்கு காலியாக இருந்தது
உன் இருக்கை மட்டுமல்ல
என் வாழ்க்கையும் தான்...
என்னைக் காயப்படுத்த நீ
அந்த இடத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை
உன் இன்மை தான் என்னை அதிகம் காயப்படுத்தும்
நரகம் எது என்று என்றாவது
உன்னிடம் கேட்டேனா நான்...
பின் எதற்கு நீ இல்லாத இடம் அது என்று
எடுத்துக்காட்டோடு விளக்கம் எதற்கு?
உனதை சேர்த்து இரு உயிர் நான் சுமந்தும்
நீ இல்லாத இடத்தில் பிணம் தான் நான்...
என் இசைப்பட்டியலை காதலால் நிரப்பியவள்
இன்று என் சோகத்தால் நிரப்புகிறாய்...உன்னால் என் வாழ்கை பலருக்கு
ஆச்சரிய குறியாயிற்று...
இன்று எனக்கே கேள்விக் குறியாயிற்று
விடை நீ என்று தெரிந்த பிறகு
குழப்பும் புதிரானேன் நான்...
அவிழ்த்திட வா...
காதலித்துப் பிரியும் வலி சொல்லும் கவிதை.நன்று.
ReplyDeleteவலி தான் கொஞ்சம் கொடிது:(
Deleteபிரிவில் வரும் ஆற்றாமை மிகவும் கொடிது!
ReplyDeleteகவிதை அருமை!
சா இராமாநுசம்
நன்றி அண்ணா :)
Deleteபிரிவு
ReplyDelete''வலி'' கொடியது
மிகக் கொடிது. நன்றி அண்ணா :)
ReplyDelete