Monday, February 28, 2011

உன் பிரிவை

கதிரினைத் துரத்திய 
காரிருள் போல்...
உன் நினைவுகளை
துரத்திட முயலுது
என் நெஞ்சம்...
12 மணிநேரமாவது
இரவு ஜெயிக்கும்...
ஒரு நொடிகுட
என் நெஞ்சால் ஜெயிக்கவும் முடியவில்லை...
உன் பிரிவை சீரணிக்கவும்  முடியவில்லை...  

Thursday, February 24, 2011

என் காதல்?

களமிறங்கும் முன்னே
சதுரங்கத்தில் இந்த 
ராஜாவுக்கு checkmate
வைக்கப்பட்டிருந்தால்?
என் காதலும் அப்படித்தான்
களமிறங்கும் நேரம்...
கண்சிமிட்டும் நிமிடம்...
வெளிப்படுத்தும் முன்னர் விழ்ந்தேன்

Sunday, February 20, 2011

காதல் என்னும் நூலகம்

காதல் என்னும் நூலகத்தில்
பார்வை என்னும் முத்திரைகுத்தி
கடனளித்தால் எனக்கு
வலி என்னும் புத்தகத்தை...
படித்து புரிந்தது
வாழ்கை முழுதும்...    

Saturday, February 19, 2011

அழகாய்

வெட்கிச் சிவந்த 
பூமகள் அவள் அள்ளிக் கடித்தால்
சங்கிலியை...
தங்கங்கள்கூட சுகமாக நொறுங்குகிறது
அவள் பல் பட்டு முக்தி அடைந்ததாய்...

மூடன் அவன்...ஊமை அவன்...
ஆடை அட்டை தான் திறந்து...
கட்டறுக் கவிஞன்
அவள் மேனி மீது எழுதித் தீர்க்கிறான் 
"சிலிர்ப்பு" என்னும் கவிதையை

கார்குழல் அருவி ஒன்று...
அவளை அழகாய், அலைமகளாய் 
காட்ட தினம் தினம் விழுந்து
தற்கொலை செய்து கொள்கிறது...
அவள் முதுகுபுறமாய்...

அலைநீரில் கயிர் திரிக்க முடியுமா...
திரித்தால் அவள்...அந்த குழலருவியில் 
என்னை தூக்கிலிட....   
 



 

Tuesday, February 15, 2011

Feb 14 special - Love KILLS until U MISUSE/MISHANDLE it

 உலை எதுவும் இல்லாமல்
எரிபொருளும் ஊற்றாமல்
பகிறேன்று எரிந்து,
எரியும் நெருப்பில் குளிர் காயும்
இளமையின் பூந்தோட்டம்...

காதலேன்றொரு
புது மொழி பேசி
ஊமைகாற்றும் உலவி வரும்...

இது கண்காணா கடவுளிது
என்னை வாழவைக்கும் சுவசமிது
என்பவன் ஒருபுறம்...
முச்சுத் திணற அமிழ்த்திக்
கொள்ளும் விசக் கிணறு
என்பவன் மறுபுறம்...

உண்மையை பேசையிலே
காதல் வலியின்றி உடல் பாய்ந்து
உயிர் போகா விசித்திரம்
சொல்லும் மின்சாரம்...
மின்சாரமல்லவா?
தவறான கையாடலில்
உயிர்கொள்ளும்...

தவரரியா நிரபராதி காதல்...




ஈழக்(அழு)குரல்

"விழ்ந்திடும் விருட்சத்தின்
அடியிளெல்லாம் சிசு ஒன்று முளைத்தேளும் "
என்று கோடி வீர வசனங்கள் பேசினும்...
தாய் இறந்த கண்ணீரில்
ஒவ்வொரு வீரனும் கோழை ஆகிறான் 

விசித்திரகராதி

வாழ்கை என்னும் பொருளகராதி
அன்பு என்னும் வார்த்தை ஒன்று
பொருள் இரண்டு (நட்பு/காதல்)
தாங்கிய பெயர் இரண்டு (தோழி/காதலி)


தெருவிளக்கு

மின்னின் மீது காதல் கொண்ட
விளக்கின் விதி பார்...
இருக்கும் விழி ஒன்றிலும்
தூக்கம் தொலைத்து விதியில்
நிற்கிறது நாதியற்று...

தாய் இறக்க பார்த்த ஈழ சேயின் புரியா மொழி

புரியா நாடகமாய்
தாயின் மரணம் ...
அதற்க்கு புரியா துதியாய்
சேயின் அழுகுரல் ...

2 8 வயதில் தந்தையான ஆண் மொழி

நான் மலரானேன்
2 8  ஆண்டுகளுக்கு முன்னாள்
தேன் கிடைத்ததோ இன்றுதான்
உன்னால் அன்பே...

Wednesday, February 9, 2011

புதுவிதம்

மீன்களளிடம்
தூண்டில் சிக்கும்
புதுவித அதிசயம்...
அவள் கண்ணிடம்
சிக்கித் தவிக்கிறது என் நெஞ்சம்...

நிலைமை பார்த்தாயோ

மின்னின் மீது
காதல் கொண்ட...
நிலைமை பார்த்தாயோ...
விளக்கின் விழி
தூக்கம் இன்றி
அழுகிறது...தெரு விளக்கு...

Monday, February 7, 2011

அழகாகத்தான்

நாளின் முடிவினில்
மலர்கள் வடிய பின்பும்
அழகாக இருக்குமோ...
இருந்தால் அவள்
அந்த பேருந்தின் நெரிசலிலும்
மாலை வேளையிலும்
அழகாகத்தான் இருந்தால் ஆவள்

Friday, February 4, 2011

சொர்கமாகினும் நரகமாகினும்


காதலில் நொடிகள் கூட
கோடி யுகமே அன்பே

நாளைதான், உலகம்தான்
அழியப் போகுது...
நம் காதல் நீளும்...
அது சொர்கமாகினும் நரகமாகினும் 

விஷமாக/மருந்தாக

என் உடலில்
விஷமாக ஒரு காதல்...
அதை முறிக்கும்
மருந்தாய் நம்மை
பிரித்தது ஒரு மோதல்...
விஷம் போதுமடி...
பார்வை இணைப்பை போட்டு
நியும் மின்னை பாய்ச்சு பாவை...

காதல் தாமரை

ஆதவன் பாராமல்
மலர்ந்த கமலுண்டோ...
கதிர் ஒளியால்!
உன் கண் வெட்கி
காணாமல் போக ...
உள்ளே ஒரு தாமரை காதல் தாமரை

Thursday, February 3, 2011

காதலின் வலியை கடந்த வலி

ஊரே பாராட்டும் உன் அற்பணிப்பை
இருவர் மட்டு குறை சொல்லையிலே...
நெஞ்சில் ஏறும் வலியுணர்ந்து பார்
காதல் உடைந்தாலும்
கணமாகத் தெரியாது...
இரண்டையும் உணர்ந்தவன் சொல்கிறேன்... 

Wednesday, February 2, 2011

விசித்திர சந்தையிது

உயர்ந்த உடையில்
குளிர்ந்த அறையில்
அதிரா, நா நுனியில்
போய் பூசும் ஆங்கில
அரிதாரம் பூசி ...
தான் மூளையை
தானே கூறிட்டு விலைபேசும்
மென்பொருள் புரட்சியில்
உதித்த சந்தையிது ...
பதுங்கி பாயும் புலியாய் இரு ... பொய் பொறியில் சிக்கி நிரந்திர பூனையாகிவிடதே

Tuesday, February 1, 2011

இளமையில் காதல்

இளமை ஒன்றும்
பேனாக் கடை
சோதனை காகிதமல்ல...
வருகிற போகிற பேனாவின்
நுனி தாங்க...ஒரே ஒரு நுனி
தாங்கும்...ஆக்கவும் படலாம் அழிக்கவும் படலாம்
காதலின் மெய்யுணர்...

முயலவில்லை

நான் உன்னை
மறக்கவே முயலவில்லை
பின் எப்படி சொல்வது
என்னால் உன்னை மறக்க
முடியவில்லையென...
முயல்வது வெயிலில்
உடலை பிரிந்து நிழலை எடுக்கும் முயற்சி...
முடிந்தால் செய்து பார்...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்