உலை எதுவும் இல்லாமல்
எரிபொருளும் ஊற்றாமல்
பகிறேன்று எரிந்து,
எரியும் நெருப்பில் குளிர் காயும்
இளமையின் பூந்தோட்டம்...
காதலேன்றொரு
புது மொழி பேசி
ஊமைகாற்றும் உலவி வரும்...
இது கண்காணா கடவுளிது
என்னை வாழவைக்கும் சுவசமிது
என்பவன் ஒருபுறம்...
முச்சுத் திணற அமிழ்த்திக்
கொள்ளும் விசக் கிணறு
என்பவன் மறுபுறம்...
உண்மையை பேசையிலே
காதல் வலியின்றி உடல் பாய்ந்து
உயிர் போகா விசித்திரம்
சொல்லும் மின்சாரம்...
மின்சாரமல்லவா?
தவறான கையாடலில்
உயிர்கொள்ளும்...
No comments:
Post a Comment