வெட்கிச் சிவந்த
பூமகள் அவள் அள்ளிக் கடித்தால்
சங்கிலியை...
தங்கங்கள்கூட சுகமாக நொறுங்குகிறது
அவள் பல் பட்டு முக்தி அடைந்ததாய்...
மூடன் அவன்...ஊமை அவன்...
ஆடை அட்டை தான் திறந்து...
கட்டறுக் கவிஞன்
கட்டறுக் கவிஞன்
அவள் மேனி மீது எழுதித் தீர்க்கிறான்
"சிலிர்ப்பு" என்னும் கவிதையை
கார்குழல் அருவி ஒன்று...
அவளை அழகாய், அலைமகளாய்
காட்ட தினம் தினம் விழுந்து
தற்கொலை செய்து கொள்கிறது...
அவள் முதுகுபுறமாய்...
அலைநீரில் கயிர் திரிக்க முடியுமா...
திரித்தால் அவள்...அந்த குழலருவியில்
என்னை தூக்கிலிட....
No comments:
Post a Comment