தீமைகள் தான்
சுடப் படவேண்டும்
வாழும் பூமியல்ல
புகைக்காத புன்னகை
பூத்தால் போதும்
புகை அடிக்கும்
மத்தாப்பு வேண்டாமே!
நட்பு சொந்தங்களின்
தீண்டளிலே
நீ விண்ணைத் தொட்டால் போதும்
புதைந்து கிடக்கும்
வெடிமருந்தை
ராக்கெட் ஆக்கி காற்றோடுக்
கலக்க வேண்டாமே!
இயல்பாய் சேரும்
அன்பில் உன் உள்ளம்
பொங்கி வழிந்தால் போதும்
பொய் மருந்தின் தீண்டளிலே
வண்ணங்கள் பொங்கும்
பூக்கூடை வேண்டாமே!
கால்கள் தேய
உறவுகளோடும் நட்போடும்
கை கோர்த்து
ஸ்நேகக் காற்று வீசும்
பிறந்த மண்ணில்
நீ சுற்றி வந்தால் போதும்
கறியை விதைத்து
மரணத்தை அறுவடை ஆக்கும்
சக்கரம் வேண்டாமே!
மகிழ்ச்சியின்
நிரந்தரம் என்றுமே
ஆக்கத்தில் தான்
அழிவில் இல்லை
அழிந்தது நான்
தரும் மகிழ்ச்சி
நிரந்தரம் இல்லை
- பட்டாசு
இனிய பசுமையும் மகிழ்ச்சியும் பொங்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment