Thursday, May 17, 2012

மே 18

[ஓவியம் - விகடன் ]

ரத்தத்தால்  எழுதி முடிக்கப்பட்ட 
ஒரு சகாப்தம்...

வீரம் மடிந்து...
அறம் தோற்று
ஓர் போர் முடிந்தது...
இன்னும் ரத்தம் மட்டும் நிற்கவில்லை
கண்ணீரும் துடைக்கப் படவில்லை...

உலகின் பெரும் போர் குருஷேத்ரம்
என்று இதிகாசம் சொல்லியது...
பேரழிவு கிரோசிமா
என்று  வரலாறு சொல்லியது...
இரண்டையும் அடங்கிய
ஒரு  இனத்தின் அழிவு ...
புதைக்கக்கூட இடமின்றி
அழுகவிடப்பட்ட தினம்...

எந்தக்  கண்ணனும் வந்து நிற்கவில்லை
என் தங்கை பாஞ்சாலிகள்
துயில்  உரிக்கப் படுகையில்...
நய வஞ்சக அரசியல்
நாகாஸ்திரமாய் அர்ஜுனனின்
கழுத்தை குறிவைக்கையில்...

ஆட்டம் தொடங்கும் முன்
பலகையை கவிழ்த்து
காய்களை சாய்த்து
சதுரங்கத்தில் வென்றதாய்
மார்தட்டும்  கோழைகளின் தினம்...

அந்த தேசத்தின்
பெரும்  மக்கள் அடிமைகள்
அனால் மே 18
அவர்களின் இரண்டாம் சுதந்திர தினம்...

உன்  சகோதரன் செவிடன்
ஆனால் உலகத்தவர் இல்லை...
தர்மம் வெல்லும் என்று சொல்லிய தேசம்
அதர்மத்தின் பக்கம் நிற்கும்...
சொல்லாத தேசம் உனக்காய் பேசும்...

உங்கள் உடல்கள்
பாய்ச்சிய  ரத்தங்கள்
விழுதுகளுக்கல்ல வீரத்துக்கு...
நீங்கள் அழிக்கப்படவில்லை...
விதைக்கப்பட்டிருக்கிறீர்கள்
.
தேசத்திற்காக... தேச மக்களுக்காக... வாழும் போது நரகம் அனுபவித்து சுவர்க்கம் எய்திய வீரர்களே, அரசியலுக்கும் அலட்சியத்திற்கும் உணவான அப்பாவிகளே, தங்கைகளையும் தமக்கைகளையும் தாயையும் கூட குருரமாய் பார்க்கும் காமகர்களின் காமத்திற்கு இரையான சகோதரிகளே... கண்ணீர் அஞ்சலி... வீர வணக்கங்கள்

2 comments:

  1. நீங்கள் அழிக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறீர்கள்!
    தியாகம் சுதந்திர வெளிச்சம் பரப்பிடும் சூரியனாய் திசைகள் எட்டும்.

    வீர வணக்கங்கள்!

    ReplyDelete
  2. நம் வலியை இவ்வளவு சிறப்பாக எழுதமுடியும் என்று நிரூபித்திருக்கின்றீர்.

    சிறந்த கவியாக்கம் என்றாலும் இது நம் துயரப்பாடல் என்பதால் மௌனமாக நகர்கிறேன்.

    தோல்வி நிரந்தரமல்ல. சூழ்ச்சிகளை வெல்லும் நாள் வரும்.

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்