Wednesday, May 23, 2012

அதுதானா இது?


உன்னை இரண்டாமுறை பெற்றெடுக்கும்
அது என்றான் அவன்
உயிரோடு  உன்னை சாவடிக்கும்
அது  என்றான் இவன்

வாழவைக்கும் விஷம்
அது  என்றான் அவன்
சாகடிக்கும் மருந்து
அது என்றான் இவன்

எதை வேண்டுமானாலும் புசி,
இதைத் தவிர என்றுகேட்டதை
ருசி  பார்க்க தவித்த
அதாம் ஏவாளின் மனம் போல்
காதலை அறிய தவித்தது என் மனம்...

நம்மை யாரோ கடற்கரையில் பார்த்துவிட்டார்கள்
எனக்கு  கல்யாணம் தயாராகிறது
என்று பயந்து கொண்டிருந்தது ஒரு காதல் 

"இதுசரியாய் வராது, நாம் பிரிந்துவிடுவோம்"
என்று  ஒரு இருதயத்தை அங்கே
நொறுக்கியது ஒரு காதல்...

நண்பனாகத்தான்  உன்னை பார்த்தேன்
என்று இருதயத்தை பிளந்து கொண்டிருந்தது
இன்னொரு காதல்...

நேற்று உன் பைக்கில் யாரவளென்று தொடங்கி
எக்கேடும்கெட்டோழி என்று முடியும்
கோபத் தீயில் கருகிக் கொண்டிருந்தது ஒருக் காதல்

சாதி பணம் அந்தஸ்து
என்ற பாகுபாடுகளின் காலில்
நசுங்கிக்கொண்டிருந்தது ஒரு காதல்...

தன் வயதுக் குழந்தையை தோளில்போட்டு
மீசைவைத்த  அன்னை அவன் தாலாட்டும்
இங்கொரு காதல்...

இதழ் வழி இருதயம் கொடுத்து
இருதயம் வாங்கிக் கொண்டிருந்தது
இங்கொரு காதல்...

கண்களின் வாய் வழி
கண் எனும் போதை மருந்தை
அள்ளி தின்றே உலக மறந்துகொண்டிருந்தது
அங்கொரு காதல்...

கை இதழால் இவன் பேச
பூ மேனி சிலிர்த்தது
இன்னுமொரு காதல்...

கண்காளால் அவன் பேச
வெட்கத்தால்  இவள் விடைகொடுக்க
புது  மொழியின் இலக்கணம்
அரங்கேற்றியது  இன்னுமொரு காதல்...

பைக்கில்  ஒருத்தி பார்க்கில் ஒருத்தி
செல்போனில் ஒருத்தி இடப்புறம் ஒருத்தி என்று
ஏமாத்தி(ந்து) கொண்டிருந்தது ஒரு காதல்...

தீண்டல்களில் ஆரம்பித்து
படுக்கை வரை இனித்து
இருவரையும் சர்க்கரை நோயாளியாக்கி
கசந்து போனது ஆசை தீர்ந்த காதல்...

அவள் தின்று போட்ட மிட்டாய் தாள் தொடங்கி
உதிர்ந்த தலை முடி வரை
பொறுக்கித் திரிந்தது இங்கொரு காதல்...

குட்டி ஆரஞ்சு இதழ் வெட்டித் தள்ளுது,
முகத்திலாடும் முடி என்னை தூக்கிழுடுது
என்று புலம்பிப் போகுது கவிதுவக் காதல்...

இன்று  நானும் அவளும் ஒரே நிறஉடை,
என்னை இன்று அவள் கண் கடந்தது
என்று தூரத்திலிருந்தே ரசிக்கும்
சொல்லத் தைரியமில்லாக் காதல்...

இருதயத்தில் பூட்ட முடியாதது
இன்று தாடிக்குள் புதைந்து கிடக்கும்,
கண்களில் வாழ்ந்த கனவு
கண்ணீராய் வடியும், குறையாது
சுகமென்று  நினைத்து தெரிந்தது
வழியாய் மாறிப் போனது
விடை என்று நினைத்துக்கொண்டது
புதிராகி  குழப்பிபோகும்...
ஒரு  தலைக் காதல்...

இப்படி ஆயிரம் பார்த்தேன்...

இவ்வளவு காதல்  காட்டிய இந்த உலகுக்கு
உண்மைக் காதல் காட்டிட ஆசைப்பட்டேன்... 
மன்மதனின் மலர் கனைக்கு 
மார் நிமிர்த்திக் காத்துக்கிடந்தேன்...

6 comments:

  1. எத்தனை காதல்?ஆனால் எல்லாமே காதலா?
    நன்று

    ReplyDelete
  2. காதல்,எங்கும் நிறைந்திருக்கிறது...அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் காதலாக இல்லையே :(

      Delete
    2. நீண்ட நாட்களுக்குப் பிறகு கௌரமியின் கவிதையைப் படிக்கிறேன். அருமையான கவிதை.

      Delete
  3. அருமை அண்ணா. மன்மதன் அம்பு சீக்கிரம் பாயட்டும் உங்கள் மீதும் :) அருமையான கவிதை.

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்