Thursday, November 22, 2012

அடடே ஆச்சரியக்குறி - 2

சேலை கட்டிய உன் புகைப்படம்
ஏற்றுகிறாய் முகப்புத்தகத்தில்

அதில் சேலையை போய் அழகென்று
வர்ணித்து தொலைப்பவரெல்லாம்
முகத்திலிரண்டு புண்ணுடையோர்...

(O_O) + (O_O)

என்  நண்பர்கள் சந்திக்கும்
கடினமான கேள்வியும்
அதிகபட்ச தொல்லையும்
"ஏன் மச்சான் நான்ஜெஸ்ஸிய
காதலிச்சேன்?" என்பதே...

[அவளின் செருப்பின் நலன் கருதி
என் கண்ணத்தின் நலன் கருதி
பெயர் மாற்றப் பட்டுள்ளது ]


(O_O) + (O_O)

ஒரு குழந்தையை
அதிகமாய் அடி வாங்க வைப்பதும்
அழுதிட வைப்பதும் மிட்டாய் தான்...
ஆனால்
குழந்தைக்கு மிகப் பிடித்தது
மிட்டாய் மட்டும் தான்

எனக்கு உன்னை போல்...

(O_O) + (O_O)

யாரைபற்றி எழுதுகிறாய்
என்று ஒரு முறை கேட்டுவிடு

"உன்னை பற்றி தான்"
என்னும் என் பதில்
ரொம்ப நாளாய் காத்து கிடக்குது

(O_O) + (O_O)

 அடடே ஆச்சரியக்குறி - 1

3 comments:

  1. அவளின் செருப்பின் நலன் கருதி
    என் கண்ணத்தின் நலன் கருதி
    பெயர் மாற்றப் பட்டுள்ளது ]

    அடடே ஆச்சரியக்குறி ..........!!!!!

    ReplyDelete
  2. :) அடடே யாரவள்? கேள்விக் குறி! :) :) :D :P

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்