என் வீடுகளின் தரையுள்
ஏதேதோ ஓசை...
எதுவாக இருக்கும்?
எதனுடையதாய் இருக்கும்?
துடிக்க அருக்கப்பட்டு
நிலையாக கட்டிலாக
உருகுலைக்கப்பட்ட மரத்தின்
காய அனத்தலோ?
அடி தெரிந்த ஆற்றில்
சுரண்டி வந்த மணலின்
எதோ ஓரத்தில் ஒட்டிக்கிடக்கும்
ஈரம் ஆவியாகும் ஓசையோ?
மனைக்காக நிலமிழந்து
விவாசயாமொழிந்த நொடியில்
பசிகண்ட வயிற்றின் முனங்களோ?
வீடிழந்த எதோ ஓர் மிருகத்தின்
சாபமோ?
வீடில்லா எதோ ஓர் மனிதனின்
வேதனையோ?
ஏதேதோ ஓசை...
எதுவாக இருக்கும்?
எதனுடையதாய் இருக்கும்?
என் வீட்டின் தரையுள் கேட்கிறது ...
மண்டைக்குள் ஒலிக்கும்
டியூ தவறிய போது
கடன் கொடுத்த வங்கிக்காரனின்
கேட்ட வார்த்தையை தாண்டி...
"அங்க மாதிரி இது இல்லை"
என்கிற வீட்டவரின் பெருமூச்சு தாண்டி
அருகிலுரங்குபவர் குறட்டை தாண்டி
ஏதேதோ ஓசை
எதுவாக இருக்கும்?
எதனுடையதாய் இருக்கும்?
பின்குறிப்பு - இப்படி பார்த்தால் சோறு கூட தின்ன முடியாது... மனிதன் வாழ தான் பூமி என்பவரே ... மனிதன் வாழ்வதற்கு மட்டுமல்ல பூமி...
No comments:
Post a Comment