சேவல்கள் நல சங்கம் - 1
முன்குறிப்பு - சேவல்கள் நல சங்கம் செவல்களுக்காக மட்டும் பேசுவதாய் இருக்க கூடாது. சேவல்களின் குற்றங்களையும் பெசவேண்டுமல்லவா?
நிழல்கள் தொடங்கி நீர்பறவை தாண்டி
பரதேசியின் பாடல் வரை எழுதிவிட்ட
கவிபேரரசரின் பேனாவிற்குகூட
பெண்ணை எழுத
"கொடி காய்த்த இரு இளநீர்"
தான் உவமையாகிறது இன்றும்!
காந்தி கனா கண்டதுபோல்
தனியாய் தெருவிலெல்லாம்
நடக்க தேவையில்லை ...
இவளால் பயமின்றி முகப்புத்தகத்தில்
ஒரு புகைப்படம் ஏற்ற முடிகிறதா?
வெறும் கரப்பான் பூச்சிகளுக்கும்
தெரு நாய்களுக்கும் தாண்டி...
பள்ளியில் குரு
கல்லூரியில் வாலிபம்
பேருந்தில் இடி அரசன்
தெரு முக்கில் சிகரெட் ஆசாமி
நிராகரித்த ஆண்மகனின் அமிலத்திற்கு
இரவில் நிழலுக்கு கூட ...
இப்படி எத்தனைக்கு தான்
அவள் பயபடுவாள் இன்னும்?
வள்ளுவன் மூன்றாம் பால்
எதற்கு எழுதினான்...
மாதவம் செய்தவள் என
மீசை கவி துடித்தது எதற்கு
இன்னும்
சமைத்துபோடும் அடுப்பாக
இரவு பசிக்கு விருந்தாக
பெற்றுகொடுக்கும்இயந்திரமாக
கோபம் காட்டும் பொருளாக
மட்டும் இருக்காவா என்ன?
சாப்ட்வேரில் வேலை பார்த்தாலும்
இன்னும் தன் கணினியின் ஆபரேட்டிங் சிஸ்டம்
மாற்ற தெரியாதவளாக வாளர்க்கபடவா?
இல்லை என்று சொன்னாலும்
ஏதோ ஒரு ரூபத்தில்
ஒரு பெண்ணின் காயத்திற்கு
காரணமாய் ஆண் இருக்கிறான்...
தேவதைகள் சிறகுகள்
ஒன்று விலங்கிடப்பட்டிருக்கிறது
இல்லையேல் ஒடிக்கப்பட்டிருக்கிறது...
எல்லோருக்கும் வரங்கள் கொடுத்தாலும்
இன்னும் அவளுக்காய் மிச்சமிருப்பது
ஒரு சாபம் மட்டுமே...
அது அவள் வாழும் நாட்கள்
No comments:
Post a Comment