உன்னை மறப்பதென்பதொன்றும்
அவ்வளவு கடினமில்லை
அலறிடும் கைபேசியில் நீ
என்று வேண்டுவதை
உன் பெயரின் முதலெழுத்து
பார்க்கையில் உன்னை நினைப்பதை
தோழி எவளாவது என்றாவது
உன் பெயர் சொல்கையில்
கலங்கிடும் கண்ணினை
அதே உடை.. உனக்கு அழகான
அதே உடை பார்க்கையில்.. நீ என்னை
முறைத்து கடந்த அந்த நாளை நினைப்பதை
அவ்வளவு தான்..
இதை மட்டும் நிறுத்தி கொண்டால் போதும்
உன்னை மறப்பதென்பதொன்றும்
அவ்வளவு கடினமில்லை...
நெருப்பின் மீது சுகமாய்
படுக்க பழகி கொண்டால்...
வழிகிற கண்ணீரை ஆனந்த
கண்ணீரென்று சொல்லி விட்டால்...
மசாலா நீரின் வாளிக்குள்
கண் விழிக்க தெரிந்தால்
இரவுகளை கண்மூடி
பகலினை இருதயம்மூடி கடந்தால்
அவ்வளவு தான்..
உன்னை மறப்பதென்பதொன்றும்
அவ்வளவு கடினமில்லை...
என் அழுகை தாங்காதவர்களுக்காக
சாதியின் கையில் நம் காதலை காப்பதற்காக
உன் பெற்றோரின் அருவாளிடம் உன்னை மீட்பதற்காக
சுருக்கமாக என் காதலை காப்பதற்காக
என் காதலின் மாரிலே
நான் இறக்கும் விசக்கத்தி தான்
உன்னை மறப்பதென்பது...
உன்னை மறப்பதென்பதொன்றும்
அவ்வளவு கடினமில்லை...
என் இரவெல்லாம் நனையும்
தலையனைக் கவருக்கும்
என் ரகசியம்மொத்தம் அறிந்த
குளியலறை சுவருக்கும்
மட்டும் தான் தெரியும்
உன்னை மறப்பதென்பது
எனக்கு எவ்வளவு கடினமென்று...
அண்ணா, எப்டி அண்ணா இப்டி எழுதறிங்க, அருமையோ அருமை!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletenice,,,,,,http://tamilkavithaicorner.blogspot.in/
ReplyDelete