எதோ குரூரமான
மிருகம் அடித்ததில்
மார்கூடு பிளவுற்று கீழ்வானத்தின்
ரத்தம் சொட்டி துவங்கியது
அந்த தனித்த நாளின் போராட்டம்
கடும் பனியிலும் வியர்க்கவைக்கும்
ஒரு நீள் கனவை போர்த்தி
உறங்கிக்கிடந்தேன் நான் ...
நிஜத்தில் என்னை பழிதீர்க்கும்
என் ஆசைகளை
அந்த கனவு கட்டிலில் சீரளித்திருந்தேன்
அந்த பெரும் காமப் போதை தெளியும் முன்
மீண்டும் மீண்டும் மீண்டுமொருமுறை
என் மார்பெலும்பு வெடிக்குமளவு
அந்த தனிமையை பருகினேன்...
தனிமை ... அது
குட்டி தூக்கும் தாய் பூனையின்
பற் கடி சுகமல்ல அது...
பத்து நாள் பசிக்கு சிக்கிய மான்பெறும்
சிங்கத்தின் பற்பதம்
அந்த நொடி முள்ளின்
துடிப்பை தங்குவதென்பது
என் வரலாறு ஆகிப் போன
அந்த தப்பு; அந்த சிரிப்பு; அந்த பயம்
என்று நான் கடந்தது
ஆயிரம் உருவம் அச்சுறுத்தும்
கொடும் கனவது
மனைவியை அள்ளும்
கணவனின் இரவு ஸ்பரிசத்தொடு
சடாரென்று என்னை பிடித்தது
3600 சிலுவைகளை
என் மீது ஏற்றி எனை
குண்டூசி பள்ளத்தாக்கில் நடக்க செய்தது
விச முட்கள் முடிந்த
சவுக்குகளை என் மேல் வீசியது
முடித்து கரும் மெகா மிருகத்தின்
மேல் என் தேகம் காட்டப்பட்டது
என் காய தேகம் கட்டிய
கரும் மேக மிருகம் தீடீரென்று
உப்பளக் காட்டில் கட்டவிழ்க்கப்பட்டது
அதை துரத்திக் கொண்டு
குரூரமான மிருகமொன்று ...
என் தேகம் உயிர் பெற்றெழுந்து
வேதனை கட்டுக்குள்
மிருகத்தை இழுத்து கொண்டு
எதிர் திசையில் ஓடினேன்
ஓட முயன்றேன்
முடியாமல் தோற்றேன்
எல்லாம் முடிந்தது
எதோ ஒரு பேனாக் முள்
முறிந்து மடிகையில் ...
விழித்து பார்த்தால்...
எதோ குரூரமான
மிருகம் அடித்ததில்
மார்கூடு பிளவுற்று கீழ்வானத்தின்
ரத்தம் சொட்டி துவங்கியது
அந்த தனித்த நாளின் போராட்டம்
No comments:
Post a Comment