முன்குறிப்பு – ஒரு கவிஞனின் கவிதைக்கு சோதனை எலிகள் நண்பர்கள் தான்… இங்கே என் தோழி… நன்றி தோழி…
வானத்து வானவில்லிற்கே ஏழு தான்… அடி பூமியின் வானவில்லே உனக்கு எல்லா வண்ணமும் அழகு… அழகான உடைதான் வாங்கவேண்டுமென்றால் கடையையே வாங்கலாம் உனக்கு…
- இப்படிக்கு trial அறை கண்ணாடிo.o.o
அவளுக்கோ இவளுக்கோ வைத்தால் கடனே என நான் சிவப்பென் உனக்கு வைத்தால் மட்டும் தான் நான் வெட்கப்படுவேன்
உன்னை அழகென்றெல்லாம் சொல்ல மாட்டேன் வேண்டுமென்றால் இனி அழகை உன் பெயர் சொல்லி வர்ணிக்க சொல்லிவிடுகிறேன்…
- இப்படிக்கு நீ வைத்து கொண்ட மருதாணி
o.o.o
ஒரு கவிஞன் படிக்கும் கவிதை நீ நித்தம் ரசிக்கும் இசை நீ எந்தன் வயதில் என் தாய் நீ நான் கொஞ்சிக் கொள்ளு(ல்லு)ம் பிள்ளை நீ என் காதை திருகும் தோழி நீ எவ்வளவு சொல்ல தீருமா? நட்பென்ற சொல்லின் உயிர் மெய் நாம்… இது போதுமா?
o.o.o
கவிதைக்கு பொய் அழகென்ற அந்த கவியரசனை பொய்யாக்கி விட்டாய் இங்கே மெய்யாய் இதோ…
- இப்படிக்கு நான்
No comments:
Post a Comment