Sunday, October 30, 2011

என் காதல்(கதை) - எழுத்து jam

கதை என்பதே 
கற்பனை
இதுக் கவிதைக் கதை
இதன் கதாபதிரங்களும் 
கற்பனையே ...
உயிரோட்டமும்
கற்பனையே ...


பள்ளியில் 
அறுசுவைகளுக்கு
எடுத்துக் காட்டு கேட்கையிலே 
காதலை கசப்புக்கு 
சொன்னவன் நான் 

காதலென்றால்
சுடப்படாத பானை கொண்டு 
தீரத் துடிக்கும் தாகம்
என்று பொருள் கொண்டவன் நான்

இப்படி நான்
கொண்டது கண்டது
பொய்யானது
செப்டம்பர் 10, 2007

காதல் மின்சார வகை
அது வலிக்காமல்
உயிர் நீக்காமல்
உடல் புகும்
என்று அன்று கண்டேனடி

எந்தன் பேனா
கண்ணாகி
என் கனவை கண்டது
ஓவியமாய்

பேனா கையில் கண்ட
குழந்தை வீட்டுச் சுவரைப் போல
காதல் கொண்ட
என் மேசை, படுக்கை
அழகானது
ஓவியங்களால் கவிதைகளால்

கணிதம் சொல்கையில்
கசந்த காஸ் சைன் தீட்டாக்கள்
மறைமுகமாய் அவளைப் பார்க்க
கோணம் நான் தேடுகையில்
இனித்தது

இருவர் உடையும்
நிறத்தில் ஒற்றிப் போகையில்
நியூட்டனின் புவிவிசை விதியோடு
முரனாகி விண்பறந்தேன்

பின் அமர்ந்த
அவள் முகம்
பார்க்க கைகடிகார பிம்பம்
நான் கொண்டேன்

அவள் பேசக் கேட்ட பின்பு
ஆங்கிலமும்
காதுக் கிண்ணங்களில்
தேன் நிரப்பியது

அன்று முதல்
பாடவேளை மணி
விரைவாய் ஒலித்ததாய்
உணர்ந்தேன்...
மறுநாள்
கல்லூரி செல்ல
துடித்துக் கிடந்தேன்

எனது ப்ரோக்ராம்
ஒன்று அவள் சந்தேகத்திற்கு
விடையாகையில்
உலகை வென்றதாய் உணர்ந்தேன்

இப்படி நிஜமாய்
தேடிய காதல் முழுதும்
நிழலாய் புதைந்து போனது
என் நாட் குறிப்பின்
பக்கங்களில் என்க்றிப்டெட்
வரிகளாய் புதைந்து போனது
அந்த பிரிவின் படையெடுப்பால்

பணம் வேற்று நாட்டில்
வெறும் காகிதம் ஆனது போல்
அவள் இல்லா ஊரில்
செல்லாமல் போனது என் காதல்

நங்கை அங்கம் எரும்வரை
தங்கம் வீண்
என் காதலும் வீணானது
உருகி உருகி காதலித்து விட்டு
சொல்ல மறந்ததால்

களம் இறங்கும்
முன்னர் செக் வைக்கப்பட்டு
விழ்த்தப்பட்ட
சதுரங்க ராஜாவை உணர்ந்தேன்
காதல் சொல்லும் முன்
தோல்வியில் முடிகையில்

எழுத்தின் முற்றுப் புள்ளியால்
கவிதையை முடிக்காமல்
கண்ணீரின் அறைப் புள்ளி
வைத்து காத்திருக்கிறேன்....

பட்ட மரம் துளிர் விடும் என்ற நம்பிக்கையில்


பாதியாய்
வாழ்வின் மீதியைத் தேடி
           
                 - ramanuJAM

சிலக் கதைகளில்
வெற்றி பெறுகையில்
காதலர்கள் காதலைப்
போய்கிறார்கள்
சிலக் கதைகளில்
முந்தயவர்களை எடுத்துக்காட்டாய்
கொண்டு உண்மையை நம்ப மறுக்கிறார்கள்

ஆகா உண்மைக் காதல்
எளிதாய் மாய்கிறது

மனதில் பாரத்தோடு
உலகிற்காய் சிரிக்கும் வலி,
உயிர் போகாமல் மரணம் கொண்ட
பிணமாகிப் போகிறார்கள் காதலர்கள்


2 comments:

  1. நல்ல முயற்சி! எழுத்துப்பிழைகளை தவிர்க்கவும்!

    ReplyDelete
  2. machi sila unmaiyum poiyum alagai sitharithirukindraai... Super da... ;):P

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்