மேடைகள் ஏறுதல்
பெரிதல்ல
காற்றினில் உன் பெயர் அதிர்கையில்
கைத்தட்டல் ஓசையில்
அரங்கம் அதிர்ந்திட வேண்டும்
அதுவே உன்னைப்
பெற்றவளுக்குப் பெருமை
ஆறாம் விரல்
மை உமிழ்தல் பெரிதல்ல
உமிழ்ந்த மை எழுத்தாகுதல் பெரிதல்ல
எழுத்துக்கள் செர்ந்தேழுந்து
கவியாதல் பெரிதல்ல
கவி வாசகன் இதயத்தோடு
ஓசையின்றி உரக்கப் பேசவேண்டும்
உண்மை உரைக்கப் பேசவேண்டும்
அன்றே உண்மைக்
கவிஞனாகிறோம் என் போன்றோர்
15000 முறை
என் கவிப் பேழை
திறக்கப்பட்ட சுவடு
இதோ இன்டர்நெட் மார்போடு
பச்சை குத்தப்பட்டது
இன்னும் பயண தூரம் தொலைவு
அது வரை
வாசகர் துணை வாரீர்
வாசிக்கும் ஆசையோடு...
உமக்கு வார்த்தை கொண்டு
சுவாசிக்கும் வித்தை நான் தருகிறேன்
நன்றியுடன்
-ramanuJAM
No comments:
Post a Comment