யாரென்கிறாய்???…
நீ தான் என சொல்லிவிட முயல்கிறேன்
நெடிலுக்கு மாத்திரை இரண்டாம்…
“நீ” என்பதின் மாத்திரை கோடியானது தெரியுமா?
o.o.o
நீ முறைப்பதை மொழிபெயர்த்தால் கூட
காதல் கிடைக்கிறது…
ஒரு சொல் பன்மொழி போலும்
o.o.o
காதலின் இலக்கணத்தில் மட்டும்
“நான் உன்னை காதலிக்கிறேன்” என்பதின்
இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்
நான் உன்னை காதலிக்கிறேன் என்பதே…
o.o.o
இதழும்இதழும் இதழோடு இதழானது…உம்மை தொகை
கைப்பேசி முத்தம் பெயரெச்சம்
கன்னத்தில் முத்தம் வினையெச்சம்
இதழ் முத்தம் … இதற்கு மேலும் பேச என்ன மிச்சம்
o.o.o
நாம் என்பது இரட்டை கிளவி
பிரிந்திருந்தால் ஏது பொருள்?
No comments:
Post a Comment