எட்டாத தொலை ஊருக்குள்
இரவு பொழுதில்
எதோ ஒரு அலைவரிசை
காதுக்குள் இரைச்சல் கலந்து
பாய்ச்சும் இசையின் சுகமாய்...
காதல் இல்லை
என்று சொன்னாலும்
பரவாயில்லை
அப்படியாவது என்னிடம்
பேசு... சுகமே
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
எஜமானன் யாரையும்
அழைக்கப்போகாத போதும்
தொடர்பில்லா காட்டுக்குள்ளே
அலைவரிசை தேடும் கைபேசியாய்
நானும் நீ
காதலிக்கப்போகாத போதும்
உன்னுடன் பேச போராடி
தொற்றுக்கொள்கிறேன் பெருமையாய்...
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
தூரத்து கிராமத்துகுள்ளே
கிடைக்கும் ஒற்றை
அலையின் நுனி பிடித்து
தொடரும் அழைப்பைபோலே
நீ காதலிப்பாய் என்னும்
ஒற்றை நம்பிக்கையின்
நுனி பிடித்து
நீடிக்குது இந்த உயிர்
No comments:
Post a Comment