மெல்லிய மொட்டுக்களை,மெதுவாய்
திறக்கும் பூந்தென்றல்கள், பெண்பால் தான்
இதோ இவள் விரல் தென்றல் தீண்டி
புத்தக மலர்கள் திறக்கையில் உணர்ந்தேன்...
காயப்பட்ட உள்ளத்தில் ஊற்றும்
அவள் கோபம் அமிலமாய்
நெருக்கடியில் நெருக்கிவிட்டு
செலவில்லா பொழுதில்
செழிக்கும் பணம், பெண்பால் தான்...
மறையாமல் யுகம் யுகமாய்
நீண்டு கிடக்கும் அவள் கோபமாய்
மண்ணுக்குள் மக்காமல்
நிலைக்கும் பாலித்தீன் பெண்பால்தான்...
புரியாத பெண்மனமாய்
புதிர்கள் போடும் தமிழிலக்கணமும்,
பெண்பால் தான்...
கோடி வரி கோடு நீ எழுதினாலும்
தன் இஷ்டத்துக்கு நடக்கும்
மென்பொருளும், பெண்பால் தான்...
உனக்காக தேயவும் செய்யும்
வாயில்லா பல்கொண்டு
கடிக்கவும் செய்யும் செருப்பும்,
பெண்பால் தான்...
அப்பாவிகளை அற்ப offerகளில்
அப்பலமாய் நொறுக்கும்
அரசியலும் பெண்பால் தான்...
கிடைக்கவேண்டியவனுக்கு கிடைக்காமல்
ஏறக்கூடாதவன் கை ஏறி
தன் தரம் தானே தாழ்த்தும்
அதிகாரமும், பெண்பால் தான்...
சரியான நேரத்துக்கு வராத
அவள் பதிலால்
என் இருதயத்துக்குள்ளையே
அவள் நினைவுக்கு சிறை...
இதோ வாசிக்கப்படாத
என் கவிதைக்கு blogக்குள் சிறையை போல்...
இதுவும் பெண்பால் தான்...
No comments:
Post a Comment