உணவாய் பணமாய்
பாவமாய் பரிகாரமாய்
அவரவர் செய்யும் வேலைக்கேற்ப
இந்த மண்ணில், வரும் வருமானம்
இந்த நெரிசலான உலகில்
உன்னை இன்னும்
விட்டு வைத்திருக்க
ஒரே காரணம்...
உன்னை நீ விற்ற
விலைப் பணம்...
30 நாள்
யானைப் பசிக்காண
சோளப் பொறி இது...
ஏனோ 3 நாளில்
தீர்ந்து போகுது...
கலியுகத்தில்
பாசம், காதல், காமம்,
அன்பு, பரிவு,பசி
எல்லாமே இந்தக்
காகிதத்தில் தான்...
சொல்லப்படுகிறது,
தீர்க்கப்படுகிறது
என்? இவர்களது
தலைக்கனம் சோகம்
எல்லாமும்கூட இதுவே..
இந்த காகிதபூவின்
வாசத்தில் மயங்கிதானே...
இன்று பல பட்டுப்பூச்சிகள்
அலுவலக கூட்டுக்குள்
சிறை இருக்குது...
உள்ளங்கையளவு
இந்தக் காகிதந்தான்
மானத்தையே காக்குது...
இது வரவு என்கிறார்கள்
ஏனோ? பலருக்கு
வங்கி வட்டியாய்
போதை புகையாய்
சுகத்திற்கு சுங்கமாய்
பசிக்கு ருசியாய்
செலவு கணக்கில் தான் சேருகிறது...
கலியுகத்தில்.. உணர்வுகள் இந்த காகிதத்தில் தான் தீர்க்கப்படுகின்றன..! என்ற வரிகள் நிதர்சனம்..! அன்னையும் தந்தையும் இதற்கு விலக்காக வேண்டும்..! பணம் .. ஒரு வரவல்ல.. செலவு தான் .. என்ற வரி..கவலை தரும் உண்மை..! ஓரிடம் தனிலே..நிலையில்லாதுலகினிலே..உருண்டோடிடும்..பணம் காசென்னும்..உருவமான பொருளே..!
ReplyDelete--சுள்ளான்கவி
நன்றி அப்பா :)
Delete