இந்நொடி
வானின் அலைக்கற்றை
ஊடக நெரிசல் வரிசை
குறுஞ்செய்தியில்...
ட்விட்டர் சிட்டின்
காலை கீச்சுகளில்
கோடிகோடி ப்ளாக்
பக்கங்களில்
முகப்புத்தாக சுவர்களில்
ஆர்குட் துணுக்கு உரைகளில்
அலுவல் அளவளாவிகளில்
சொல்லப்(பட்ட)படுகின்ற(படப்போகின்ற)
கோடிகோடி காதல்களுக்கும்
கொள்ளப்(பட்ட)படுகின்ற(படப்போகின்ற)
சில சில காதல்களுக்கும்
வெல்லப்(பட்ட)படுகின்ற(படப்போகின்ற)
பல பல காதல்களுக்கும்
இனிய காதல் தின நல் வாழ்த்துக்கள்
உண்மைக் காதல் சொல்வோம்
அன்பால் உலகை வெல்வோம்
உவகையால் உள்ளங்களை ஆள்வோம்
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
தவாணி சீலை மோதி
பல்சர்கள் குடை சாயும்
இளைஞர்கள்விசை காதல்
ஆர்வமாய் எழுதும்
கிருமியோ காரணியோ இல்லாமல்தேர்வு காதல்
எல்லோருக்கும் சுகம் தர,
எல்லா இனத்திலும் பரவும்
நோய் காதல்
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
காதல் ஒரு காகம்.
ஏனோ, இதன் எச்சத்திற்காய்
காத்துகிடக்கிறது
கூட்டங்கள் சிலைகளாய்
காதல் புனித மதம்.
உரு இல்லா அன்பே கடவுள்.
இதற்கும் உண்டு
நாத்திகனும், ஆத்திகனும்
காதல் சொர்கத்து பதவி
என்றான் ஒருவன்
நரகத்து வேதனை
என்றான் மற்றொருவன்
எவன் நாத்திகன்
அவிழா ரகசியம் இது...
உயிரின் கடலுள் இருந்து
சாதி மத பண முத்துக்கள்
எடுக்கப்பட்டு
திமிரலைகளால் விசிறி
எறியப்பட்டு அன்பின்
கரையொதுங்கிய சிப்பிகள் காதல்
ஏனோ இங்கே சிப்பிகள்
தான் விலை அதிகம்
என்னும் ரகசியம்
சிப்பி பெருக்குபவருக்கே சொந்தம்
~*~*~*~*~*~*~*~*~*~*~
இரு இருதயம்
துடித்து நீடிக்கும்
ஒற்றை
உயிர் காதல்.புத்திசாலிகள்
செய்யும் மடத்தனம்
நல்லவர்கள்
செய்யும் பாவம்
காதல்.ஏனோ இந்த
மடத்தனம் தான்
வெல்கிறது
இந்த பாவம் தான்
இனிக்கிறது.
இருவருக்காய்
இருவர் எழுதிய
வேதம் காதல்.
~*~*~*~*~*~*~*~*~*~
ஒரு புண்ணிய
வேள்வி இது
சாதி மத பணம் வயது
என்று நீர்கொண்டு
அணைக்க நினைக்கும்
கூட்டமே!
நீர்கொண்டும் எரியும்,
இளமை நெருப்பால்
வளர்க்கப் பட்ட வேள்வி இது
~*~*~*~*~*~*~*~*~*~*~*~
சாதி
மதம்
பணம்
பகட்டு
அந்தஸ்து
அகங்காரம்
என்று பாவம் செய்து
சமுகம் என்னும் நரகத்தில்
இருந்து கொண்டு
காதல் செய்யும் சிசுவை
சொர்க்கம் வேண்டாமா
என்று கேட்கிறது
கடவுளுக்கே வரம் கொடுக்கும்
நப்பசையல்லவா அது
No comments:
Post a Comment