Tuesday, February 7, 2012

ரயில் காதல் - 1

பேருந்துக் காதல் - 1 | 2 | 3

 
சொந்தமாகாத இருக்கையை
பாவையோடு பங்கிட்ட 
அழகிய பயணம் அது

முத்து  நகரை பிரிந்து
முத்துச்சிலையோடு
பயணம்

அமர்ந்து  தொடர்ந்த
ஆசைப்  பயணம்அது

உறக்கம்  தொலைத்த
உறைபனி இரவில்
நேர் எதிரே
என்  கனவு அமர்ந்து
என்னோடு  பயணிக்குது
உறங்காமல்  கனவுகண்டவன் நான்
அதுவும்காதல் கனவு

இந்த  இரவில்
வானத்தை தனிமையில் 
தவிக்க விட்டுவிட்டு
என்னோடு பயணிக்க 
வந்ததோ நிலவு?

நிலவினில்  நீரிருக்கா நானறியேன்...
ஆனால், வெள்ளி இருக்குதுன்னு
பெரும்ரகசியம் சொன்னது
இருட்டுக்குள் உறங்கும் 
அவள் கால்  கொலுசு

முதல் முறை 
ஸ்டீவ் ஜப்சை வெறுத்தேன்
நான் ரசித்துக் கொண்டிருந்த
 வஞ்சி அவள்  ஐபாடை 
உரசி ரசித்த பொழுதுகளில்

அவள் பார்த்த
 ஓரப்பார்வையின்
புண்ணியத்தில்
 என் தலை அடிக்கடி
கோதல்கொண்டது
இரவினில் தலைகோதும்
அவசியம் உணர்ந்தேன் அன்று

கடை ஜாமத்தில்
இதழ் திறக்கும்
காதல் சொல்லும் ரோசா
கடும்  குளிரில்
பல் சிரிக்கும்
மார்கழி புஸ்பம்
நடுமதியம் சமயும்
வசீகரிக்கும் மல்லிகை
சூரியன்  கண்மறைவில்
வெட்கம் கலையும்
முல்லையும் முளரியும்
பூவாய்! நீ 
எந்தப் பூவகை?
இப்படி எல்லா நிமிடமும்
சோம்பல் முறித்து 
சிரிக்கிறாய் புதுமலராய்

ஐயோ! முன்றாம் சாமத்தில் 
அவள் கூந்தல்  காட்டுக்குள்
விரல் கலப்பையால் உழுதால்...
ஏனோ, என்  நெஞ்சுக்குள்
காதல் ம(ன்)னப்புழு நெளிந்தது
ஏனோ, ஆசை என் மனதினில்
விதை மழை  தூவுது
மும்மாரி பார்வை மழை தூர
காதல், என் இருதயத்தில்
அருவடையாகி 
அவள் இருதயத்திற்கு அனுப்பலாகிறது
காதல் விவாசாயம் இதுதானோ!

மெமரியிலிருந்து இசையை
குமரியின் காதுகளுக்குள்
தூவும் சுகத்தில் மலரவள்
துயில்ந்து போனாள்

அந்த அமைதியினில்
இவள் அழகு மழை 
சாரலில் நனைகையில்
என் காதுக்குள் இளையராசாவின் 
சேட்டைகள் உணர்ந்தேன்

உலகுக்கே  சூரியன் 
உதித்து விடிய
என்  இருக்கைக்கு மட்டும்
ஏனோ, நிலவு உதித்தது
போர்வைகுள்ளிருந்து

முதன் முறை
சரியான நேரத்தில்
இலக்கு சேர்ந்து
எந்தன் காதல் கனவை
கலைத்தது...இந்த ரயில்

பயணம் முடிந்த பெட்டிகள் போல்
 இருதிசையில் பிரிந்தது காதல்
நிலவுஅவள் கிழக்கு நோக்கி
சூரியன் நான் மேற்கு நோக்கி


P.S. -

1. என்னோடு RAC பயணம் கொண்ட அந்த பெண் இந்த கவிதை படித்து, என் கதை         முடிந்தது.

2. இந்தக் கவிதையில் வருவது போல் RACயில் ஒரு பெண்ணோடு பயணித்தது மட்டுமே உண்மை. மற்றவைகள் உறக்கம் இல்லாத கிறுக்கனின் கற்பனைகள்

5 comments:

  1. every time i see your poem, i automatically rate it as 5

    ReplyDelete
  2. n then start reading it... :)

    awesome bro..keep going

    ReplyDelete
    Replies
    1. its my pleasure bro :D thank u so much :D

      Delete
  3. memory ill irunthu line... pls check the spelling... btw the poem is awesome

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்