புகைப்படம் - அன்னை இல்லம், மயிலாப்பூர், சென்னை
மூணு மகன் ரெண்டு மவா
மகளுங்கள கட்டி கொடுத்தது
அமெரிக்கா மாப்பிள்ளைக்கு
வருசத்துக்கு ஒருக்கா
பாக்க வருவா… படிக்கிறதால
பேரப்பிள்ளைகள கூட்டி வரமுடியலையாம்
மவனுவ வியாபாரம்
பணக்கார மருமவளுங்க
அமெரிக்காவுல படிக்குற பேரப்பசங்க
டிவிப் பெட்டி
மூத்தவன் வாங்கி கொடுத்தது
இளையவன் ரெண்டு பேரும்
ஒரு பட்டுபுடவ வாங்கிட்டு வந்தானுங்க
மகளுங்க ஒரு நெக்லசு வாங்கி வந்தாங்க
அனுபவிக்குற வயசில்லன்னு சொன்னேன்
சொன்னா கேக்க மாட்டுக்குது. பாசம்!!…
தேக்கு கட்டிலு
பட்டரி காத்தாடி
நடக்க குச்சி படிக்க புஸ்தகம்
ஊள்ளன் ஸ்வெட்டரூ
எவ்வளவோ வந்தும் அவர்கள் எதிர்பார்த்தது மட்டும்
வந்தே சேரவில்லை. எவர் வந்து தருவார்…
அவர்களின் பொக்க வாய் சிரிப்பெல்லாம்
கண்ணீர் உப்பின் கரிப்பிருக்கு. யாருக்கு தெ(பு)ரியும்
பின்குறிப்பு - இன்று நான் பார்த்து கொள்வேன் என்றுவிட்டு நாளை உன்னை பெற்றவரையும் இந்த நிலைமைக்கு ஆளாக்கும் நமக்கு சமர்ப்பணம்
No comments:
Post a Comment