Friday, September 30, 2011

அரசியல் சந்தை

தெருவோரம்
கூவி விற்கும்
வியாபாரிக்கும்
தமிழக அரசியல்
பீரங்கிகளுக்கும்
நான் பெரிதாய் கண்ட
வித்தியாசம்

முதாலாமவன்
வயிட்றிற்காய் பொருட்கள் விற்கிறான்
இரண்டாமவன்
பொருட்களுக்காய் தன்னை விற்கிறான்

பரிசுத்த ஆவி இவன்
அவன் உழைப்பில் உயர்ந்தோன்(உழல் பட்டியலின் உச்சத்தில் )
சுரண்டிக் கொண்டிருக்கிறான்
எஞ்சி இருக்கும்
ஏழையின் ஆவியை 

Thursday, September 29, 2011

தியாகம்

நெரிசலான பேருந்தில்
பயணம் முடித்த
பயணி...
பயண முடிவில்
பேருந்தை பார்க்கும்
வெற்றுப் பார்வை

போல தானடி
நீ என் மீது வீசும்
முறைப்பும் ...

என் நினைவு
உன்னை அவ்வளவு
நேரிக்கிறதேன்றால் சொல்...
உன் நினைவைத்
தொலைக்க முடியாது
உடலில் நிலைக்கும்
உயிரைத் தொலைக்கிறேன்  

கா(ந்)த(விய)ல்

என் உன் இருதயமும்
எதிர் துருவம்
எளிதாய் ஈர்க்கப்பட்டேன்

அனால் கண்களோ
நேர் துருவம்
நீ நோக்கா நேரம்
உன்னை நோக்கி ஈர்க்கப்படும்
என் கண்கள்

நாம் எழுதுவோம்
புது அறிவியல்
அறியாமைத் தேவைப்படும்
காதலுக்கு 

Tuesday, September 27, 2011

இந்தியா - மாறாத நிறங்கள்


தூக்கத்தில் நிரப்பிய 
மழலையின்
வீட்டுப் பாட நோட்டுப் போல
பொத்தாம் பொதுவாய் ஒரு சாலை 

சுதந்திர தினமேன்றால் 
விடுமுறை மிட்டாய் 
என்பதை மட்டும் மறக்காமல்
மற்றதை மறந்த 

எட்டனாக்காய் 
வெயிலில் காயும் 
ஏழை வியாபாரியிடமும்
கூட்டத்தில் திணறும் 
நடத்துனனிடம் 
பெட்ரோல் விலையில்  நசுங்கும் 
பகிர்வு ஆட்டோக்காரணிடமும் 
சண்டைபோட்டு பிறான் 
உழலுக்காய் வரியாக்கும் 
அறியாமை 

தன்னால் உணர்வதே 
வலி என்றும் பசி என்றும் 
பிறான் வழியால் பசியால் 
துடிப்பதை வேடிக்கையாக்கும் 
சுயநலம் 

பசியால் குழந்தை 
துவண்டு போகித் துடிக்கும்
மாலையில் குழந்தை 
வீடு சேர்ந்தது தெரியாமல் 
கழுத்தோடு கத்தி
வைத்து ஒருவன் நெரிக்கும் வரை
வீட்டின் நடமாட்டம் உனாராமல் 
(ஒற்றுமையாய் 
இருக்கும் உறவுகளை பிரிக்கும்)
தொடர்கதையில் முழ்கும் 
(50% ஆண்கள் 50% பெண்கள் )
மாக்கள் 

அன்பும் பண்பும் அளவான அழகும் 
தேட வேண்டிய திருமண வேட்டைகள்
விலை பெறா தங்கம் 
ஏமாற்றும் வியாபாரம் ஆக்கிய
ஆசை 

இப்படி மூவண்ணத்தின்
கரையை கோடி கோடி 
(மாற்றக் கூடிய)
மாற்ற முயலா 
அடையாளக் கரைகள்





தெரிவதில்லை

சென்னையின் பயணத்தையே 
கூட்டமாய் நீ சாலை 
கடக்கையிலே ஸ்தம்பிக்க 
வைக்கும் மனிதக் கூட்டமே 

ஏன் இந்த தகிரியம் 
ஊழலை எதிர்த்து 
வர மறுக்குது 
 
காய்கறிக்காரணிடமும் 
சில்லரைக்குத் திண்டாடும் 
நடத்துனநிடமும்  
எட்டனாக்காய் வாதாடும்
அற்பப் பதரே ...

அங்கே உன் (கோமன)மான(மும் )
பறிபோவது ஏன் தெரிவதில்லை 

Saturday, September 24, 2011

நான் கடவுள் (?)


ஆறுகளையும் கடல்களையும்  
கரைகளுக்குள் கட்டிப்போட 
கடவுளால் தான் முடியுமென்றால் 

மனிதனும் கடவுளாகிறான்
இதோ குப்பை குவியல்களால் 
கரைகள் அமைத்து 

அழிக்கும் கடவுளிவன் 

காதல் தியானம்

மனம்
ஒரு முகமடைதல் 
தியானம் ஆகின் 

உன் ஒரு முகத்தை 
மட்டுமே சிந்திக்கும் 
நான் தியானத்தில் 
தலையானவன் 


Wednesday, September 21, 2011

வேண்டுமா வலி?

சென்னை சாலை நெரிசல்
புகையை பத்து நிமிடம்
சுவாசித்த நரகம் வேண்டுமா?

காதலை சொல்லாமல்
சுமக்கும் ஒவ்வொரு
நொடியும் தரும் அந்த வலி 

Tuesday, September 20, 2011

போதும் வேண்டாம்

தயவு செய்து
உன் சல்வார்
துப்பட்டாவை
தரை உரச விடாதே
கற்களும் உயிர்
கொள்ளும்

ஏற்கனவே
என் காதலுக்கு
சாதி மதங்கள் போட்டியாக
அவைகளும் பட்டியலில்
சேர்ந்துகொள்ளப் போகுது

Monday, September 19, 2011

அவனுக்கும் இது சவாலே

ஆஸ்கார் நாயகனுக்கும்
கடினம் ... காதல் தோல்வியின்
பின்னே சிரிப்பதைப போல்
நடிப்பது
நான் விதி விளக்கும் இல்லை  

நீயும் தான்

என் பெயரை
என்னால் மறக்க
முடியாது

உயிரை துறந்து
உடலால் வாழ
முடியாது

இந்தப் பட்டியலில்
மேல் வரிசையில்
நீயும் உண்டடி ...
மறப்பது எப்படி ?

Sunday, September 18, 2011

காத்திருப்பேன்

உச்சிப் பொழுதில்
கிடைக்காது
எனத் தெரிந்தும்
பெருந்திற்காய்
காத்திருக்கும் பயணி போல

உன் வார்த்தைக்காய்
காத்திருக்கும் என் ஜீவன் 

Saturday, September 17, 2011

நம்பிய பொய்


நோக்கும் எத்திக்கும்
அவள் முகமே 

அவைகள் பொய் என்றுத் தெரிந்தும் 
நம்புகிறேன் நான்
காரணம்

அந்த போலிகள் எல்லாமே 
அவளைப் போலவே
என்னை 
முறைத்து பார்கிறது 

Thursday, September 15, 2011

ஓணம் @ Office


ஏனோ அன்று 
சென்னையின் 
சாலை நெரிசலும் 
சுகமாய் இருந்தது 
என் பேருந்து 
கேரளத்துப் பூக்கள் 
சாலை கடக்க காத்திருக்கையில் 


இப்படித் தான்
அந்த அலுவலக நாள்கூட
அலுத்துக் கொள்ளாமல்
விடிந்தது ... அந்த அழகு
தேசத்தின் பண்டிகையால்

எந்த மஹாபலியை
வரவேற்க
இந்த வானப் பூக்கள்
கோலமிட்டதோ

அன்று பூக்கள்
எல்லாம் கேரளத்து பெண்களை
ஒரு சேர பார்த்தோ ?
இப்படி வெட்கி உதிர்ந்தது
அழகாய் ... அத்தப்பூக்கோலமாய்* 


ஏனோ அன்று
மின்சாரப் படிக்கட்டின்
நெரிசல் மூச்சுத் திணறல்கள்
சுகமாய் இருந்தது
எனனெனில்
அதனுள் என்னை புதைத்தது
கேரளத்து ரோஜாக்களால்

கத்தி கீறி
சுரந்த ரப்பர் போல
அவள் பார்வை உரசி
கவி கொட்டுகிறது
என் மூளை மரக் கிளைகள் தானாய்

அது எப்படி
நெருப்பும் இரும்புச் சட்டியும்
இல்லாமலே
என்னை நேந்திரச் சீவலாய்
வருத்து எடுக்கிறாள்
வெறும் கனல் பார்வையால்

தென்றலுக்கு அவ்வளவு விசையோ?
அவள் கூந்தல் மோதி
நான் பறந்தேன்
விண்கிரகம்
அவளை பார்த்து கொண்டே
இருந்த நிமிடங்கள்
இமை இதழால்
பரிப் பிரதானம்** சுவைத்தாய்
உணர்ந்தேன்

கேரளத்துக் கதக்களியை
முக பாவத்தோடு அரங்கேற்றி
ஒரு அங்குல நீளத்தில்
இரு நேந்திரத்தை இதழோடு குடியேற்றி
பாய்ந்தோடும் பம்பையின்
நிதானத்தோடு வரும்
சேர தேசத்து தென்றல்கள்
தமிழகம் பக்கம்
அ(டை )ழகு மழை பொழிந்தது
இன்று இனிதாய் 


* - கேரளத்து பூக் கோலம் ; ** - கேரளத்து பதார்த்தம் 

Friday, September 9, 2011

அடிமையாகிறேன்


கண்ணீரை புன்னகை
சுடுகாட்டுக்குள் புதைத்து

நினைவு சிறைக்குள்
சுதந்திரமாய்

இல்லாத ஊருக்கு
எட்டாத திசையில்
தொலை தூர பயணம்

புரியாத மொழியில்
எழுதி கொடுத்த கணக்கிற்கு
தீர்வு தேடும் மாணவன் போல

தண்ணீர் தீர்க்காத
தாகம் உணர்ந்தது போல

உயிர் போகாமல்
தினம் மரணிப்பது போல

மரண வலி என்றுத்
தெரிந்தும் மருந்தில்லா
உன் நினைவிற்கு அடிமையாகிறேன்
(For last 5 years)

Thursday, September 8, 2011

கசடறக் கல்!


கல்வி!
வள்ளுவம் தாண்டி இச்சிறுவன் 
புதிதாய் எதுவும் 
சொல்வதற்கு இல்லை 

கற்றலும் 
கசடறக் கற்றலும் 
மட்டும் முக்கியமில்லை தோழா!
நிற்கவும் கற்றதிற்குத் தக...

கழுத்து நெரிக்கும் கல்வி 
அதை கழுதைகளாய் சுமந்த 
காலம் மாறி 
"PDF"யாய் ஒளிக் கற்றையாய் 
CDகுள்ளே கல்வி சிதையை
சிறைவைத்த 
ராவணர்கள் நாம் 

திறந்த நொடி 
சீறி வரும் இட்லிசட்டி 
ஆவி போல 
தோல் அறி பட்டதும் 
உலகம் காண வரும் 
ரத்தம் போல 
தயாராய் இரு.

வாய்ப்பு ஒரு நெருப்பைப்போல 
சரியாக கையாண்டால் 
குளிர் காயலாம் 
இல்லாவிடில் பறிபோகலாம் 

கல்வி 
சுவாசம் சேரும் oxygen போல 
எங்கும் இருக்கும் 
உனக்கு அனுபவம் கொடுக்கும் 
எவனும் தவற விடுவதில்லை 
சரியாய் சுவசிப்பதில்லை 

இளமையில்
கல்வி தொலைக்கும் சோம்பல்,
புத்திசாலித்தனம்
சந்தனக் காட்டுக்குள்ளே 
மூச்சை பிடித்துக் கொண்டு 
சுவாசிக்க மாட்டேன் என்னும் 
மடமையடா 

கற்போம் கற்பிப்போம்!


Wednesday, September 7, 2011

விநாயகர் சதுர்த்தி

அவன் படைத்த
பூமியின் களிமண்ணாலயே
அவன் பொம்மை படச்சு

உண்மை பொருளுக்கு
பொய் முலாம் பூசி

அவன் காக்க
நினச்ச பூமியில
அவன் சிலையையேக்
கரச்சு மாசாக்கி
அளிக்கிற முட்டாள் தனம்

கொழுக்கட்டை
வருட வருடம் வேண்டுமெனில்
கொஞ்சம் சிந்தியுங்கள்

ஆண் பாவமோ ?

என் பிறப்பால்
நான் செய்த
ஆண்மை என்னும்
பாவத்திற்கு

இறைவன்
வைத்த மாற்று
பூமியில் பெண்களும்
அவள் அழகை களவாட
என் முகத்தில் கண்களும் 

இடஞ்சல்

என் கண்கள் ரசிக்கும்
பெண்கள் எல்லாமே
ரோஜாக்கள் தான் ...

இடையே இடஞ்சலாய்
முட்களாய்

ஜாதியோ காதலனோ தந்தையோ!

முட்கள் தீண்டாமலே
வலிக்கிறது ...
ரசனைக்காய் இருதயம்
கண்ணை நொந்துகொள்கிறது

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்