ஏனோ அன்று
சென்னையின்
சாலை நெரிசலும்
சுகமாய் இருந்தது
என் பேருந்து
கேரளத்துப் பூக்கள்
சாலை கடக்க காத்திருக்கையில்
இப்படித் தான்
அந்த அலுவலக நாள்கூட
அலுத்துக் கொள்ளாமல்
விடிந்தது ... அந்த அழகு
தேசத்தின் பண்டிகையால்
எந்த மஹாபலியை
வரவேற்க
இந்த வானப் பூக்கள்
கோலமிட்டதோ
அன்று பூக்கள்
எல்லாம் கேரளத்து பெண்களை
ஒரு சேர பார்த்தோ ?
இப்படி வெட்கி உதிர்ந்தது
அழகாய் ... அத்தப்பூக்கோலமாய்*
ஏனோ அன்று
மின்சாரப் படிக்கட்டின்
நெரிசல் மூச்சுத் திணறல்கள்
சுகமாய் இருந்தது
எனனெனில்
அதனுள் என்னை புதைத்தது
கேரளத்து ரோஜாக்களால்
கத்தி கீறி
சுரந்த ரப்பர் போல
அவள் பார்வை உரசி
கவி கொட்டுகிறது
என் மூளை மரக் கிளைகள் தானாய்
அது எப்படி
நெருப்பும் இரும்புச் சட்டியும்
இல்லாமலே
என்னை நேந்திரச் சீவலாய்
வருத்து எடுக்கிறாள்
வெறும் கனல் பார்வையால்
தென்றலுக்கு அவ்வளவு விசையோ?
அவள் கூந்தல் மோதி
நான் பறந்தேன்
விண்கிரகம்
அவளை பார்த்து கொண்டே
இருந்த நிமிடங்கள்
இமை இதழால்
பரிப் பிரதானம்** சுவைத்தாய்
உணர்ந்தேன்
கேரளத்துக் கதக்களியை
முக பாவத்தோடு அரங்கேற்றி
ஒரு அங்குல நீளத்தில்
இரு நேந்திரத்தை இதழோடு குடியேற்றி
பாய்ந்தோடும் பம்பையின்
நிதானத்தோடு வரும்
சேர தேசத்து தென்றல்கள்
தமிழகம் பக்கம்
அ(டை )ழகு மழை பொழிந்தது
இன்று இனிதாய்
* - கேரளத்து பூக் கோலம் ; ** - கேரளத்து பதார்த்தம்
No comments:
Post a Comment