கல்வி!
வள்ளுவம் தாண்டி இச்சிறுவன்
புதிதாய் எதுவும்
சொல்வதற்கு இல்லை
கற்றலும்
கசடறக் கற்றலும்
மட்டும் முக்கியமில்லை தோழா!
நிற்கவும் கற்றதிற்குத் தக...
கழுத்து நெரிக்கும் கல்வி
அதை கழுதைகளாய் சுமந்த
காலம் மாறி
"PDF"யாய் ஒளிக் கற்றையாய்
CDகுள்ளே கல்வி சிதையை
சிறைவைத்த
ராவணர்கள் நாம்
திறந்த நொடி
சீறி வரும் இட்லிசட்டி
ஆவி போல
தோல் அறி பட்டதும்
உலகம் காண வரும்
ரத்தம் போல
தயாராய் இரு.
வாய்ப்பு ஒரு நெருப்பைப்போல
சரியாக கையாண்டால்
குளிர் காயலாம்
இல்லாவிடில் பறிபோகலாம்
கல்வி
சுவாசம் சேரும் oxygen போல
எங்கும் இருக்கும்
உனக்கு அனுபவம் கொடுக்கும்
எவனும் தவற விடுவதில்லை
சரியாய் சுவசிப்பதில்லை
இளமையில்
கல்வி தொலைக்கும் சோம்பல்,
புத்திசாலித்தனம்
சந்தனக் காட்டுக்குள்ளே
மூச்சை பிடித்துக் கொண்டு
சுவாசிக்க மாட்டேன் என்னும்
மடமையடா
கற்போம் கற்பிப்போம்!
//வாய்ப்பு ஒரு நெருப்பைப்போல
ReplyDeleteசரியாக கையாண்டால்
குளிர் காயலாம்
இல்லாவிடில் பறிபோகலாம்//
உண்மைதான் நன்பா
//வள்ளுவம் தாண்டி இச்சிறுவன்
புதிதாய் எதுவும்
சொல்வதற்கு இல்லை//
ஒன்றே முக்கால் அடியில் உலகை அழந்தவன் அல்லவா வள்ளுவன்!