Friday, September 9, 2011

அடிமையாகிறேன்


கண்ணீரை புன்னகை
சுடுகாட்டுக்குள் புதைத்து

நினைவு சிறைக்குள்
சுதந்திரமாய்

இல்லாத ஊருக்கு
எட்டாத திசையில்
தொலை தூர பயணம்

புரியாத மொழியில்
எழுதி கொடுத்த கணக்கிற்கு
தீர்வு தேடும் மாணவன் போல

தண்ணீர் தீர்க்காத
தாகம் உணர்ந்தது போல

உயிர் போகாமல்
தினம் மரணிப்பது போல

மரண வலி என்றுத்
தெரிந்தும் மருந்தில்லா
உன் நினைவிற்கு அடிமையாகிறேன்
(For last 5 years)

1 comment:

  1. அழகான கவிதை வரிகள்.பெண்களும் காதலும் முரன்பாட்டு மூட்டைகள் தான். 

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்