Tuesday, September 27, 2011

இந்தியா - மாறாத நிறங்கள்


தூக்கத்தில் நிரப்பிய 
மழலையின்
வீட்டுப் பாட நோட்டுப் போல
பொத்தாம் பொதுவாய் ஒரு சாலை 

சுதந்திர தினமேன்றால் 
விடுமுறை மிட்டாய் 
என்பதை மட்டும் மறக்காமல்
மற்றதை மறந்த 

எட்டனாக்காய் 
வெயிலில் காயும் 
ஏழை வியாபாரியிடமும்
கூட்டத்தில் திணறும் 
நடத்துனனிடம் 
பெட்ரோல் விலையில்  நசுங்கும் 
பகிர்வு ஆட்டோக்காரணிடமும் 
சண்டைபோட்டு பிறான் 
உழலுக்காய் வரியாக்கும் 
அறியாமை 

தன்னால் உணர்வதே 
வலி என்றும் பசி என்றும் 
பிறான் வழியால் பசியால் 
துடிப்பதை வேடிக்கையாக்கும் 
சுயநலம் 

பசியால் குழந்தை 
துவண்டு போகித் துடிக்கும்
மாலையில் குழந்தை 
வீடு சேர்ந்தது தெரியாமல் 
கழுத்தோடு கத்தி
வைத்து ஒருவன் நெரிக்கும் வரை
வீட்டின் நடமாட்டம் உனாராமல் 
(ஒற்றுமையாய் 
இருக்கும் உறவுகளை பிரிக்கும்)
தொடர்கதையில் முழ்கும் 
(50% ஆண்கள் 50% பெண்கள் )
மாக்கள் 

அன்பும் பண்பும் அளவான அழகும் 
தேட வேண்டிய திருமண வேட்டைகள்
விலை பெறா தங்கம் 
ஏமாற்றும் வியாபாரம் ஆக்கிய
ஆசை 

இப்படி மூவண்ணத்தின்
கரையை கோடி கோடி 
(மாற்றக் கூடிய)
மாற்ற முயலா 
அடையாளக் கரைகள்





No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்