நீ, சயனைடு நதி
நான் உன்னில் வாழப்பழகிய மீன்.
நம் காதல் மரணம் வெல்லும்.
நீ, வற்றா நதி
நான், தீரா தாகம்.
நம் முத்தம் முற்றாமல் நீளும்
நீ, நிஜம்
நான் கனா.
நான் நீயாகிறேன். காதல் நாமாகும்.
நீ, இனி நான்.
நான் எப்போதோ நீ.
இன்னும் இதழ்கள் நான்கு எதற்கு?
சில ஜோடிகள் சொர்க்கத்தில் உருவாகின்றன
சில ஜோடிகள் சொர்கத்தை உருவாக்குகிறார்கள்
நாம் சொர்கத்தை உருவாக்கும் ஜோடி
நான் எழுதுனதெல்லாம் வயசுக் கோளாறு இல்ல, இது தான் உண்மையான, அக்மார்க் வயசுக் கோளாறு ::P நல்லா இருக்கு ::)
ReplyDelete