பால் குடிக்கையில் பிள்ளை
மார் கடிக்கும் தாயின்பம்
உறங்கிய தந்தை முதுகில்
குதித்தாடும் பிள்ளை பாதம்
தந்தை முத்தம் நடுவே
குறும்பு செய்யும் மீசை
கொட்டும் மழை நடுவே
சுண்டி இழுக்கும் ஐஸ் வண்டி மணியோசை
மறந்து போன கனவை
மீண்டும் பார்த்துவிடும் ஆசை
கட்டெறும்பு முத்தமிட்ட கண் இமை
சொல்லி விளக்க முடியாத சயனைடு சுவை…
காதலித்ததுண்டா?
காதல் வலி கொண்டதுண்டா?
எல்லோரும் ரசிக்கின்ற வலி
காதல்…நானும்…
No comments:
Post a Comment